லோன் கேட்ட பெண் பிரமுகரை.. லாட்ஜுக்கு வான்னு கூப்பிட்ட கவுன்சிலர்.. வளைத்து பிடித்து தூக்கிய போலீஸ்

பெண் பிரமுகரை ஏமாற்றிய கவுன்சிலரிடம் விசாரணை நடந்து வருகிறது

Subscribe to Oneindia Tamil

கன்னியாகுமரி: லோன் வாங்கி தரேன்னு சொல்லி.. பெண்ணை லாட்ஜுக்கு கூப்பிட்டுள்ளார் ஒருவர்.. லோன் வேண்டும் என்று கேட்டது ஒரு அரசியல் பெண் பிரமுகர்.. அவரை லாட்ஜூக்கு கூப்பிட்டது ஒரு கவுன்சிலர்.. கோழி அமுக்கிற மாதிரி போலீசார் இவரை அமுக்கி விசாரணை நடத்தி வருகிறார்கள்.

தக்கலையில் சில நாட்களுக்கு முன்பு ஒரு அரசியல் கட்சி நிகழ்ச்சி நடந்தது. இதில் அக்கட்சியின் நிர்வாகிகள், உள்ளாட்சி பிரதிநிதிகள், உள்ளூர் பிரமுகர்கள் என பலரும் கலந்து கொண்டனர். இவர்களை தவிர கட்சி தொண்டர்கள், பெண் பிரமுகர்களும் வந்திருந்தனர்.

councilor cheated political woman near kanniyakumari

நிகழ்ச்சி முடிந்த பின்பு ஒருசில நிர்வாகிகள் அங்கே பேசி கொண்டிருந்தனர்.. அதில் ஒரு பெண் பிரமுகர், அப்பகுதி கவுன்சிலர் ஒருவரை சந்தித்து பேசினார்.

தன் குடும்ப நிலையை அந்த பெண் எடுத்து சொன்னார்.. எல்லாவற்றையும் அக்கறையாக கேட்டுக் கொண்டே வந்த கவுன்சிலர், தனக்கு தெரிந்த ஒரு குழுவில் லோன் வாங்கி தர்றேன்.. கவலைப்பட வேண்டாம் என்றார். அத்துடன், அப்படி அந்த லோன் வாங்க வேண்டும் என்றால், திருவட்டாரில் நடக்கும் அந்த குழு கூட்டத்தில் பங்கேற்று, கையெழுத்திட்டும் போட்டுவிட்டால் போதும்.. பணம் தானாக கிடைத்துவிடும் என்றார்.

பணம் கிடைக்கும் பெண் பிரமுகரும் திருவட்டார் செல்ல தயாரானார்.. ஒரு ஆட்டோவில் பெண் பிரமுகர், கவுன்சிலர் திருவட்டார் சென்றனர்.. குலசேகரம் நோக்கி ஆட்டோ செல்லவும், பதட்டமடைந்த அந்த பெண், ஆட்டோ எங்கே போகுது? ஏன் திருவட்டார் போகாமல் குலசேகரம் போகிறது என்றார்.. உடனே அந்த கவுன்சிலர், குழு கூட்டத்தை திடீரென மாற்றி விட்டனர். நாம இப்போ திற்பரப்பு போகிறோம்" என்றார்.

நேராக ஆட்டோ திற்பரப்பு அருவி அருகே உள்ள ஒரு லாட்ஜில் போய் நின்றது.. பெண் பிரமுகரை லாட்ஜில்தான் கூட்டம் என்று சொல்லி உள்ளே அழைத்தார் கவுன்சிலர்.. உள்ளே போனதும்தான் விஷயம் புரிந்தது.. கவுன்சிலர் வேறு விஷயத்துக்கு அடிபோடுவதை அறிந்த பெண் பிரமுகர், லாட்ஜில் இருந்து தப்பி வெளியே ஓடி வந்து, ஒரு பஸ் பிடித்து தக்கலைக்கு வந்து சேர்ந்தார்.

Recommended Video

    என் பொண்டாட்டிகிட்டயாருடா அசிங்கமா பேசினது.. வெட்டாமல் போ மாட்டேன்அரிவாளுடன் பைனான்ஸ் நிறுவனத்திற்குள் நுழைந்த நபர் - வீடியோ

    நடந்த விஷயத்தை கணவனிடம் சொல்லவும், அவர் தக்கலை டிஎஸ்பி ராமச்சந்திரனிடமும் சென்று புகார் தந்தார். சம்பவம் குறித்து சம்பந்தப்பட்ட கவுன்சிலரை வரவழைத்து விசாரணை நடத்தப்பட்டு வருகிறது.. இது தக்கலையில் மிகப்பெரிய அதிர்ச்சியும் பரபரப்பையும் ஏற்படுத்தியது.

    Notifications
    Settings
    Clear Notifications
    Notifications
    Use the toggle to switch on notifications
    • Block for 8 hours
    • Block for 12 hours
    • Block for 24 hours
    • Don't block
    Gender
    Select your Gender
    • Male
    • Female
    • Others
    Age
    Select your Age Range
    • Under 18
    • 18 to 25
    • 26 to 35
    • 36 to 45
    • 45 to 55
    • 55+