டேட்டிங் ஆப்பில் நெருக்கமான பழக்கம்.. லட்சக்கணக்கில் பறிபோகும் பணம்.. போலீஸ் சொன்ன 4 விஷயங்கள்
நாகர்கோவில்: 'டேட்டிங் ஆப்' எனப்படும் டின்டர், பபுள், ஹெப்பன் உள்ளிட்ட செயலிகள் மூலம் பணம் பறிக்கும் சம்பவங்கள் நடக்கிறது. அதாவது செல்போனில் இத்தகைய செயலிகளை பிளே ஸ்டோரில் பதவிறக்கம் செய்து கணக்கு தொடங்கியதும் முகம் தெரியாத நபர்கள் தேனாக பேசியும், ஆசை வார்த்தைகள் கூறியும் பழகுவார்கள். பின்னர் வீடியோ, ஆடியோ காலில் பேசி நெருக்கமான பழக்கத்தை ஏற்படுத்தி லட்சக்கணக்கில் பணம் பறிப்பார்கள் என்று கன்னியாகுமரி மாவட்ட சைபர் கிரைம் போலீசார் எச்சரித்துள்ளனர்
கன்னியாகுமரி மாவட்ட சைபர் கிரைம் போலீசார் வெளியிட்டுள்ள அறிவிப்பில் கூறியுள்ளதாவது: "வீட்டில் இருந்தபடியே நாள் ஒன்றுக்கு ரூ.10 ஆயிரம் வரை சம்பாதிக்கலாம் என செல்போன் எண்ணிற்கு ஒரு குறுஞ்செய்தி வரும். அத்துடன் ஒரு டெலகிராம், வாட்ஸ்-ஆப் லிங்க்-ம் கொடுக்கப்பட்டிருக்கும். அதன் உள்ளே சென்றால் எளிமையான பலவிதமான போட்டிகள் நடத்தப்பட்டு, ரூ.500, ரூ.1000 என முதலீடு செய்ய போட்டிகள் ஆரம்பிக்கப்படும். அதில் சில நூறு ரூபாய் நமக்கு வருமானம் வரும்.

பின்னர் லட்சக்கணக்கில் பணம் முதலீடு செய்ய கூறுவார்கள். நமக்கு தனியாக ஒரு 'லிங்க்' கொடுக்கப்படும். அதில் நீங்கள் முதலீடு செய்த பணம் லாபத்துடன் சேர்த்து ஒரு பெரிய தொகையாக காண்பிக்கப்படும். ஆனால் அந்த பணத்தை எடுக்க முடியாது. ஏனெனில், அந்த தொகை முழுவதையும் எடுக்க சில லட்சங்களில் பணம் முதலீடு செய்ய வேண்டும் என தெரிவிக்கப்படும். இதனை நம்பி பணத்தை செலுத்தினால், கடைசி வரை எந்த பணத்தையும் எடுக்க முடியாது. இத்தகைய பண மோசடியில் சிக்கி பணத்தை இழக்கா மல் இருக்க மக்கள் விழிப்புடன் இருக்க வேண்டும்.
இதேபோன்று 'டேட்டிங் ஆப்' எனப்படும் டின்டர், பபுள், ஹெப்பன் உள்ளிட்ட செயலிகள் மூலம் பணம் பறிக்கும் சம்பவங்கள் நடக்கிறது. அதாவது செல்போனில் இத்தகைய செயலிகளை பிளே ஸ்டோரில் பதவிறக்கம் செய்து கணக்கு தொடங்கியதும், முகம் தெரியாத நபர்கள் தேனாக பேசியும், ஆசை வார்த்தைகள் கூறியும் பழகுவார்கள். பின்னர் வீடியோ, ஆடியோ காலில் பேசி நெருக்கமான பழக்கத்தை ஏற்படுத்தி பிறகு லட்சக்கணக்கில் பணம் கேட்டு மிரட்டும் கும்பலிடமும் விழிப்புடன் இருக்க வேண்டும்.

இப்படி பணமோசடியில் சில கும்பல்கள் செயல்பட்டு வருகின்றன. எனவே இது போன்ற குறுஞ்செய்திகளை நம்பி ஏமாறாமல் எச்சரிக்கையாக இருக்க வேண்டும். பங்குச்சந்தை மற்றும் ஆன்லைன் வர்த்தகம் மூலம் குறைந்த முதலீட்டில் பல மடங்கு பணம் சம்பாதிக்கலாம் என ஆசை வார்த்தைகள் கூறி செல்போனுக்கு லிங்க் அல்லது செயலி வரும். அதன்மூலமும் பணமோசடிகள் நடந்து வருகிறது.
பகுதி நேர வேலை வாய்ப்பு உள்ளது போல வரும் போலி விளம்பரங்களை நம்பி ஆன்லைன் மூலம் பண மோசடி செய்யப்படுகிறது. எனவே இதுபோன்ற மோசடி வலையில் சிக்காமல் பொதுமக்கள் விழிப்புடன் இருக்க வேண்டும். ஆன்லைன் மோசடிகள் மூலம் பாதிக்கப்பட்டவர்கள் இலவச அழைப்பு எண் 1930 மற்றும் www.cybercrime.gov.in இணையதளம் மூலம் புகார் அளிக்கலாம்" இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.
-
வெளிநாடு போயிருக்கதே 'ரீல்ஸ்' பார்த்துதான் தெரியுது.. அமைச்சர் கீர்த்தனாவை கலாய்த்த மேயர் பிரியா! -
"எதிரிகள் சர்வ நாசம்".. எம்ஜிஆர், ஜெ., பாணியில் விஜய்.. கொல்லூர் மூகாம்பிகை கோவிலுக்கு செல்வது ஏன்? பின்னணி -
தங்கப்பத்திரத்தில் 1.50 கோடி முதலீடு செய்தவர்களுக்கு 6 கோடி தந்த மத்திய அரசு.. லாபம் 4.85 கோடி -
"ஜனவரி 1 முதல் ஆர்.எஸ்.பாரதி அரை மீசை பாரதி என்று அழைக்கப்படுவார்" - மாணிக்கம் தாகூர் கிண்டல்! -
"3 சேனல்கள் நீக்கம் இல்லை.. தொழில்நுட்ப கோளாறால் தற்காலிக ஒளிபரப்பு பாதிப்பு” - அமைச்சர் ராஜ்மோகன் -
முதல்வர் விஜய்யின் முதல் அரசு நிகழ்ச்சி.. ஒரே ஏஐ வீடியோவில் இத்தனை தமிழ்ப் பிழைகளா! -
ஸ்டாலின் கையில் ஆழ்வார்பேட்டை ரிப்போர்ட்! அப்பவே சொன்னோம்ல.. கழண்டு விழுகிறதா திமுக கூட்டணி கியர்? -
டிசிஎஸ் சைலெண்டாக செய்யும் விஷயம்.. 50000 ஊழியர்களுக்கு டார்கெட்.. தனி பிரிவு உருவாக்க முடிவு! -
கூட்டுறவு வங்கி பயிர்க்கடன் தள்ளுபடி.. அரசாணையில் குளறுபடி? "அப்பவே சொன்னோமே" சீறும் கோவை விவசாயிகள் -
நேற்று இந்திரா, நாளை நேரு.. 62 வருட சாதனை முறியடிப்பு! மிக நீண்ட கால பிரதமர் என்ற வரலாறு படைத்த மோடி -
காவலாளிக்கு லாட்டரியில் விழுந்த ரூ.78 கோடி பரிசு.. ஐக்கிய அரபு அமீரகத்தில் ‘மெகா ஜாக்பாட்’ -
2 மனைவிகளும் எனக்கு வேணும் சார்.. ஒரு நிமிஷம் போலீசுக்கே தலைசுத்திருச்சு.. திகைத்த திண்டுக்கல்












Click it and Unblock the Notifications