Get Updates
Get notified of breaking news, exclusive insights, and must-see stories!

கண்ணை உறுத்திய "மோசமான ஆடை".. நைட் லேட்டா வந்த "பியூட்டிஷியன்".. ஆற்றங்கரையில் கணவரின் "டீல்".. ஹய்யோ

மோசமாக ஆடை அணிவது தொடர்பாக, மனைவியை அரிவாளால் வெட்டி கொன்றார் கணவர்

Subscribe to Oneindia Tamil

கன்னியாகுமரி: மனைவியின் நடவடிக்கைகள் பிடிக்காமல், கணவர் செய்த காரியத்தை பார்த்து குமரி மிரண்டுள்ளது.. தம்பதிக்குள் என்ன தகராறு நடந்தது? சம்பவத்தன்று என்ன நடந்தது? என்பது குறித்த தகவல்கள் வெளியாகி உள்ளன.

கன்னியாகுமரி மாவட்டம் தக்கலை அடுத்துள்ளது தச்சகோடு என்ற பகுதி.. இங்கு வசித்து வந்தவர் எபனேசர்.. 35 வயதாகிறது.. இவர் சொந்தமான டெம்போ வைத்து ஓட்டி வருகிறார். இவரது மனைவி ஜெப பிரின்ஷா.. 31 வயதாகிறது.

இருவரும் காதலித்து திருமணம் செய்து கொண்டவர்கள்.. இவர்களுக்கு ஜெப சோபன் 14, ஜெப ஆகாஷ் 13, என்று 2 மகன்கள் இருக்கிறார்கள்.

 பியூட்டிஷியன்

பியூட்டிஷியன்

ஜெப பிரின்ஷாவுக்கு திடீரென பியூட்டீஷியனாகும் ஆசை வந்துள்ளதால், திருவனந்தபுரத்தில் உள்ள தனியார் நிறுவனத்தில் பியூட்டிஷியன் படித்து வந்தார்... 3 மாதங்களுக்கு முன்புதான், இந்த வகுப்பில் போய் சேர்ந்தார்.. இது ஒரு வருட பயிற்சி வகுப்பாகும்... ஜெப பிரின்ஷாவின் அப்பா ஜெபசிங், தன்னுடைய மகளை நெய்யூர் ரயில்வே ஸ்டேஷனுக்கு அழைத்து சென்றுவிடுவார்.. அங்கிருந்து ஜெப பிரின்ஷா ரயிலில் திருவனந்தபுரம் செல்வார்.. பிறகு சாயங்காலம், கணவர் எபனேசர், ஸ்டேஷனில் இருந்து வீட்டுக்கு அழைத்து வருவார்... இப்படியே 3 மாதங்கள் சென்றன.. ஆனால், நாளடைவில் ஜெப பிரின்ஷாவின், உடைகள் அணிவதில் நிறைய மாற்றம் தெரிந்துள்ளது..

பியூட்டிஷியன்

பியூட்டிஷியன்

வழக்கத்துக்கு மாறாக, அலங்காரமும், ஆடைகளையும் அணிவதால், கணவர் எபனேசர் அதிர்ந்து போய் மனைவியை கண்டித்தார்.. இப்படியெல்லாம் மோசமாக ஆடைகளை அணிந்து, வெளியே செல்ல வேண்டாம், பியூட்டிஷியன் படிப்புக்கும் செல்ல வேண்டாம் என்று மனைவியை தடுத்துள்ளார்.. அதற்கு ஜெப பிரின்ஷா, இது ஒரு வருட படிப்புதான்.. அதை முடித்து விட்டால், சொந்தமாகவே பியூட்டி பார்லர் வைக்கலாம் என்று சொல்லி உள்ளார்.. இதுவே தம்பதிக்குள் வாக்குவாதமாகவும் வெடித்துள்ளது.. இந்நிலையில், சம்பவத்தன்று இரவு, வீட்டுக்கு திரும்பி வரும் வழியில் தம்பதிக்குள் தகராறு வெடித்துள்ளது.

 ஆற்றங்கரை

ஆற்றங்கரை

ஆத்திரத்தில் இருந்த எபனேசர், பைக்கை ஒரு ஓரமாக நிறுத்திவிட்டு, அதற்கு பிறகு அரிவாளை எடுத்து வந்து மனைவியை சரமாரியாக வெட்டிவிட்டு தப்பி ஓடினார்.. ஜெப பிரின்ஷா அங்கேயே ரத்த வெள்ளத்தில் உயிரிழந்தார்.. இந்நிலையில், மனைவியை எபினேசர் கொலை செய்தது எப்படி என்பது குறித்த தகவல் தற்போது வெளியாகி உள்ளது. ஜெப பிரின்ஷா அப்பா ஜெபசிங், மின் வாரிய ஊழியராக இருக்கிறார்... எபினேசரை விரும்பிதான் ஜெபபிரின்ஷா திருமணம் செய்துள்ளார்.. இவர்கள் காதலுக்கு வீட்டில் எதிர்ப்பு தெரிவித்திருக்கிறார்கள்.. அதனால் பெற்றோர் எதிர்ப்பையும் மீறி வீட்டைவிட்டு வெளியேறி சென்றே கல்யாணம் செய்துள்ளனர்..

 பியூட்டிபார்லர்

பியூட்டிபார்லர்

டெம்போ டிரைவரான எபினேசருக்கு, குடிப்பழக்கம் இருந்துள்ளது.. இதனால், பெரும்பாலான பணம், தண்ணி அடிப்பதற்கே போனது.. குடும்பமே வறுமையில் சிக்கி உள்ளது.. செல்லமாகவும், சொகுசாகவும் வளர்த்த தன்னுடைய மகள், காதலனை நம்பிச்சென்று இப்படி கஷ்டப்படுகிறாரே என்று, ஜெபசிங் கலங்கி உள்ளார்.. அதனால்தான், சொந்த காலில் மகள் நிற்க வேண்டும் என்று, பியூட்டிஷியன் கோர்ஸ் படிக்க சொல்லி உள்ளார்.. அவர்தான் பீஸ் கட்டி படிக்கவும் வைத்துள்ளார்.. பியூட்டிஷின் படித்துவந்ததுடன், திருவனந்தபுரம் பகுதியில் உள்ள ஒரு பியூட்டி பார்லரில், பார்ட்டைம் ஆக வேலைபார்த்தும் வந்துள்ளார் ஜெபபிரின்ஷா..

 லேட் நைட்

லேட் நைட்

பியூட்டி பார்லரில் வேலைக்கு செல்வதால், பணி நிமித்தமாக மேக்கப் போட வேண்டியிருந்தது.. மார்டர்ன் டிரஸ்ஸும் போட வேண்டியிருந்தது.. அதனால் அதற்கேற்றபடி ஆடை அணிந்து தினமும் திருவனந்தபுரம் சென்றார்.. இதுதான், எபினேசருக்கு எரிச்சலை மூட்டி உள்ளது.. சில சமயங்களில், டியூட்டி முடிந்து நைட் லேட்டாகவும் வந்துள்ளார் மனைவி.. எப்போதெல்லாம் ஜெபபிரின்ஸா வீட்டுக்கு லேட்டாக வருகிறாரோ, அன்றைய தினம் இரவு, அவரை சந்தேகப்பட்டு, கடுமையாக தாக்கி உள்ளார் எபினேசர்.. இதனால் சில தினங்களுக்கு முன்பு ஜெபபிரின்ஸாவை அடிக்கவும், கோபித்து கொண்ட அவர், 2 குழந்தைகளுடன் தன்னுடைய அம்மா வீட்டிற்கு சென்றுவிட்டார்.

 நைஸா சைஸா

நைஸா சைஸா

கடந்த வியாழக்கிழமை இரவு குடிபோதையில் ஜெபபிரின்ஸா வீட்டிற்குச் சென்ற எபினேசர், அவரிடம் சமாதானம் பேசி, இனிமேல் இப்படி நடந்து கொள்ள மாட்டேன் என்று நைசாக பேசியுள்ளார்.. புது வீடு கட்டுவதற்கு, உன் அப்பாவிடம் இருந்து 10 லட்சம் ரூபாய் வாங்கிட்டு வந்துடு, போதும் என்றும் சைஸாக சொல்லி உள்ளார்.. பிறகு வா, நம் வீட்டுக்கு போகலாம் என்று சொல்லி, பைக்கில் ஏற்றி வந்துள்ளார்.. முலச்சல் ஆற்றங்கரை பகுதியில் கும்மிருட்டு காணப்பட்டது.. அந்த இருட்டான பகுதியில் ஜெபபிரின்ஸாவை கீழே இறங்க சொல்லி, பைக்கை ஒரு ஓரமாக நிறுத்திவிட்டு வந்துள்ளார்..

ஆற்றங்கரையிலே

ஆற்றங்கரையிலே

அதற்கு பிறகு, பெரிய அரிவாளை எடுத்து, ஜெபபிரின்ஸாவை சரமாரியாக வெட்டியுள்ளார் எபினேசர். இதில் நிலைகுலைந்து சாலையில் விழுந்த ஜெபபிரின்ஸா, ரத்த வெள்ளத்தில் சம்பவ இடத்திலேயே இறந்துள்ளார். ஜெபபிரின்ஸாவின் அலறல் சத்தம்கேட்டு அப்பகுதியினர் அங்கு கூடியதும் எபினேசர் பைக்கில் தப்பிச்சென்றுவிட்டார். தகவலின்பேரில் அங்கு சென்ற தக்கலை போலீஸார் ஜெபபிரின்ஸாவின் உடலை மீட்டு போஸ்ட் மார்ட்டம் செய்ய கன்னியாகுமரி அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். பின்னர் தப்பி ஓடிய எபினேசரை தேடினர்.

 மாடர்ன் டிரஸ்

மாடர்ன் டிரஸ்

எபனேசர் திருவனந்தபுரத்தில் மறைந்திருப்பதாக தகவல் கிடைக்கவும், அங்கு போலீசார் விரைந்தனர்.. ஆனால், போலீஸை பார்த்ததுமே அவர் விஷம் குடித்து தற்கொலைக்கு முயன்றுள்ளார்.. எனினும் அவரை கடைசி நேரத்தில் மீட்டு போலீசார் மார்த்தாண்டத்தில் உள்ள ஒரு தனியார் மருத்துவமனையில் அனுமதித்துள்ளனர்.. அவருக்கு சிகிச்சையும் நடந்து கொண்டிருக்கிறது.. இந்தச் சம்பவம் குறித்து தக்கலை போலீஸார் தொடர் விசாரணை நடத்தி வருகின்றனர்... மார்டர்ன் டிரஸ் போட்டதுக்காக, மனைவியை அரிவாளால் வெட்டி கொன்ற இந்த சம்பவத்தின் அதிர்ச்சி இன்னும் குமரியை விட்டு போகவில்லை.

புது டிரஸ்

புது டிரஸ்

சம்பவத்தன்று, ஜெபசிங்கின் மகனும், ஜெப பிரின்ஷாவின் தம்பியுமான ஜெப பிரின்சுக்கு திருமண பேச்சுவார்த்தை வீட்டில் நடந்துள்ளது... அது முடிந்ததும் துணி எடுப்பதற்காக கடைக்கு சென்று விட்டு அனைவரும் இரவு வீட்டிற்கு திரும்பியுள்ளனர்.. இந்த நிகழ்ச்சியின்போது, ஜெப பிரின்ஷா அதிக மேக்கப்புடன் காணப்பட்டாராம்.. பெண் வீட்டில் இருந்து வந்திருந்ததால், புது டிரஸ் அணிந்துள்ளார்.. வீட்டிற்கு வந்திருந்த அனைவரிடமும் சிரித்து சிரித்து பேசியுள்ளார். இதை நேரில் பார்த்த எபனேசருக்கு மறுபடியும் ஆத்திரத்தை ஏற்படுத்தி உள்ளது.. மனைவியின் நடவடிக்கையில் ஆரம்பத்தில் மாற்றம் தென்பட்டபோதே, மனைவியை கொலை செய்ய முடிவு செய்துவிட்டாராம்.

ஃபுல் மேக்கப்

ஃபுல் மேக்கப்

மனைவியை கொலை செய்துவிட்டு, தானும் தற்கொலை செய்து கொள்ள முடிவு செய்துள்ளார்... அதற்காகவே, முன்கூட்டியே அரிவாள் மற்றும் விஷம் இரண்டையுமே வாங்கி வீட்டில் தயார் நிலையில் வைத்துள்ளார்.. மாமனார் வீட்டுக்கு சென்று மனைவியை கூப்பிட போவதால், அவைகளை பைக்கில் எடுத்து பைக்கில் வைத்து கொண்டு கிளம்பி உள்ளார்.. எதிர்பார்த்தபடியே, தன் தாய் வீட்டில், மனைவி ஃபுல் மேக்கப்பில் இருப்பதை பார்த்து கொந்தளித்து போயுள்ளார் எபினேசர். இந்த சம்பவம்தான், நடுவழியிலேயே பைக்கை நிறுத்திவிட்டுவந்து, மனைவியை அரிவாளால் வெட்டி கொன்றுள்ளதாக தெரிகிறது..

More From
Prev
Next
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+