ஆதார் இல்லை.. முதியோர் உதவி கேட்டு 104 வயதில் அலைந்த மூதாட்டி.. உடனே கலெக்டர் போட்ட ஆர்டர்
கன்னியாகுமரி: நாகர்கோவில் தளவாய்புரம் பகுதியை சேர்ந்த 104 வயதாகும் சரஸ்வதி என்பவர், மாவட்ட ஆட்சியர் அலுவலகத்திற்கு உதவித்தொகை கேட்டு பல முறை விண்ணப்பிக்க வந்துள்ளார். அப்படித்தான் விடுமுறை தினமான ஞாயிறு அன்று வந்துள்ளார். இதுபற்றி தகவல் அறிந்த கன்னியாகுமரி மாவட்ட கலெக்டர் 104 வயது மூதாட்டிக்கு உதவித்தொகை வழங்க நடவடிக்கை எடுத்தார். அத்துடன் ஆதார் அட்டை அளிக்கவும் உத்தரவிட்டார்.
தமிழ்நாட்டில் உள்ள எல்லா மாவட்ட ஆட்சியர் அலுவலகங்களிலும் திங்கள் கிழமைகளில் மக்கள் கூட்டம் அலைமோதும். அதில் முதியோர்கள் பலர் உதவி தொகை கேட்டுத்தான் விண்ணப்பிப்பார்கள். முதியோர் உதவி தொகையை பொறுத்தவரை அளவுகோல்கள் உள்ளன. தமிழ்நாட்டில் வயது முதிர்வின் காரணமாக உழைத்து வருவாய் ஈட்டி வாழ முடியாமலும், உறவினர்களின் ஆதரவற்ற நிலையிலும், உணவுக்கு வழியில்லாது துயரப்படும் முதியோர்களின் நலனைக் கருத்திற்கொண்டு, அவர்களுக்கு உதவிடும் நோக்கில் மாதம் 1200 உதவி தொகை வழங்கப்படுகிறது.

கணவன் அல்லது மனைவி போன்ற மிக நெருங்கிய உறவுகள் இல்லாமல் இருப்பவர்கள், மிக நெருங்கிய உறவுகள் அல்லது பிள்ளைகள் இருந்தும் அவர்கள் ஆதரவு கிடைக்காமல் துன்பப்படும் அறுபது வயதுக்கு மேற்பட்ட அனைவரும் ஆதரவற்ற முதியோர் ஆவார். அவர்களுக்கு அரசின் சார்பில் உதவி தொகை வழங்கப்படுகிறது.
முதியோர் உதவி தொகையை பொறுத்தவரை, தமிழ்நாடு அரசால் அரசு பதிவு பெற்ற மருத்துவர்கள் வயதுச் சான்றிதழ்கள் வழங்கும் தகுதியுடையவர்களாக அறிவிக்கப்பட்டுள்ளதால் அவர்களிடம் படிவத்தில் வயதுச் சான்றிதழ் பெறப்பட வேண்டும். ஆனால் தற்போது குடும்ப அட்டை நகல் மற்றும் வாக்காளர் அடையாள அட்டை போன்ற இரு ஆவணங்களையும் அடிப்படையாக கொண்டு வயது சான்றிதழ் நிரூபணம் தேவையாகும். எல்லாம் சரி என்றால், முதியோர் உதவி தொகை விண்ணப்பங்கள் தாசில்தார் அலுவலகத்திலிருந்து கிராம நிர்வாக அலுவலருக்கு அனுப்பப்பட்டு விண்ணப்பத்தில் தெரிவிக்கப்பட்டுள்ள தகவல்கள் உண்மைதானா என்று ஆய்வு செய்யப்படும். பின்பு அவர் பரிந்துரை செய்வார்.
தொடர்ந்து கிராம நிர்வாக அலுவலரிடமிருந்து பெறப்பட்ட ஆய்விற்குப் பின் உள்வட்ட வருவாய் ஆய்வாளரால் விசாரணை நடத்தப்பட்டு அதன்பிறகு வருவாய் ஆய்வாளரால் உதவி தொகை வழங்க ஆணை பிறப்பிக்கப்படும். அதன்பிறகு மாதம்மாதம் அவர்களின் வங்கி கணக்கிற்கு 1200 ரூபாய் வழங்கப்படும். பல்வேறு சமூக பாதுகாப்பு திட்ட ஓய்வூதியங்களை 30.24 லட்சம் பேர் பெறுகிறார்கள். எனினும் பல ஆயிரம் பேர் இன்னமும் முதியோர் உதவி கிடைக்காமல் அவதிப்பட்டு வருகிறார்கள். அப்படித்தான் நாகர்கோவில் தளவாய்புரம் பகுதியை சேர்ந்தவர் சரஸ்வதி (வயது 104) என்பவர் அவதிப்பட்டார். இவர் கடந்த ஞாயிறு அன்று நாகர்கோவிலில் உள்ள மாவட்ட கலெக்டர் அலுவலகத்திற்கு தனது மகனுடன் வந்தார். அவர் 'முதியோர் உதவித்தொகை விண்ணப்பித்து பல ஆண்டுகள் ஆகியும் இதுவரை உதவித்தொகை கிடைக்கவில்லை. எனவே நடவடிக்கை எடுக்கக்கோரி கலெக்டரிடம் மனு கொடுக்க வந்தேன்' என்று கூறினார்.
அதற்கு போலீசார், 'இன்று (ஞாயிறு) விடுமுறை தினம் என்பதால் மனுவை நாளை அளியுங்கள்' என்றனர். இதை தொடர்ந்து நேற்று கன்னியாகுமரி கலெக்டர் அலுவலகத்துக்கு வந்த 104 வயது மூதாட்டிக்கு கன்னியாகுமரி கலெக்டர் அழகு மீனா உத்தரவின் பேரில் உதவித்தொகை வழங்க நடவடிக்கை எடுக்கப்பட்டது. அப்போது மூதாட்டிக்கு ஆதார் அட்டை இல்லை என்பது தெரியவந்தது. தொடர்ந்து மூதாட்டிக்கு ஆதார் கார்டு எடுக்கும் பணி அதிகாரிகள் உதவியுடன் நடந்தது.
-
லால்குடியில் களமிறங்கிய ஆதவ் அர்ஜுனா மாமியார்.. அதிமுகவில் இணைந்த 1 மாதத்தில் சீட் கொடுத்த எடப்பாடி -
ரசிகர்கள் எதிர்பார்த்த வீடியோவை வெளியிட்ட திரிஷா.. ஒரு வழியாக எல்லோரும் கேட்டது நடந்துடுச்சு.. குவியும் பாராட்டு -
ஓசூரில் சத்தமின்றி புரட்சி.. ரெடியாகும் தமிழ்நாட்டின் 6-வது பிரம்மாண்ட 'டைடல் பார்க்'.. தரமான வேகம் -
பாதாளத்தில் பாய்ந்த அமெரிக்கா! டிரம்ப் கொஞ்சம் கூட எதிர்பார்க்காத சம்பவம்.. மொத்தமா போச்சு! -
வாழ்க்கை துணை கிடைச்சிடுச்சு.. இவர்தான் ஜென்டில்மேன்! சர்ச்சைக்கு மத்தியில் திரிஷாவின் லேட்டஸ்ட் பதிவு -
தமிழ் புத்தாண்டு பலன்: குருவின் அருளால் மகர ராசிக்கு அடிக்கும் ஜாக்பாட்.. பிரகாசமாகப் போறீங்க -
இடி, மின்னலுடன் மழை கொட்டப்போகுது.. அடிக்கும் வெயிலுக்கு ஜில் அப்டேட் கொடுத்த வானிலை மையம்! -
ஸ்டாலின் களமிறக்கும் "மிசைல்" விஐபி! அதிமுக எதிர்பார்க்கல! விஸ்வநாதனுக்கு செக்? திமுக சர்ப்ரைஸ் மூவ் -
உங்கள் வீட்டு பீரோவில் 62 சவரன் தங்கம் இருக்கா? நகைக்கு இந்த ஒரு கணக்கு இல்லனா ஐடி நோட்டீஸ் வரலாம் -
பெங்களூர் மாணவியிடம் கிட்ட நெருங்கிய ஆசிரியர்! அந்த பயங்கர காட்சி.. உடனே செருப்பை கழட்டி! என்னாச்சு -
எடப்பாடி பழனிசாமி வைத்த பொறி.. சிக்கிய அண்ணாமலை.. சல்லி சல்லியாக உடைந்த பர்னிச்சர் -
செங்கோட்டையனுக்கு பதில் கோபியில் பிரபு! 127 வேட்பாளர்களை அறிவித்தார் எடப்பாடி பழனிசாமி












Click it and Unblock the Notifications