"தாம்பத்யம்".. அதைவிடுங்க.. கிணற்றுக்குள் ஷீபாவின் "பிடிவாதம்".. திருதிருனு விழித்த கணவன்.. அதுக்கு?
கன்னியாகுமரி: கணவன்களிடம் மனைவிகள் சண்டை போட்டுவிட்டு, கோபித்துக் கொண்டு, அம்மா வீட்டுக்கு போவதெல்லாம் அந்த காலம்.. இப்போது, கணவனிடம் சண்டை போட்டால், ஸ்ட்ரைட்டாக ஓடிப்போய் கிணற்றில் குதித்துவிடுகிறார்கள்.. கொஞ்ச நாட்களாகவே இப்படித்தான் சம்பவங்கள் நடந்து கொண்டிருக்கின்றன.. அதுவும் நம் தமிழ்நாட்டில்..!!
2 நாட்களுக்கு முன்பு திருவண்ணாமலை மாவட்டம் கீழ்பென்னாத்தூர் அருகே வட்ராபுத்தூர் கிராமத்தில் அந்த சம்பவம் நடந்தது.. இங்கு வசித்து வருபவர் சின்னராசு.. 38 வயதாகிறது..
இவர் அருகிலுள்ள கானலாபாடியில் ஊராட்சி செயலாளராக பணிபுரிந்து வருகிறார்... இவரது மனைவி பெயர் சூர்யா .. 32 வயதாகிறது.. சோமாசிபாடியில் உள்ள அரசு ஆரம்ப சுகாதார நிலையத்தில் நர்சாக வேலை பார்த்து வந்தார்.

தம்பதி தகராறு: இவர்களுக்கு லக்ஷன் என்ற 4 வயது மகனும், உதயன் என்ற ஒரு வயது மகனும் இருக்கிறார்கள்.. சின்னராசுக்கு குடிப்பழக்கம் இருந்து வந்திருக்கிறது. தினமும் குடித்துவிட்டு வந்து, வீட்டில் தகராறு செய்து வந்ததாகவும் தெரிகிறது.. இப்படித்தான், சம்பவத்தன்றும் தகராறு நடந்துள்ளது.. அதற்கு பிறகு ஒரு நிகழ்ச்சிக்கு சென்றுவிட்டு, கணவன் நடுராத்திரி 1 மணிக்கு வீடு திரும்பி உள்ளார். ஆனால், சூர்யாவை காணோம்.. குழந்தைகளையும் காணவில்லை.. இதனால், அங்குமிங்கும் தேடி அலைந்தார் சின்னராசு. சூர்யாவுக்கு போன் செய்துள்ளர்..
கிணற்றடியில் செல்போன்: ரிங் போய்கொண்டே இருந்தது.. ஆனால் சூர்யா எடுக்கவில்லை.. அதாவது, உச்சக்கட்ட விரக்தி அடைந்த சூர்யா, 2 குழந்தைகளையும் தூக்கிக் கொண்டு அங்கிருந்த ஏரிக்கரைக்கு சென்றிருக்கிறார்.. அங்குள்ள விவசாய கிணற்றில் முதலில் 2 மகன்களையும் வீசிவிட்டு அதற்குபிறகு, அதே கிணற்றில் குதித்துள்ளார்.. அப்போது செல்போன் கிணற்றடியில் கிடந்துள்ளது.. சின்னராசு போன் செய்து கொண்டேயிருக்கவும், அந்த ரிங் சத்தத்தை கேட்டு, அந்த பகுதியில் உள்ளவர்கள், தூக்கம் கலைந்து எழுந்து பார்த்துள்ளனர்.. சின்னராசுவுக்கும் தகவல் சொல்லியுள்ளனர்..

அதற்கு பிறகுதான், சின்னராசு ஓடிச்சென்று கிணற்றுக்குள் எட்டிப்பார்த்து, அதே கிணற்றில் குதித்து சூர்யாவையும், குழந்தைகளையும் தேடினார்.. ஆனால், அதற்குள் 3 பேருமே சடலங்களாகத்தான் கிடைத்தனர்.. இந்த சம்பவம் நடந்த அடுத்தநாளே, வடமாநிலத்தில் ஒரு சம்பவம் நடந்தது.. உடலுறவுக்கு மனைவியை அழைத்துள்ளார் குடிபோதையில் இருந்த கணவர்.. அந்த பெண் மறுக்கவும் அடித்து தாக்கி உள்ளார்.. இதனால் ஆத்திரமடைந்த பெண், ஓடிச்சென்று கிணற்றில் விழுந்துவிட்டார்..
உடலுறவுக்கு மறுப்பு: உடனே, கணவனும் பின்னாடியே அந்த கிணற்றில் குதித்து, மனைவியை மீட்டார்.. கிணற்றில் இருந்து 2 பேரும் வெளியே வந்தபிறகு, மறுபடியும் உடலுறவுக்கு அழைத்துள்ளார்.. அப்போது அந்த பெண் மறுக்கவும், கொடூரமாக தாக்கி கொன்றேவிட்டார். இதோ நம்ம கன்னியாகுமரி மாவட்டத்தில் ஒரு சம்பவம் நடந்துள்ளது.. இட்டகவேலி பகுதியை சேர்ந்தவர் புஷ்பராஜ்.. 35 வயதாகிறது.. இவர் ஒரு பிளம்பர்... மனைவி பெயர் ஷீபா.. 31 வயதாகிறது..
இவர்களுக்கு 2 குழந்தைகள் இருக்கிறார்கள்.. புஷ்பராஜ் தினமும் குடித்துவிட்டு வந்து, வீட்டில் ரகளை செய்து வந்திருக்கிறார்.. நேற்றுகூட குடித்துவிட்டு வீட்டுக்கு வந்திருக்கிறார்.. மனைவியிடம் வாக்குவாதம் செய்துள்ளார்.. இதனால் கோபமடைந்த ஷீபா, வீட்டு பக்கத்தில் இருக்கும் கிணற்றில் குதித்துவிட்டார்... ஆனால், அந்த கிணற்றில் முட்டியளவுக்கே தண்ணீர் இருந்ததால், அவர் நீரில் மூழ்கவில்லை. இருந்தாலும், முப்பது அடி ஆழக்கிணறு என்பதால், அதில் குதித்ததில் படுகாயம் ஏற்பட்டுள்ளது.. இதை பார்த்து அதிர்ச்சி அடைந்த புஷ்பராஜ், ஷீபாவை கிணற்றில் இருந்து மேலே வருமாறு அழைத்தார்.. ஆனால் ஷீபா, மறுத்துவிட்டார்..

பிடிவாதம் ஷீபா: குடியை நிரந்தரமாக கைவிட்டால்தான், வெளியே வருவேன் என்றும், அதுவரை, கிணற்றுக்குள்ளேயே அங்கேயே இருக்கப்போவதாகவும், தன்னை யாருமே மீட்கும் நடவடிக்கையில் இறங்க வேண்டும் என்றும் கறாராக சொன்னார். இதைக் கேட்டு புஷ்பராஜ், மறுபடியும் மனைவியை சமாதானப்படுத்தினார்.. ஆனாலும் ஷீபா பிடிவாதமாக இருந்தார்.. அதற்குள் இந்த அக்கம்பக்கத்தில் தெரிந்து, மொத்த பேரும் திரண்டு வந்துவிட்டனர்.
ஒரு பெரிய கயிறு எடுத்து வந்து, அதை கிணற்றுக்குள் வீசினார்கள்.. அதைப்பிடித்து மேலே ஏறிவரும்படி ஷீபாவிடம் சொன்னார்கள்.. அப்போதும் ஷீபா மறுத்துவிட்டார்.. தினமும் குடித்துவிட்டு வருவதால், கணவருடன் சேர்ந்து வாழ கொஞ்சமும் விருப்பமில்லை என்று திட்டவட்டமாக சொன்னார்.. இதனிடையே கிணற்றில் ஊறிக்கொண்டிருந்த தண்ணீர் மோட்டார் மூலம் வெளியேற்றப்பட்டது.. அதற்குள் தீயணைப்பு போலீசாரும் வந்துவிட்டனர்..
கதி என்ன: அவர்கள்தான், கிணற்றுக்குள் இறங்கி வலை மூலம் ஷீபாவை ஒருவழியாக மீட்டு மேலே கொண்டுவந்தனர்.. கடைசியாக, புஷ்பராஜிடமும் தினமும் குடிக்கக் கூடாது என்று அட்வைஸ் செய்துவிட்டு போனார்கள்.. ஆனால், புஷ்பராஜ் என்ன செய்ய போகிறாரோ தெரியவில்லை.. மேலே சொல்லப்பட்ட சம்பவங்கள் எல்லாமே இந்த ஒரு வாரத்தில் நடந்தவையாகும்.. அதேபோல, கிணற்றில் பெண்கள் குதித்து மாய்த்துக் கொள்ளும் நிலைமைக்கு சென்றுள்ளார்கள் என்றால், அதற்கெல்லாம் காரணம் மதுபோதைதான்.. இந்த குடிபோதை இன்னும் எத்தனை குடும்பங்களை நாசம் செய்ய போகுதோ????
-
கோவையில் வீடு புகுந்து இளைஞர்களை தாக்கிய சிசிடிவி காட்சி! அதிர்ச்சியில் உறைந்த மக்கள் -
கூட்டுறவு வங்கி நகைக்கடன் தள்ளுபடி: உங்கள் நகை எப்போது கைக்கு வரும்? முழு விவரம் -
விஜய்யிடம் காசு வாங்கிக்கொண்டு பெரம்பூரில் பாமக போட்டி.. காடுவெட்டி குருவின் மகள் பேச்சு -
ஒரு கிராம் தங்கம் வெறும் ரூ.181 தான்.. முட்டை விலையை விட குறைவு.. எந்த நாட்டில் தெரியுமா? பின்னணி -
பணிகள் கிட்டத்தட்ட ஓவர்.. இனி 4 வழி இல்லை.. சென்னையின் முக்கிய பகுதியில் மிகப்பெரிய 6 வழி சாலை -
அலர்ட்..! 10000 ரூபாய்க்கு மேல் பணம் அனுப்பினால் 'லாக்'.. ஆர்பிஐ கொண்டு வரும் புது ரூல்ஸ்! -
தங்கத்தை மிஞ்சப்போகும்.. பலரின் வீட்டிலேயே இருக்கும் ஒரு குட்டி உலோகம்.. அடிக்குது ஜாக்பாட்! -
தென்னிந்திய தர்காக்கள் மற்றும் பள்ளி வாசல்கள் சங்கம் அதிமுகவிற்கு ஆதரவு! -
கடலூரில் நாளை விஜய் பிரச்சாரத்தால் உதயநிதி ஸ்டாலின் பிரச்சாரத்திற்கு அனுமதி மறுப்பு.. நடந்தது என்ன? -
ஐடி ஊழியர்களுக்கு இன்ப அதிர்ச்சி கொடுத்த TCS.. மாச மாசம் பணம் சொளையா வரப்போகுது! -
சிறகடிக்க ஆசை: மீனாவிடம் முத்து மறைக்கும் உண்மை! விஜயா பற்றி அண்ணாமலைக்கு தெரிந்த பெரிய ரகசியம்! -
அமெரிக்காவை அலறவிட்ட பிரான்ஸ்! 129 டன் தங்கத்தை மீட்க "கோல்டன்" ஸ்கெட்ச்.. அப்போ இந்தியா பிளான் என்ன












Click it and Unblock the Notifications