அந்த 28 செகண்ட்ஸ்.. மோடி தியானம்.. சினிமா பாணியில் எடுக்கப்பட்ட வீடியோ.. இதை கவனிச்சீங்களா?
கன்னியாகுமரி; பிரதமர் மோடி கன்னியாகுமரியில் உள்ள விவேகானந்தர் மண்டபத்தில் தியானம் செய்யும் வீடியோ வெளியாகி உள்ளது. இதில் முதல் 28 நொடிகள் பெரிய அளவில் கவனம் பெற்றுள்ளன.
நேற்று லோக்சபா தேர்தல் பிரச்சாரம் முடிந்த நிலையில், பிரதமர் நரேந்திர மோடி தமிழ்நாட்டில் கன்னியாகுமரியில் இரண்டு நாட்கள் தியானம் செய்ய உள்ளார். நேற்று தமிழ்நாடு வந்த மோடி, குமரியில் உள்ள விவேகானந்தர் மண்டபத்தில் தியானம் செய்ய தொடங்கி உள்ளார். கடந்த முறை 2019 லோக்சபா தேர்தலுக்கு பின் கேதார் நாத் குகையில் மோடி தியானம் செய்தார்.

அதேபோல் இந்த முறை தியானம் செய்கிறார். தேர்தல் பிரச்சாரம் முடிந்த பின்.. சேனல்களின் எல்லா கவனமும் தன் மீது இருக்க வேண்டும் என்பதை மனதில் வைத்து பிரச்சார்ம் முடிந்த பின்பும் கூட தேர்தலுக்கு முன்பாக மோடி கன்னியாகுமரியில் தியானம் செய்ய உள்ளார். சுவாமி விவேகானந்தர் பாறை நினைவிடத்தில் மோடி தியானம் செய்கிறார். இரண்டு நாட்களுக்கு அவர் தியானம் செய்ய உள்ளார்.
48 மணி ஏசி அறையில் அவர் விடாமல் தியானம் செய்வார். தூங்க, குளிக்க மட்டும் பிரேக் எடுப்பார் என்பது குறிப்பிடத்தக்கது. இன்று காலை பிரதமர் மோடி இளநீர் மற்றும் ஜூஸ் மட்டும் குடித்துவிட்டு பிரச்சாரத்தை தொடங்கியதாக கூறப்படுகிறது.
வீடியோ; இந்த நிலையில் பிரதமர் மோடி கன்னியாகுமரியில் உள்ள விவேகானந்தர் மண்டபத்தில் தியானம் செய்யும் வீடியோ வெளியாகி உள்ளது. இதில் முதல் 28 நொடிகள் பெரிய அளவில் கவனம் பெற்றுள்ளன. காவி உடையில் பிரதமர் மோடி தியானம் செய்யும் வீடியோ வெளியாகி உள்ளது.

இதில் முதல் 28 நொடியில் மொத்தம் 9 ஆங்கிளில் கேமரா வைக்கப்பட்டு உள்ளது. 9 ஆங்கிளில் கேமரா மூலம் வித்தியாசமான சினிமாட்டிக் காட்சிகள் வைக்கப்பட்டு உள்ளன. பத்தியில் இருந்து வரும் புகை ஷாட் தொடங்கி மோடிக்கு வைத்த க்ளோஸ் ஷாட் வரை அப்படியே சினிமா போல காட்சிகள் வைக்கப்பட்டு உள்ளன.
ஏன் கன்னியாகுமரி: மோடி இந்த விவேகானந்தா தியான மண்டபத்தை தேர்வு செய்தது அரசியல் ஆய்வாளர்களால் முக்கியமான விஷயமாக பார்க்கப்படுகிறது. 19 ஆம் நூற்றாண்டின் தத்துவஞானியும் சமூக சீர்திருத்தவாதியுமான சுவாமி விவேகானந்தர் மூன்று நாட்கள் இரவும் பகலும் இங்கு தியானம் செய்தது குறிப்பிடத்தக்கது. இதே இடத்தில் இறுதிக்கட்ட தேர்தலில் வாக்களிக்கும் வாக்காளர்களை கவரும் விதமாக மோடி தியானம் செய்ய உள்ளார்.
தியானத்திற்கு ஏசி: மோடி செய்ய போவது தியானம் என்றாலும் நடுக்கடலில் பிரதமர் மோடி தியானம் செய்ய விவேகானந்தர் நினைவு மண்டப தியான அறையில் ஏசி வைக்கும் பணிகள் நேற்று முதல்நாள் நடந்தது. சுமார் 2 டன் ஏ.சி. நேற்று முதல்நாள் காலை கொண்டு வரப்பட்டு தியான மண்டபத்தில் பொருத்தப்பட்டது.
#WATCH | Kanniyakumari, Tamil Nadu | PM Narendra Modi meditates at the Vivekananda Rock Memorial, where Swami Vivekananda did meditation. He will meditate here till 1st June pic.twitter.com/X4bvAdgZLs
— ANI (@ANI) May 31, 2024
இங்கே கிட்டத்தட்ட 3 ஸ்டார் ஹோட்டலுக்கு இணையான வசதிகள் செய்து கொடுக்கப்பட்டுள்ளது. குளிர் சாதன வசதி உள்ளிட்ட பல்வேறு ஏற்பாடுகள் கொண்ட சிறப்பு அறை இங்கே தயாரிக்கப்பட்டது.
பாதுகாப்பு தீவிரம்; பிரதமர் நரேந்திர மோடி, இன்று தொடங்கி விவேகானந்தர் பாறை நினைவிடத்தில் 45 மணி நேர தியானத்தில் ஈடுபட உள்ளதால், இறுதிக்கட்ட தேர்தல் பிரசாரத்தை முடித்துக்கொண்டு, முக்கிய நிகழ்ச்சிக்கான ஏற்பாடுகள் செய்யப்பட்டு வருகின்றன. முக்கிய சில சந்திப்புகளை முடித்துக்கொண்டு மோடி கேரளா வழியாக குமரி செல்ல உள்ளார்.












Click it and Unblock the Notifications