அரசியல் பணிக்கு இடையே.. திமுக மாவட்டச் செயலாளர் சுரேஷ்ராஜன் செய்யும் உதவிகள்.. மக்கள் பாராட்டு
கன்னியாகுமரி: குமரி கிழக்கு மாவட்ட திமுக செயலாளரும், முன்னாள் அமைச்சருமான சுரேஷ்ராஜன் தனது அரசியல் பணிகளுக்கு இடையே அறப்பணிகளிலும் ஈடுபட்டு வருகிறார்.
அண்மையில் நடைபெற்று முடிந்த சட்டமன்றத் தேர்தலில் நாகர்கோவில் தொகுதியில் போட்டியிட்டு பாஜக வேட்பாளரிடம் தோல்வியை தழுவிய இவர், இப்போது அரசியலுக்கு அப்பாற்பட்டு சமுதாயப் பணிகளிலும் கவனம் செலுத்தத் தொடங்கியிருக்கிறார்.
இதனால் குமரி மாவட்டத்தை சேர்ந்த தொண்டு நிறுவனங்கள் உட்பட தன்னார்வ அமைப்புகளை சேர்ந்தவர்கள் அமைச்சர் மனோ தங்கராஜை அணுகுவதை விட மாஜி அமைச்சரான சுரேஷ்ராஜனை உதவிக்காக நாடத் தொடங்கியிருக்கிறார்கள்.

குமரி மாவட்டம்
கன்னியாகுமரி மாவட்டம் கோட்டாறு அருகே விநோத நோயால் பாதிக்கப்பட்டுள்ள இரண்டு மகன்களுடன் சிகிச்சைக்கு வசதியின்றி கூலி வேலைக்கு செல்லும் அவர்களது அம்மா துயருற்று வந்திருக்கிறார். இது குறித்து கட்சிக்காரர்கள் மூலம் தகவலறிந்த குமரி கிழக்கு மாவட்ட திமுக செயலாளரும், முன்னாள் அமைச்சருமான சுரேஷ்ராஜன் அந்த இரண்டு சகோதரர்களுக்கான சிகிச்சைக் கட்டணத்தை ஏற்றிருக்கிறார்.

சொந்த நிதி
மாற்றுத்திறனாளி சகோதரர்களில் ஒருவரை கோட்டாறு அரசு ஆயுர்வேத மருத்துவமனையிலும் மற்றொருவரை பராமரிப்பு மையத்திலும் சேர்த்துவிட்டதோடு அவர்களை அவ்வப்போது நேரில் சென்று சந்தித்து நலம் விசாரித்து வருகிறார் சுரேஷ்ராஜன். இதேபோல் நாகர்கோவில் இளங்கடையை சேர்ந்த 9 வயது சிறுவன ஆனந்த், முதுகுதண்டுவட பாதிப்பால் அவதியுற்று வருவதை அறிந்து அந்தச் சிறுவனின் சிகிச்சைக்கு ஒன்றரை லட்சம் ரூபாய் பணம் கொடுத்ததோடு மேல் சிகிச்சைக்காக சென்னைக்கு அனுப்பி வைக்கவும் நடவடிக்கை எடுத்திருக்கிறார்.

தாராளம்
மேலும், செயற்கை கால் மற்றும் கை உட்பட உடல் உறுப்புகள் பொருத்தவும் இல்லை எனக் கூறாமல் தாராளம் காட்டி வருகிறார் திமுக மாவட்டச் செயலாளர் சுரேஷ்ராஜன். பொதுவாக இது போன்ற சமூகப் பணிகளில் ஈடுபடக் கூடிய அரசியல்வாதிகளை விரல் விட்டு எண்ணிவிட முடியும். திமுக -காங்கிரஸ் கூட்டணி ஆட்சியின் போது மத்திய இணை அமைச்சராக இருந்த நடிகர் நெப்போலியன் தற்போது அமெரிக்காவில் வசித்தாலும் கூட, தமிழகத்தில் ஏராளமான மாற்றுத்திறனாளிகளுக்கு உதவி புரிந்து வருவது குறிப்பிடத்தக்கது.

தன்னார்வ அமைப்புகள்
இதனிடையே குமரி மாவட்டத்தை சேர்ந்த தொண்டு நிறுவனங்கள் உட்பட தன்னார்வ அமைப்புகளை சேர்ந்தவர்கள் மாஜி அமைச்சரும், குமரி கிழக்கு மாவட்ட திமுகச் செயலாளருமான சுரேஷ்ராஜனை உதவிக்காக அதிகம் நாடத் தொடங்கியிருக்கிறார்கள்.
-
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
நன்றி மறக்காத விஜய்.. தவெகவின் முதல் ராஜ்யசபா எம்பி யார்? ரேசில் முன்னணியில் ’லெஃப்ட் - ரைட்’ ஹேண்ட் -
“தவெகவுக்கு ஓட்டு போடாத தென்காசி மக்களும் பாதிக்கப்படுகிறோம்”.. நள்ளிரவில் எழுந்த திடீர் போராட்டம்! -
"பச்சை துரோகம்.. வாக்கு அறுவடை முடிந்ததும் ரிசர்வ் வங்கியை காரணம் காட்டுவதா?" தங்கம் தென்னரசு தாக்கு -
திமுகவிற்கு விஜய் சொன்ன 'நோ'.. ஸ்விட்ச் ஆப் ஆன போன்.. மேஜைக்கு வந்த உளவுத்துறை ரிப்போர்ட்! -
SP Velumani: வேலுமணிக்கு வில்லனாக மாறிய முனுசாமி.. பதவிக்கு விழுந்த வேட்டு! -
கொ*யில் முடிந்த பார் டான்ஸ்.. கொதித்துப் போன கோயம்பேடு! யான்சிக்கு இப்படியா சாவு வரனும்! ஷாக்! -
Annamalai New Party LIVE:தனிக் கட்சி தொடங்குகிறார் அண்ணாமலை? பிறந்தநாளன்று வெளியாகும் அப்டேட்? -
விஜய்க்கு பெரிய தலைவலி.. ஒரே நாளில் வீட்டுக்கு போன 5000 ஊழியர்கள் ஓய்வு! ஆட்டம் காணும் அரசு துறைகள் -
நான் பார்த்துகிறேன் நண்பா.. உறுதியாக சொன்ன விஜய்.. அஜித் தாய் மறைந்த இரவு.. நடந்தது என்ன? -
பிளாக் அண்ட் ஒயிட் கோட் சூட் அணிவது இதற்காகத் தான்.. ரகசியத்தை போட்டு உடைத்த விஜய்! -
காலியான ராஜ்யசபா எம்பி பதவி! இன்று வேட்புமனு தாக்கல் தொடக்கம்! தவெகவின் முதல் எம்பி யார்?












Click it and Unblock the Notifications