ஜோக் காட்றீங்களா.. அதிகாரமே கையில் இருக்கு.. அவர்களை வைத்தே மாநாடா.. திருமாவை விளாசிய ஜி.கே.வாசன்
கன்னியாகுமாரி: அதிகாரத்தை கையில் வைத்திருக்கும் திமுகவை வைத்தே மது ஒழிப்பு மாநாடு நடத்துவது வேடிக்கையாக உள்ளது என்று விடுதலைச் சிறுத்தைகள் கட்சித் தலைவர் திருமாவளவனை, தமிழ் மாநில காங்கிரஸ் தலைவர் ஜி.கே.வாசன் கடுமையாக விமர்சித்துள்ளார்.
விடுதலை சிறுத்தைகள் கட்சி தற்போது திமுக கூட்டணியில் உள்ள நிலையில், மது ஒழிப்பு மாநாடு நடத்தும் விவகாரம் பெரும் விவாதப் பொருளாக மாறியது. இதற்கிடையில் பத்திரிகையாளர் சந்திப்பில் பேசிய திருமாவளவன், விடுதலைச் சிறுத்தைகள் கட்சியின் மது மற்றும் போதைப்பொருள் ஒழிப்பு மாநாட்டில் அதிமுகவும் பங்கேற்கலாம் என்று அழைப்பு விடுத்தார். திமுக கூட்டணியில் இருந்தபடியே திருமாவளவன் அழைப்பு விடுத்தது சர்ச்சைக்குள்ளானது.

அதைத்தொடர்ந்து, ஆட்சியிலும் பங்கு, அதிகாரத்திலும் பங்கு என்று பேசிய வீடியோவை தனது எக்ஸ் பக்கத்தில் வெளியிட்டது பரபரப்பை ஏற்படுத்தியது. இதைத்தொடர்ந்து, அந்த வீடியோ டெலிட் செய்யப்பட்டது. அந்த வீடியோவை அட்மின் பதிவிட்டு நீக்கியதாக திருமாவளவன் தெரிவித்தார். அதன்பிறகு நீக்கப்பட்ட வீடியோ தொடர்பான முழு பேச்சையும் திருமாவளவன் மீண்டும் தனது எக்ஸ் பக்கத்தில் பதிவிட்டார். இதைத்தொடர்ந்து, முதல்வருடன் திருமா சந்திப்பிற்கு பிறகு அனைத்துப் பிரச்னைகளுக்கும் முற்றுப்புள்ளி வைக்கப்பட்டது.
கன்னியாகுமரியில் பல்வேறு நிகழ்ச்சிகளில் கலந்துகொள்வதற்காக வந்திருந்த தமிழ் மாநில காங்கிரஸ் தலைவர் ஜி.கே.வாசன் செய்தியாளர்களுக்குப் பேட்டி அளித்தார். அப்போது அவர் கூறுகையில், யார் வந்து மதுவை ஒழிக்கக் கூடிய அதிகாரத்தை கையிலே வைத்திருக்கிறார்களோ.. அவர்களையும் வைத்துக் கொண்டு மது ஒழிப்பு மாநாடு நடத்துவது என்பது மக்கள் மத்தியில் ஆச்சரியமாகவும், வேடிக்கையாகவும், புதிராகவும் இருக்கிறது. இதற்கெல்லாம் பதில் தேர்தல் நேரத்தில் சரியாக, முறையாக வாக்குச் சீட்டின் மூலம் மக்கள் கொடுப்பார்கள்.
இலங்கை கடற்படையினரால் மீனவர்கள் தாக்கப்படுவதற்கு பாஜக ஆட்சியில் நடவடிக்கை குறித்த கேள்விக்கு, தொடர்ந்து பாஜகவினுடைய மத்திய அமைச்சரும் சரி, அரசும் சரி நடவடிக்கை எடுத்துக் கொண்டிருப்பதால் தான் இந்த நிலை குறைந்திருக்கிறது என்பதில் எந்தவிதமான மாற்றுக் கருத்தும் கிடையாது. இந்த நிலை தொடரக் கூடாது. நிரந்தரமாக முற்றுப்புள்ளி வைக்க முடியுமா என்பதுதான் இப்போதைய கேள்வி. அதைத்தான் தமிழ் மாநில காங்கிரஸ் வலியுறுத்துகிறது.
தமிழகத்தில் உள்ள அனைத்து கட்சிகளுடைய தலைவர்களுக்கும், தொண்டர்களுக்கும் 60 வருடங்கள் திராவிட ஆட்சிகளுக்குப் பிறகு ஏன் அவர்களுடன் கூட்டணியில் இருந்தால் கூட கூட்டணி ஆட்சி இருக்கக் கூடாதா என்ற எண்ணம் இருக்கிறது என்பதில் யாருக்கும் மாற்றுக் கருத்து இல்லை. முழு பூசணிக்காயை சோற்றில் மறைக்க வேண்டிய அவசியம் கிடையாது.
எண்ணம் வேறு, இலக்கு வேறு. எண்ணம் என்பது தமிழகத்தில் கூட்டணியில் சேர்ந்து வெற்றி பெறும்போது கூட்டணி ஏன் ஆட்சி பீடத்தில் அமரக் கூடாது. எல்லோருக்கும் ஏன் அதிகாரத்தில் வாய்ப்பிருக்க கூடாது என்று தற்போதுள்ள அரசியல் சூழலில் எல்லா கட்சிகளும், தலைவர்களும் நினைக்கின்றனர். கூட்டணியின் மீது பயமா, மரியாதையா என்பது கேள்விக்குறி. கூட்டணியின் அடிப்படையில் ஆதாயமா என பலர் இதனைப் பேசாமல் இருக்கலாம். ஆனால், எண்ணம் கூட்டணி ஆட்சி இருக்க வேண்டும் என்பது எல்லா கட்சியினருக்கும், தலைவர்களுக்கும் உள்ளது.
அரசியல் சூழல் இன்று அவ்வாறு உள்ளது. எண்ணத்திற்கு ஏற்றவாறு தேர்தல் வியூகமும் இருக்க வேண்டும். பலமான கூட்டணியை அமைக்க வேண்டும். கூட்டணி வெல்வதற்கான சூழலை எல்லா கட்சிகளும் ஏற்படுத்திக் கொள்ள வேண்டும். பலமான கூட்டணியை அவ்வாறு வெற்றி பெறச் செய்துவிட்டு எண்ணிக்கையின் அடிப்படையில் நல்ல நிலை ஏற்படுத்த வேண்டும். அதுதான் படிப்படியாக அதற்கு வழிவகுக்கும்.
பெரிய கட்சிகளுக்கு மற்ற கட்சிகளின் அரவணைப்பு தேவை. எனவே, ஒன்றுபட்டால் உண்டு வாழ்வு. காலத்திற்கேற்றவாறு சூழல்கள் மாறக் கூடிய வாய்ப்பு உள்ளது. சூழலுக்கு ஏற்றவாறு வாய்ப்புகள் அதிகரித்துக் கொண்டு போகின்றன என்றார்.
-
வங்கியில் இருக்கும் மக்களின் தங்கத்தை டார்கெட் செய்யும் மத்திய அரசு? அவசர அவசரமாக அனுப்பப்பட்ட உத்தரவு! -
கிழிந்தது இரட்டை இலை.. அறிவாலயத்துக்கு பறக்கும் விராலிமலை விஜயபாஸ்கர்! சேர்ந்ததும் இந்த பொறுப்பா? -
இனி அதிகபட்சமே ஆண்டுக்கு 4 சிலிண்டர் தான்.. எக்ஸ்ட்ரா சிலிண்டருக்கு ரூ.300 அதிகமாம்.. வெளியான தகவல் -
"தவெகவா? அண்ணாமலையா? தனி கட்சியா?"... லாரன்ஸ் அரசியல் என்ட்ரி சஸ்பென்ஸ்.. அந்தணன் சொன்ன சீக்ரெட் -
தலைமை செயலகத்தில் மர நாற்காலிக்கு பதிலாக சொகுசு நாற்காலிக்கு மாறிய விஜய்! விலையை கேட்டால் அதிருதே! -
"திருமணமாகாதவர்கள் உறவு கொள்வது தப்பில்லை! அதை தடுக்க சட்டத்தில் இடமில்லை!" உச்ச நீதிமன்றம் தீர்ப்பு -
வளர்த்த கடா..மார்பில் பாய்ந்ததடா! முதுகில் குத்திய கூட்டணி! மு.க.ஸ்டாலின் எடுத்த மிகப் பெரிய முடிவு! -
அதிமுக எம்எல்ஏக்கள் தகுதி நீக்க நடவடிக்கை.. சபாநாயகருக்கு அப்பாவு எழுப்பிய மூன்று கேள்விகள் -
டிரான்ஸ்பார்மர் முறைகேடு வழக்கு.. செந்தில் பாலாஜி மீது இறுகும் பிடி.. வழக்குப்பதிவு செய்தது சிபிஐ! -
ஆட்சிக்கு வந்த 1 மாதத்திற்குள்.. இன்ஸ்ட்டா முழுக்க தவெக எதிர்ப்பு அலை.. அப்படியே தலைகீழாக இருக்கே! -
முதல்வர் விஜய் ஆட்சி எப்படி இருக்கு? ஒரே வார்த்தையில் பதில் சொன்ன பாடகர் வேடன்.. இதிலும் சர்ச்சையா? -
Maridhas: நள்ளிரவில் யூடியூபர் மாரிதாஸ் ஜாமீனில் விடுதலை.. அவதூறு வழக்கில் நீதிபதி பிறப்பித்த முக்கிய உத்தரவு












Click it and Unblock the Notifications