வேலை நேரத்தில்.. ஆபீஸ் அறையில்... மட்ட மல்லாக்க படுத்துக் கொண்டு.. அதிர வைத்த ஈபி ஊழியர்!
பணியின்போது மின்வாரிய ஊழியர் தூங்கிய வீடியோ வைரலாகி வருகிறது.
Recommended Video
கன்னியாகுமரி: சட்டையை கழட்டிவிட்டு.. தரையில் மல்லாக்காக படுத்து கொண்டு போதையில் மின் அலுவலக ஆபீசில் குறட்டை விட்டு தூங்கி கொண்டிருக்கிறார் ஒரு ஊழியர்!
கன்னியாகுமரி மாவட்டம் நித்திரவிளை, கிராத்தூர் மற்றும் சுற்றுவட்டாரப் பகுதிகளில் நேற்று ராத்திரி கரண்ட் கட் ஆகிவிட்டது. ராத்திரி நேரம் என்பதால் எப்போது கரண்ட் வரும், எப்போது தூங்குவது என்ற கலக்கம் வந்துவிட்டது. இதனால், பாதிக்கப்பட்ட மக்கள் ஈபி ஆபீசுக்கு போன் செய்தார்கள்.

ரொம்ப நேரம் ரிங் போனதே தவிர, யாருமே போனை எடுக்கவில்லை. இதனால் மேலும் கடுப்பாகி, நித்திரவிளை மின் அலுவலகத்திற்கே எல்லாரும் திரண்டு வந்துவிட்டனர்.
அப்போது ஆபீஸ் திறந்துதான் இருந்தது. கதவுகள் திறந்த நிலையில், எல்லா ரூமிலும் ஃபேன்கள் ஓடிக் கொண்டிருக்கின்றன. ஹாலில் டேபிளுக்கு கீழே அந்த ஊழியர் தூங்கி கொண்டிருக்கிறார்.
மேல் சட்டையை கழற்றிவிட்டு, அப்படியே மல்லாக்காக கீழே படுத்துவிட்டார். நல்ல போதையிலும் இருந்திருக்கிறார். இதைப்பார்த்ததும் இன்னும் கொதித்து போய் விட்டனர் மக்கள்! அப்போது மணி இரவு 8.45!
வாய்க்கு வந்ததை எல்லாம் ஜனங்க திட்ட ஆரம்பித்துவிட்டனர். "எங்களுக்கு ஊருக்குள்ள கரண்ட் இல்லை.. போன் போட்டாலும் எடுக்கல.. இந்த நேரத்துக்கே இப்படி தூங்கினால் என்ன அர்த்தம்? யார் இதை கேட்கிறது?" என்று மக்கள் புலம்பி செல்கிறார்கள். அது எதுவுமே போதை ஊழியர் காதில் ஏற வாய்ப்பே இல்லை. இந்த வீடியோதான் இப்போது வைரலாகி வருகிறது.
-
விவசாயக் கடன் தள்ளுபடி.. பொய் சொல்லி ஏமாற்ற மாட்டேன்! விவசாயிகளே கவலைப்படாதீங்க.. விஜய் உத்தரவாதம் -
வளைகுடாவில் இந்தியாவிற்கு கிடைத்தது மாற்றுப்பாதை.. ஓமனால் பெரிய குட்நியூஸ் -
கட்டப்பா கூட ஒரு டைம்தான் குத்துனாரு.. இப்படி தினம் தினம் பண்ணுறீங்களே! கோபத்தின் உச்சியில் ஸ்டாலின் -
DMART முதலாளிக்கு இப்படியொரு பிஸ்னஸ் இருக்கா.. ஒரு வீட்டுக்கு ரூ.27.5 லட்சம் .. ஆடிப்போன மும்பை மக்கள்! -
தமிழக அமைச்சரவையில் சீனியாரிட்டி லிஸ்ட்.. பின் தள்ளப்பட்ட செங்கோட்டையன்.. வன்னி அரசுக்கு எந்த இடம் -
உதயசூரியனில் போட்டியிட்ட 2 மதிமுக எம்எல்ஏக்கள் ராஜினாமா செய்ய முடிவு? திமுகவுக்கு பெருத்த ஷாக்! -
MDMK: எம்எல்ஏக்கள் ராஜினாமா இல்லை.. புது வியூகம் எடுக்கும் மதிமுக? திமுகவுக்கு கல்தா கன்பார்ம்? -
ஆனானப்பட்ட அமெரிக்காவுக்கே இந்த நிலைமையா..? அப்போ இந்தியா? -
அண்ணாமலை ஒரு பிராண்டு.. விட்றாதீங்க! லெட்டரைப் பார்த்ததும் பதறிப் போன டெல்லி! குவியும் ஆஃபர்கள்! -
கோட்டைச்சாமி.. எந்திரி.. இப்போ நீதான் முதலமைச்சர்.. இன்னமும் பிரச்சாரமா? விஜய்யை கிண்டலடித்த திமுக -
வாசலுக்கு வந்த புகார் பெட்டி.. இனி தலைமை செயலகத்தில் எல்லோருக்கும் அனுமதி இல்லை.. தவெக அரசு கறார் -
முதல்வர் விஜய்யே நினைத்தாலும் பரந்தூர் விமான நிலையத்தை ரத்து செய்வது மிக கடினம்.. ஏன் தெரியுமா?












Click it and Unblock the Notifications