Get Updates
Get notified of breaking news, exclusive insights, and must-see stories!

திருப்பூர் ரிதான்யாவை தொடர்ந்து கன்னியாகுமரி ஜெமலா.. வரதட்சணை கொடுமையால் பரிதாபமாகப் போன உயிர்

Subscribe to Oneindia Tamil

நாகர்கோவில்: திருப்பூர் மாவட்டத்தில் வரதட்சணைக் கொடுமையால் ரிதன்யா உயிரிழந்துள்ள சம்பவத்தின் பரபரப்பே இன்னும் அடங்கவில்லை. அதற்குள் கன்னியாகுமரி மாவட்டம், திக்கணக்கோடு பகுதியைச் சேர்ந்த ஜெமலா என்ற இளம்பெண் வரதட்சணைக் கொடுமையால் உயிரிழந்துள்ள சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

கன்னியாகுமரி மாவட்டம், கருங்கல், திக்கணங்கோடு கிழக்கு தாராவிளை பகுதியைச் சேர்ந்தவர் ராபின்சன். இவரது மகள் ஜெமலா வயது 26. நர்சிங் படிப்பை முடித்துள்ள ஜெமலாவுக்கும், இனயம்புத்தன்துறையைச் சேர்ந்த நிதின்ராஜ் என்பவரும் காதலித்து வந்துள்ளனர். நிதின்ராஜ் என்ஜினியரிங் முடித்துள்ளார். ஜெமலாவும், நிதின்ராஜுவும் வேறு வேறு சமூகத்தைச் சேர்ந்தவர்கள். ஆரம்பத்தில் இவர்களுடைய காதலுக்கு பெற்றோர் எதிர்ப்புத் தெரிவித்துள்ளனர்.

newly-married-woman-dies-due-to-dowry-voilance-in-kanyakumari

கைகூடிய காதல் திருமணம்

பின்னர் பெற்றோருடன் போராடி கடந்த ஜனவரி மாதத்தில் பெற்றோர் சம்மதத்துடன் இருவரும் திருமணம் செய்துள்ளனர். ஜெமலாவும், நிதின் ராஜும் மேல்மிடாலம் அருகே கூண்டுவாஞ்சேரி பகுதியில் வசித்து வந்துள்ளனர். நிதின் ராஜ் சரிவர வேலைக்குச் செல்லாமல் இருந்து வந்துள்ளார். இதனால், இவர்கள் இருவருக்கும் இடையே அடிக்கடி பிரச்சனை ஏற்பட்டுள்ளது.

ஜெமலாவின் விபரீத முடிவு

இதனால் விரக்திடயடைந்த ஜெமலா தூக்கிட்டு நேற்று தற்கொலை செய்து கொண்டுள்ளார். இதையடுத்து, ஜெமலாவின் பெற்றோருக்கும், காவல் துறைக்கும் நிதின்ராஜின் உறவினர்கள் தகவல் தெரிவித்துள்ளனர். சம்பவ இடத்துக்கு வந்த காவல் துறையினர் ஜெமலாவின் உடலை மீட்டு பிரேதப் பரிசோதனைக்காக ஆசாரிப்பள்ளம் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.

சாவில் சந்தேகம்

இந்நிலையில், ஜெமலாவின் தாய் புஷ்பலதா தனது மகளின் சாவில் சந்தேகம் இருப்பதாகவும், வரதட்சணைக் கொடுமை அளித்ததாகவும் பரபரப்பு புகார் ஒன்றை அளித்துள்ளார். அவர் அளித்துள்ள அந்த மனுவில், எனது மகள் ஜெமிலாவுக்கும், நிதின்ராஜுக்கும் ஜனவரியில் திருமணம் நடைபெற்றது. திருமணத்தின்போது ரூ. 7 லட்சம் பணம், 50 பவுன் நகை, வீட்டுக்கு தேவையான பொருட்களை மகளுக்காக கொடுத்தோம்.

வரதட்சணை கொடுமை

ஆனால், திருமணம் முடிந்த 2 மாதத்திலேயே மேலும் 5 லட்சம் ரூபாயை வரதட்சணையாக கேட்டனர். என் மகளை நிதின்ராஜ், மாமனார், மாமியார் ஆகியோர் சேர்ந்து கொடுமைப்படுத்தி உள்ளனர். என்னிடம் எப்படியாவது பணத்தை கொடுக்குமாறு என் மகள் கூறினார். இதையடுத்து, என் செயினை அடகு வைத்து 5 லட்சம் ரூபாய் கொடுத்தேன். மேல்மிடாலம் பகுதியில் வீடு ஒன்றையும் வாங்கி கொடுத்தோம்.

துன்புறுத்தல்

ஆனாலும், எனது மகளை தொடர்ந்து அடித்துக் கொடுமைப்படுத்தி உள்ளனர். அதுமட்டுமல்லாமல் எனது மகளின் கழுத்தில் கயிற்றால் இறுக்கியது போன்ற தடம் உள்ளதால் மகளின் உயிரிழப்பில் சந்தேகம் உள்ளது. மகளின் சாவிற்கு காரணமானவர்கள் மீது உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும். நடவடிக்கை எடுக்கும் வரை உடலை வாங்க மாட்டோம் என்று தெரிவித்து ஜெமலாவின் உறவினர்கள் போராட்டத்தில் ஈடுபட்டதால் பரபரப்பு ஏற்பட்டது.

திருமணமாகி 6 மாதங்களே ஆன நிலையில், இச்சம்பவம் குறித்து பத்மநாபபுரம் ஆர்.டி.ஓ. விசாரணை மேற்கொண்டு வருகிறார். திருமணமான ஆறே மாதத்தில் காதல் திருமணம் செய்த பெண் உயிரிழந்துள்ள சம்பவம் அப்பகுதியில் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

More From
Prev
Next
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+