அரசு பஸ்ஸை தள்ளிவிட்ட காலேஜ் மாணவிகள்.. டிரைவர், கண்டக்டருக்கு மறக்க முடியாத பரிசு.. பறந்து வந்த ஆர்டர்
கன்னியாகுமரி : நாகர்கோவிலில் கல்லூரி மாணவிகள் பழுதாகி நின்ற பேருந்தை தள்ளிய வீடியோ வைரலான நிலையில் அரசு பேருந்து ஓட்டுநர், நடத்துனர் உள்ளிட்ட 4 பேரை தற்காலிகமாக பணியிடை நீக்கம் செய்து பொது மேலாளர் நடவடிக்கை எடுத்துள்ளார்.
கன்னியாகுமரி மாவட்டத்தை பொறுத்தவரை, நாகர்கோவில், கன்னியாகுமரி, திங்கள் நகர், திருவட்டார், படந்தாலுமூடு, மார்த்தாண்டம் உள்பட 12 இடங்களில் அரசு பணிமனைகள் உள்ளன. இந்த பணிமனைகளில் இருந்து கிராம பகுதிகளுக்குத் தேவையான பேருந்துகள் இயக்கப்படுகிறது.

அரசு பேருந்துகளை பொறுத்தவரை சாதாரண மழை பெய்தால் கூட குடை பிடித்து பயணம் செய்ய வேண்டிய அளவில் தான் இருப்பதாக குற்றச்சாட்டுகள் உள்ளன. அதேபோல் பேருந்தில் பயணம் செய்து கொண்டிருக்கும் பொழுது பேருந்து இருக்கை உடைந்து விழுவதும், பழுதாகுவது நடக்கிறது.
பல அரசு டவுன் பஸ்கள் பெரும்பாலும் பழுதான நிலையில் இருப்பதாக புகார்கள் உள்ளது. அதை மெய்பிக்கும் வகையில் அவ்வப்போது பேருந்துகள் பழுதாகி நடுரோட்டில் நிற்பதும், அதனை மாணவர்கள் அல்லது பொதுமக்கள் தள்ளுவதும் நடக்கிறது.
செல்ப் மோட்டர் இல்லாமல் பேருந்தை தள்ளி ஸ்டார்ட் செய்வது அடிக்கடி நடைபெறுவதாக பொதுமக்கள் நேரடியாக குற்றம்சாட்டி வருகின்றனர். இப்படி அடிக்கடி நடப்பதால், காலை, மாலை வேளைகளில் பள்ளி, கல்லூரி மாணவ, மாணவிகள் மற்றும் வேலைகளுக்கு செல்லும் பயணிகள் பெரிதும் பாதிக்கப்படுகிறார்கள்.
அப்படித்தான் அண்மையில் நாகர்கோவிலில் பழுதாகி நின்ற அரசுப் பேருந்தை மாணவிகள் தள்ளிச் சென்ற சம்பவம் நடந்தது. நாகர்கோவிலில் இருந்து கடந்த வியாழக்கிழமை தனியார் கல்லூரி மாணவிகளுடன் புறப்பட்ட அரசு பேருந்து, பழைய தாலுகா அலுவலகம் அருகே பழுதாகி நின்றது.
இதையடுத்து மாணவிகள் சிறிது தூரம் தள்ளிய நிலையில் பேருந்து இயங்கத் தொடங்கியது. இந்த வீடியோ சமூக வலைதளங்களில் வேகமாக பரவியது. இதையடுத்து பழுதாகி நின்ற அரசு பேருந்தின் ஓட்டுநர், நடத்துனர் உள்ளிட்ட 4 பேர் தற்காலிகமாக பணியிடை நீக்கம் செய்து பொது மேலாளர் உத்தரவிட்டுள்ளார்.
-
விவசாயக் கடன் தள்ளுபடி.. பொய் சொல்லி ஏமாற்ற மாட்டேன்! விவசாயிகளே கவலைப்படாதீங்க.. விஜய் உத்தரவாதம் -
வளைகுடாவில் இந்தியாவிற்கு கிடைத்தது மாற்றுப்பாதை.. ஓமனால் பெரிய குட்நியூஸ் -
கட்டப்பா கூட ஒரு டைம்தான் குத்துனாரு.. இப்படி தினம் தினம் பண்ணுறீங்களே! கோபத்தின் உச்சியில் ஸ்டாலின் -
DMART முதலாளிக்கு இப்படியொரு பிஸ்னஸ் இருக்கா.. ஒரு வீட்டுக்கு ரூ.27.5 லட்சம் .. ஆடிப்போன மும்பை மக்கள்! -
தமிழக அமைச்சரவையில் சீனியாரிட்டி லிஸ்ட்.. பின் தள்ளப்பட்ட செங்கோட்டையன்.. வன்னி அரசுக்கு எந்த இடம் -
உதயசூரியனில் போட்டியிட்ட 2 மதிமுக எம்எல்ஏக்கள் ராஜினாமா செய்ய முடிவு? திமுகவுக்கு பெருத்த ஷாக்! -
MDMK: எம்எல்ஏக்கள் ராஜினாமா இல்லை.. புது வியூகம் எடுக்கும் மதிமுக? திமுகவுக்கு கல்தா கன்பார்ம்? -
ஆனானப்பட்ட அமெரிக்காவுக்கே இந்த நிலைமையா..? அப்போ இந்தியா? -
அண்ணாமலை ஒரு பிராண்டு.. விட்றாதீங்க! லெட்டரைப் பார்த்ததும் பதறிப் போன டெல்லி! குவியும் ஆஃபர்கள்! -
கோட்டைச்சாமி.. எந்திரி.. இப்போ நீதான் முதலமைச்சர்.. இன்னமும் பிரச்சாரமா? விஜய்யை கிண்டலடித்த திமுக -
வாசலுக்கு வந்த புகார் பெட்டி.. இனி தலைமை செயலகத்தில் எல்லோருக்கும் அனுமதி இல்லை.. தவெக அரசு கறார் -
முதல்வர் விஜய்யே நினைத்தாலும் பரந்தூர் விமான நிலையத்தை ரத்து செய்வது மிக கடினம்.. ஏன் தெரியுமா?












Click it and Unblock the Notifications