அங்கே பாருங்க.. ரெண்டு பேரும் ஆண்கள்.. அப்புறம் ஏன் மணக்கோலம்? விழிப்புணர்வை வியந்து பார்த்த மக்கள்
கன்னியாகுமரி: கன்னியாகுமரி மாவட்டத்தைச் சேர்ந்த பட்டதாரி இளைஞர்கள் இருவர், வரதட்சணை ஒழிப்பு தொடர்பாக நூதன முறையில் பிரச்சாரம் மேற்கொண்டனர். பட்டாடை அணிந்து, மணக்கோலத்தில், வித்தியாசமான முறையில் விழிப்புணர்வை ஏற்படுத்தும் இந்த இளைஞர்களை, பல்வேறு தரப்பினரும் வெகுவாக பாராட்டி வருகின்றனர்.
வரதட்சணை வாங்குவதும், கொடுப்பதும் வரதட்சணை சட்டத்தின்படி குற்றம் என அனைவருக்கும் தெரியும். ஆனாலும், வரதட்சணை கொடுத்தால்தான் திருமணத்திற்கே சம்மதம் தெரிவிப்போம் என சிலர் வைராக்கியத்துடன் இருந்து வருகிறார்கள். வேறு சிலரோ, வரதட்சணை கொடுப்பதை கவுரவமாக கருதி வருகிறார்கள்.
இருப்பவர்கள் வரதட்சணையை கொட்டி கொடுக்கிறார்கள். இல்லாதவர்கள் வரதட்சணை கொடுக்க முடியாமல் தவித்து வருகின்றனர். இதனால் வரதட்சணை கொடுமை, புதுப்பெண் தற்கொலை, விவாகரத்து என விரும்பதாக சம்பவங்கள் தொடர்ந்து நிகழ்ந்த வண்ணம் உள்ளன. வரதட்சணை ஒழிப்பு குறித்து எத்தனையோ விழிப்புணர்வுகளை அரசு மற்றும் சமூக ஆர்வலர்கள் ஏற்படுத்தி வந்த போதிலும், இதுபோன்ற சம்பவங்கள் இன்னும் அரங்கேறிதான் வருகின்றன.

பட்டதாரி இளைஞர்கள்
இந்நிலையில், வரதட்சணை கொடுமை, வரதட்சணை ஒழிப்பு என்பதை பொதுமக்களிடம் கொண்டு செல்லும் வகையில், கன்னியாகுமரியைச் சேர்ந்த பட்டதாரி இளைஞர்கள், நூதன முறையில் விழிப்புணர்வு பிரச்சாரத்தில் களமிறங்கியுள்ளனர். வில்லுக்குறி பகுதியைச் சேர்ந்த ஜெனிஷ், சுமிஷ் என்ற இருவரும், கடந்த சில மாதங்களாக வித்தியாசமான முறையில் பல்வேறு விழிப்புணர்வுகளை ஏற்படுத்தி, அனைவரையும் தங்கள் பக்கம் ஈர்த்து வருகின்றனர். அந்த வகையில், தற்போது, பொதுமக்களுக்கு வித்தியாசமான முறையில் விழிப்புணர்வை ஏற்படுத்த இவர்கள் திட்டமிட்டனர்.

மணகோலத்தில் பிரச்சாரம்
அதன்படி, எப்போதும் பரபரப்பாக காணப்படும் நாகர்கோவில் வடசேரி பேருந்து நிலையத்தில், வரதட்சணை ஒழிப்பு தொடர்பாக விழிப்புணர்வு பிரச்சாரத்தில் ஈடுபட்டனர். இதற்காக இளைஞர்கள் இருவரும், பட்டாடை அணிந்து மணமகன் கோலத்தில், கழுத்தில் விளம்பர பலகையை தொங்கவிட்டிருந்தனர். தங்களை திருமணம் செய்வதற்கு மணமகள் இருக்கிறார்களா? எனக் கேட்ட வண்ணம் பேருந்து நிலையத்தில் வலம் வந்தனர். மேலும், தங்களுக்கு வரதட்சணையாக கார், தங்கம், பணம் எதுவும் வேண்டாம். சாதி, மதமும் தேவையில்லை எனவும் அந்த விளம்பர அட்டையில் சுட்டிக்காட்டியிருந்தனர்.

பொதுமக்கள் பாராட்டு
தங்கள் கழுத்தில் தொங்க விடப்பட்டிருந்த அந்த விளம்பர விழிப்புணர்வு அட்டையை பொதுமக்களிடம் காண்பித்தப்படி, வரதட்சணை கேட்காதீர்கள், மணமகளின் குணத்தைப் பார்த்து தேர்வு செய்யுங்கள் என விழிப்புணர்வை மேற்கொண்டனர். இளைஞர்களின் இந்த வித்தியாசமான மற்றும் நூதன முறையிலான வரதட்சணை விழிப்புணர்வு பிரச்சாரம், பொதுமக்களை வெகுவாக கவர்ந்ததோடு, அனைவரும் இந்த இளைஞர்களை மனதார பாராட்டி வருகின்றனர்.

இளைஞர்கள் நம்பிக்கை
இந்த விழிப்புணர்வு பிரச்சாரம் குறித்து இளைஞர்கள் கூறும்போது, கை நிறைய சம்பாதிக்கும் பொறியியல் பட்டதாரியான தாங்கள், வரதட்சணை ஒழிப்பு குறித்து பிரச்சாரம் செய்தால், சிலர் கேலி கிண்டல் செய்கின்றனர். இதனால், வித்தியாசமான முறையில், மணமகன் கோலத்தில், பொதுமக்களை தங்கள் பக்கம் ஈர்க்கும் வகையில் நூதனமுறையில் பிரச்சாரம் செய்து வருவதாக தெரிவித்தனர். தங்களின் இந்த வரதட்சணை ஒழிப்பு விழிப்புணர்வு பிரச்சாரம், சமூகத்தில் மாற்றத்தை ஏற்படுத்துவதற்கான தூண்டுகோலாக அமையும் என்றும் அந்த இளைஞர்கள் நம்பிக்கை தெரிவித்தனர்.
-
எடப்பாடி அனுப்பிய மெசேஜ்.. சி.வி. சண்முகம் வீட்டில் உறுதிபடுத்திய கே.சி வீரமணி.. இணைகிறது அதிமுக -
நாளுக்கு நாள் மோசமாகும் இந்தியா.. குட்டி குட்டி நாடெல்லாம் நம்மை முந்திக்கொண்டு செல்கிறது! -
விஜய் நியமித்த 2 நாளில்.. IPS அருணை கோர்ட்டிலேயே காத்திருக்க சொன்ன நீதிபதி சுவாமிநாதன்.. ஏன்? -
420 யூனிட் ஓடியிருக்கிறது.. ஆனால் 200 யூனிட் கழிக்காமல் 100 யூனிட் கழித்தது ஏன்? விளக்கம் -
'நீங்க உம் மட்டும் கொட்டுங்க தெய்வமே.. மற்றதை நான் பார்த்துக்கிறேன்' தெறிக்கும் ஆதவ் அர்ஜுனா மீம்ஸ்! -
அவரை முதல்ல தூக்கணும்.. பிளான் போட்டு வேலை பார்த்த மூவர் அணி.. விஜய்க்கு எகிறிய பிரஷர்.. என்னாச்சு? -
கடைகளை மூடிய பணியாளர்கள்.. ஸ்தம்பித்த டாஸ்மாக்.. இரவோடு இரவாக அமைச்சர் விக்னேஷ் வெளியிட்ட அறிவிப்பு -
கோவை மக்களே 5 ஆண்டுகளுக்கு பின் வந்த குட்நியூஸ்.. விஜய் கொடுத்த கிரீன் சிக்னல் - டூயல் கான்செப்ட் பஸ் ஸ்டாண்ட்! -
அப்பறம் வச்சிக்கிறேன்.. கடுப்பான விஜய்.. கோபத்தின் உச்சிக்கே போயிட்டாராமே.. அப்படி என்ன நடந்தது? -
இடைத்தேர்தலில் பொது வேட்பாளர்களை நிறுத்தி வெற்றி பெறச் செய்வோம்.. விஜய்க்கு அன்புமணி எச்சரிக்கை -
தமிழ்த்தாய் வாழ்த்து விவகாரத்தை கையில் எடுத்த விஜய்.. உள்துறை அமைச்சகத்திடம் சொல்லுங்க.. விஜய் வைத்த கோரிக்கை! -
எடப்பாடி வீட்டிற்கு வந்த எஸ்பி வேலுமணி.. சிவி சண்முகம் மட்டும் மிஸ்ஸிங்.. தனித்துவிடப்படுகிறாரா?












Click it and Unblock the Notifications