கன்னியாகுமரியில் ஒரே போன் காலில் ஒரு கோடி.. ஆடிப்போன மத்திய அரசு ஊழியர்கள்.. சிக்கிய சில்வண்டுகள்
கன்னியாகுமரி: ஏ.ஐ.தொழில்நுட்ப வளர்ச்சியால், வரும் காலத்தில் கண்ணால் காண்பதும் பொய், காதால் கேட்பதும் பொய் என்பது முழுமையாக உண்மையாகிவிட்டது. யாரை வேண்டுமானாலும் தவறாக சித்தரிக்க முடியும். டீப் பேக் வீடியோ மூலம் யார் பேசுவது போலும் ஏமாற்றுகிறார்கள். அப்படித்தான் போலீஸ் அதிகாரி போல் பேசி கன்னியாகுமரியை சேர்ந்த ஓய்வுபெற்ற மத்திய அரசு ஊழியர் மற்றும் ஓய்வுபெற்ற பேராசிரியரிடம் ரூ.96.54 லட்சம் மோசடி செய்துள்ளனர். இதில் 3 பேரை போலீசார் கைது செய்தனர்.
ஏஐ தொழில் நுட்பத்தின் வளர்ச்சி இந்த உலகின் அனைத்து தொழில் நுட்பங்களும் வேறு மாதிரி மாறுகிறது. எப்படி கம்ப்யூட்டர் வந்ததோ, எப்படி செல்போன் வந்ததோ, எப்படி ஸ்மார்ட் போன் வந்ததோ, அதன் அடுத்த தலைமுறையாக அனைத்து தொழில் நுட்பங்களையும் தானே செய்யும் ஒரு எந்திரமாக ஏஐ மாறிவிட்டது. எப்படி கம்ப்யூட்டர் தெரியாதவர்கள், தொழில் நுட்ப வளர்ச்சிகளை ஏற்காதவர்களை பூமர் அங்கிள் என்கிறார்களோ, அதுபோல் ஏஐ தெரியாதவர்களை இனி பூமர் அங்கிள் என்று சொல்வார்கள்..

ஏனெனில் அந்த அளவிற்கு ஏஐ தொழில்நுட்பத்தை அனைவரும் அறிய வேண்டியது அவசியமாகி விட்டது. அதேபோல் எது ஏஐ என்று தெரியாத அளவிற்கு தொழில்நுட்பங்கள் வளர்ந்துவிட்டது. வீடியோ மற்றும் புகைப்படம், குரல் பதிவு என எதையும் உண்மை என்று நம்பும் வகையில் இல்லை.. அந்த அளவிற்கு ஏஐ தொழில் நுட்பம் அபரிமிதமான வளர்ச்சியை நோக்கி சென்று கொண்டிருக்கிறது.
ஏனெனில் இப்போது உள்ள தொழில்நுட்பத்தை இல்லாத ஒருவர் இருப்பது போன்றும், ஒருவர் குரலில் மற்றொருவர் பேசுவது போன்றும் மிக சுலபமாக செய்கிறார்கள். இதை வைத்து மோசடிகள் நடப்பது அதிகரித்து வருகிறது. இதில் மத்திய அரசு மற்றும் மாநில அரசில் பணியாற்றிய ஓய்வு பெற்ற ஊழியர்கள் அதிகம் ஏமாறுகிறார்கள்.
கன்னியாகுமரி மாவட்டத்தைச் சேர்ந்த நாகர்கோவிலை சேர்ந்த ஓய்வுபெற்ற மத்திய அரசு ஊழியரிடம் ஏ.ஐ. தொழில் நுட்பத்தை பயன்படுத்தி ரூ.70 லட்சம் மோசடி செய்யப்பட்டிருக்கிறது. சம்பவம் நடந்த அன்று, செல்போன் எண்ணுக்கு வீடியோ காலில் ஒரு அழைப்பு வந்தது. அதில் மறுமுனையில் பேசியவர் போலீஸ் அதிகாரி உடையில் இருந்திருக்கிறார்.
தான் மும்பை போலீஸ் அதிகாரி என்றும், நீங்கள் சட்டவிரோத பண பரிமாற்றத்தில் ஈடுபட்டதால் தற்போது உங்களை வீட்டு காவலில் (டிஜிட்டல் கைது) வைத்திருப்பதாக போலியான கைது ஆணையை காட்டி மிரட்டியிருக்கிறார். ஆனால் இதுபோன்ற டிஜிட்டல் கைதுகளை உண்மை என்று நம்ப வேண்டாம் என்று மத்திய அரசு அறிவித்த போதும் சிலர் ஏமாந்து வருகிறார்கள்.
போலியான கைது ஆணையை காட்டி மிரட்டியதால், அவர் உண்மை என்று நம்பியதோடு, 'இப்போது நான் என்ன செய்ய வேண்டும்?' என்று பதற்றத்துடன் ஓய்வு பெற்ற மத்திய அரசு அதிகாரி கேட்டார். இதை தனக்கு சாதகமாக பயன்படுத்திக் கொண்ட மர்ம ஆசாமி உங்களிடம் ரிசர்வ் வங்கி அதிகாரி பேசுவார் என்று கூறி அழைப்பை துண்டித்திருக்கிறார்.
அடுத்த சில நிமிடங்களில் ரிசர்வ் வங்கி அதிகாரி பேசுவதாக மற்றொரு மர்ம ஆசாமி பேசியுள்ளார். உடனடியாக வங்கி கணக்கில் இருக்கும் பணத்தை அனுப்பும்படியும், அதை சரிபார்த்துவிட்டு திருப்பி அனுப்புவதாகவும் பதற்றம் ஏற்படும் வகையில் பேசியுள்ளார். ஏற்கனவே அச்சத்தில் இருந்த அவர் உடனே தனது வங்கி கணக்கில் இருந்த ரூ.70 லட்சத்தை மர்ம ஆசாமி கொடுத்த வங்கி கணக்குக்கு அனுப்பியிருக்கிறார.. ஆனால் பணம் அனுப்பிய சிறிது நேரத்தில் மர்ம ஆசாமி வீடியோ அழைப்பை துண்டித்துவிட்டார். அந்த எண்ணை மீண்டும் தொடர்பு கொண்டபோது அழைப்பு போகவில்லை. அப்போது தான் ஏமாற்றி மோசடி செய்துவிட்டார்கள் என்பது அவருக்கு தெரியவந்தது.
இதே போல ஓய்வுபெற்ற பேராசிரியரை மிரட்டி ரூ.26 லட்சத்து 54 ஆயிரத்து 47-ஐ மர்ம ஆசாமிகள் பறித்திரக்கிறார்கள். இந்த 2 சம்பவங்கள் குறித்து நாகர்கோவிலில் உள்ள சைபர் கிரைம் போலீஸ் நிலையத்தில் புகார் அளிக்கப்பட்டது. அதன்பேரில் போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரித்தனர். அப்போது 2 பேரிடமும் மோசடி செய்தது 3 பேர் கொண்ட ஒரே கும்பல் என்பதும், அந்த கும்பல் ராஜஸ்தானில் பதுங்கி இருந்ததும் கண்டுபிடிக்கப்பட்டது.
இதைத் தொடர்ந்து கன்னியாகுமரி மாவட்ட எஸ்பி ஸ்டாலின் உத்தரவின்பேரில் சைபர் கிரைம் போலீசார் ராஜஸ்தான் மாநிலம் சென்று 3 பேரையும் கைது செய்தார்கள். பின்னர் அவர்களிடம் விசாரணை நடத்தியபோது அவர்கள், ராஜஸ்தானை சேர்ந்த கிஷன் தாஸ் (வயது 19), ஜிவெட் குமார் (28) மற்றும் சுரேஷ்குமார் (31) என்பதும் தொியவந்தது. அவர்களை நாகர்கோவில் அழைத்து வந்து கோர்ட்டில் ஆஜர்படுத்தி சிறையில் அடைத்தனர். கைதான 3 பேரையும் காவலில் எடுத்து விசாரணை நடத்த போலீசார் முடிவு செய்துள்ளனர்.
-
"தங்கம் விலை டமால்.. ரூ.12,500 வரை கூட போகலாம்.." ஆனந்த் சீனிவாசன் மெகா இன்ப செய்தி -
திமுகவை விட 2% வாக்கு அதிகம்.. 3ம் இடத்திற்கு செல்கிறது அதிமுக.. புதிய டேட்டாவுடன் வந்த ஆதவ் அர்ஜுனா -
சிறகடிக்க ஆசை: முத்து மீனா வாழ்க்கையில் நடந்த நல்ல விஷயம்.. சந்தோஷத்தில் விஜயா! ரோகிணி செய்த செயல் -
தங்கம்.. 15 ஆண்டுகளில் இல்லாத மிகப்பெரிய சரிவு! 2011 செப்டம்பர் 'கிளைமாக்ஸ்' மீண்டும் நடக்கிறதா? -
"தயவு செய்து தண்ணீரை கொடுங்க.." இந்தியாவிடம் கெஞ்சும் பாகிஸ்தான்.. பஞ்சம் மோசமாக தாக்கும் போல! -
"பாகிஸ்தானுக்கு தண்ணீர் கொடுக்க முடியாது.." சர்வதேச அரங்கில் லெப்ட் அண்ட் ரைட் வாங்கிய இந்தியா! -
தேனியில் 25 சவரன் அடமான தங்க நகையை மீட்க போன பால் வியாபாரி.. கொத்தனார் வேற.. மக்களுக்கு பெரிய பாடம் -
மோடியின் பணமதிப்பிழப்பால் மாடியிலிருந்து விழுந்து செத்தாரா பாகிஸ்தானின் ஜாவேத் கானானி? துரந்தர் 2! -
ரேஷன் அட்டைதாரர்களுக்கு மெகா ஆஃபர்: ஒரே மாதத்தில் 3 மாத ரேஷன்! மத்திய அரசின் சர்ப்ரைஸ் பின்னணி என்ன -
முதல் விக்கெட்.. திமுக கூட்டணியில் விலகிய தமிழக வாழ்வுரிமை கட்சி.. அறிவித்தார் வேல்முருகன் -
இதுக்கு மேல கடன் வாங்க முடியாது.. கஜானா காலி.. தத்தளிக்கும் தமிழக வெற்றிக் கழகம்.. அப்போ விஜய்? -
விசிக + காங்கிரஸ்.. திமுகவையும் விட்டு வைக்காத இ.கம்யூனிஸ்ட்.. எந்தெந்த தொகுதிகளை கேட்குது பாருங்க!












Click it and Unblock the Notifications