Get Updates
Get notified of breaking news, exclusive insights, and must-see stories!

2 மேட்டர்.. ஓஹோ, இதான் காரணமா.. சுடுகாட்டில் கதர்கள்.. பொன்.ராதாவின் "பிக் அஸ்திரம்".. மலைத்த குமரி

Subscribe to Oneindia Tamil

கன்னியாகுமரி: காங்கிரஸ் கட்சியினரின் நடவடிக்கையை கண்டித்து இன்று மாவட்ட அளவிலான உண்ணாவிரதப் போராட்டம் நடைபெறும் என்று பாஜகவின் மூத்த தலைவர் பொன்.ராதாகிருஷ்ணன் அறிவித்துள்ளார். இதனால், கன்னியாகுமரியில் பரபரப்பு சூழ்ந்துள்ளது.

காங்கிரஸ் முன்னணி தலைவர் ராகுல் காந்தியை எம்பி பதவியில் இருந்து தகுதி நீக்கம் செய்ததற்கு எதிராக கன்னியாகுமரி மாவட்டத்தில் காங்கிரஸ் கட்சியினர் கடந்த சில நாட்களாக பல கட்ட போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர்.

இந்நிலையில் 2 நாட்களுக்கு முன்பு, நாகர்கோவிலில் காங்கிரஸ் கட்சியினர் சுமார் 30 பேர் ஊர்வலமாக பாஜக அலுவலகம் முன்பு திரண்டு பாஜகவுக்கு எதிராக முழக்கம் எழுப்பியுள்ளனர்.

கைகலப்பு

அப்போது பாஜக அலுவலகத்தில் உட்கார்ந்திருந்த, பாஜக தொண்டர்கள் காங்கிரஸ் தொண்டர்களுடன் வாய்தகராறில் ஈடுபட்டனர். அதைத்தொடர்ந்து 2 தரப்பினருக்கும் இடையே மோதல் கல் வீச்சு போன்றவை நடைபெற்றன. இதனால் அப்பகுதியில் பெரும் பரபரப்பு ஏற்பட்டது. 2 தரப்பிலுமே ஒருமையில் திட்டிக்கொண்டனர்.. பிறகு, திடீரென கைகலப்பிலும் ஈடுபட்டு ஒருவரையொருவர் சரமாரியாக தாக்க தொடங்கிவிட்டனர்.. இது தொடர்பாக வீடியோவும் வெளியானது. அந்த வீடியோவில் கட்சி கொடி கட்டப்பட்டிருந்த தடியால் காங்கிரசார் பாஜகவினரை தாக்க, பதிலுக்கு அவர்களிடம் இருந்த தடிகளை பிடுங்கி காங்கிரசார் மீதும் தாக்குதல் நடத்தும் காட்சிகள் பதிவாகியிருந்தது.

கற்கள் வீச்சு

பாஜக அலுவலகத்தின் மீதும், அதன் அருகில் நிறுத்தப்பட்டிருந்த வாகனங்கள் மீதும் காங்கிரசார் கற்களை வீசியதாகவும் கூறப்படுகிறது. இதனால் பாஜகவினர் கடும் கோபம் அடைந்து பதிலுக்கு கற்களை வீசியிருக்கிறார்கள்.. இரு தரப்பு மோதலிலும் பாஜகவை சேர்ந்த கிருஷ்ணன், ஜெகநாதன் ஆகிய 2 பேரும், காங்கிரஸ் கட்சியை சேர்ந்த டைசன், லாரன்ஸ் ஆகிய 2 பேரும் காயமடைந்தனர்... இந்த வன்முறை தொடர்பாக பாஜக மாநில தலைவர் அண்ணாமலை கண்டனம் தெரிவித்திருந்தார்.

 Do you know why Pon Radhakrishnan has announced a hunger strike today in Kanniyakumari

வெட்கக்கேடு

அதில், "நாகர்கோவில் பாஜக அலுவலகத்தின் மீதும் தொண்டர்கள் மீதும் காங்கிரஸ் கட்சியைச் சேர்ந்த ரவுடிகள் கல்லெறிந்து தாக்குதல் நடத்தியிருக்கின்றனர். காங்கிரஸ் கட்சி தன்னுடைய இருப்பைக் காட்ட இதுபோன்ற வன்முறை நடவடிக்கைகளில் ஈடுபடும் நிலைக்குத் தள்ளப்பட்டிருப்பது வெட்கக்கேடானது. உடனடியாக பாஜக அலுவலகம் மீது தாக்குதல் நடத்திய சமூக விரோதிகள் மீது கடுமையான நடவடிக்கைகள் எடுக்க வேண்டும் என்று வலியுறுத்துகிறேன். அழிவின் விளிம்பிலிருக்கும் காங்கிரஸ் கட்சி, இது போன்ற ஜனநாயகத்துக்கு விரோதமான நடவடிக்கைகளில் ஈடுபட்டாலும் பாஜக தொண்டர்கள் சட்டத்துக்கு உட்பட்டு அமைதி காக்க வேண்டும் என்று கேட்டுக் கொள்கிறேன்" என்று அண்ணாமலை பதிவிட்டிருந்தார்.

அறவழி

உடனடியாக இதற்கு தமிழக காங்கிரஸ் பதிலடி தந்தது.. அதில், "அண்ணாமலை அவர்களே, தாக்கியவர்கள் தான்‌ காயம் அடைவார்களா? அறவழியில் போராடிய காங்கிரஸ்காரர்கள் மீது பாஜக மாவட்ட தலைவர் தர்மராஜ் தலைமையில் நடந்த தாக்குதல் இந்த வீடியோவில் உள்ளது. வட்டம் போட்டு காட்டப்பட்டுள்ள நபர் உங்கள் மாவட்ட தலைவர் தானே? முதலில் அவரை கைது செய்ய சொல்லுங்கள்" என்று கேட்டிருந்தது. இதனிடையே இந்த மோதல் தொடர்பாக விசாரணை நடத்தி வந்த நாகர்கோவில் போலீசார், கன்னியாகுமரி மாவட்ட பாஜக தலைவர் தர்மராஜ்ஜை கைது செய்தனர். இரு தரப்பிலும் 15-க்கும் மேற்பட்டவர்கள் மீது காவல்துறையினர் வழக்குப் பதிவு செய்துள்ளனர்.

இந்த நிலையில், இன்றைய தினம் அதாவது, ஏப்ரல் 6ம் தேதி, மாவட்டம் தழுவிய உண்ணாவிரதம் போராட்டம் நடத்த இருப்பதாக பாஜக மூத்த தலைவர் பொன்.ராதாகிருஷ்ணன் அறிவித்துள்ளார்... இதுகுறித்து அவர் செய்தியாளர்களிடம் சொல்லும்போது, "பாஜகவினரை தாக்கும் கனவை யாரும் நினைத்து கூட பார்க்க முடியாது. காங்கிரஸ் கட்சி வாடகைக்கு ஆட்களை எடுத்து கட்சி நடத்துகிறது. தாங்கள் காங்கிரஸ் கட்சியினர் என்று சொல்லிக்கொள்ளும் குண்டர்கள், பாஜக அலுவலகம் மீது தாக்குதல் நடத்த முயன்றுள்ளனர். ஏப்ரல் 3-ம் தேதி நடந்த மோதலில் ஈடுபட்டவர்கள் காங்கிரஸ் கட்சியின் நிர்வாகிகளாக என தெரியாது. இவர்கள் வெளி இடங்களில் இருந்து வந்துள்ளனர்.

கன்னியாகுமரி மாவட்ட மக்களுக்கு பாதுகாப்பு தாருங்கள். காவல் துறையினர் நியாயமாக நடந்து கொள்ள வேண்டும். குமரி மாவட்ட காவல்துறை தன்னுடைய மரியாதையை இழந்து வருகிறது. காங்கிரஸ் கட்சியினரின் நடவடிக்கையை கண்டித்து நாளை 6-ம் தேதி உண்ணாவிரதப் போராட்டம் நடைபெறும்" என்றார். பொன்.ராதாவின் இந்த அறிவிப்பினால், மாவட்டத்தில் பெரும் பரபரப்பு ஏற்பட்டு வருகிறது. இதற்கு காங்கிரஸ் தரப்பு என்ன செய்ய போகிறது? என்று தெரியவில்லை.. எனினும் போலீசார் மாவட்டம் முழுவதும் விழிப்புடன் கண்காணிப்பு பணியில் ஈடுபட்டு வருகிறார்கள்.

முன்னதாக, நாகர்கோவில் மாநகர காங்கிரஸ் கட்சி சார்பில் ஒழுகினசேரியில் உள்ள சுடுகாட்டில் காங்கிரஸ் நிர்வாகிகள் பிரதமர் மோடி புகைப்படத்துடன் மொட்டை அடித்து போராட்டத்தில் ஈடுபட்டுவிட்டது, மாவட்டத்தில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது. மோடி படத்தோடு சுடுகாட்டுக்குப் போய் மொட்டை போட்டு கோஷம் போட்டதுதான் இந்த பிரச்சினைக்கெல்லாம் மூலகாரணமாகிவிட்டது என்கிறார்கள்.. இந்த தாக்குதலை கண்டித்து நாகர்கோவில் பாஜக எம்எல்ஏ-வான எம்ஆர் காந்தி அப்போதே சாலையில் உட்கார்ந்து போராடினார்... ஆனால், பொன்.ராதாகிருஷ்ணன் அமைதிகாத்தார். இது சில விமர்சனங்களையும், சர்ச்சைகளையும் கிளப்பியது.. இதையடுத்துதான், இன்றைய தினம் போராட்டத்தை அறிவித்தாராம் பொன்.ராதா.

அதுமட்டுமல்ல, இதற்கு இன்னொரு காரணமும் சொல்லப்படுகிறது.. 1980 ஏப்ரல் 6-ம் தேதி தான் பாஜக உதயமானது. அந்த நாளில் அகில இந்திய அளவில் பாஜகவினர் கொண்டாட்டங்களில் இருப்பார்கள்.. மேலும், இன்று பாஜகவின் 44வது ஸ்தாபன தினம் என்பதால், நாடு முழுவதும் உள்ள கட்சி தொண்டர்களிடையே உரையாற்றுகிறார் பிரதமர் மோடி.. அதனால்தான், இன்று ஏப்ரல் 6-ம் தேதி தன்னுடைய ஆர்ப்பாட்டத்தை அறிவித்தாராம் பொன்.ராதா.. இந்த பிரச்சினைக்காக தொண்டர்களை திரட்டி உண்ணாவிரதம் இருப்பதால், தேசிய அளவிலான கவனத்தையும் ஈர்க்க முடியும் என்று நம்புகிறாராம்.

More From
Prev
Next
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+