கன்னியாகுமரியில் 1 டன் மூட்டையை "தூக்கிய" எஸ்.ஐ.. இட்லி மாவு பாக்கெட் போட ரேஷன் அரிசி? சபாஷ் போலீஸ்
கன்னியாகுமரி: ரேஷன் அரிசி பொருட்கள் கடத்தல் தொடர்பாக 18005995950 என்ற எண்ணிலும், 9677736557 என்ற வாட்ஸ் அப் எண்ணிலும் தொடர்பு கொள்ளலாம் என தமிழக காவல்துறை ஏற்கனவே பொதுமக்களிடம் கேட்டுக் கொண்டிருந்தது.. இதுபோக ரேஷன் அரிசி கடத்தலை தடுக்க பல்வேறு நடவடிக்கைகளையும் மேற்கொண்டு வருகிறது. எனினும் தமிழகத்தில் ரேஷன் அரிசி கடத்தல் என்பது முழுமையாக குறையவில்லை.. நேற்றுகூட கன்னியாகுமரியில் ஒரு அதிர்ச்சி சம்பவம் நடந்துள்ளது.
தமிழகத்தில், 35000 மேற்பட்ட ரேஷன் கடைகள் செயல்பட்டு வருகின்றன. இந்த கடைகள் மூலமாக, 2.20 கோடி ரேஷன் கார்டுகளுக்கு அரிசி, கோதுமை, பருப்பு, பாமாயில், சர்க்கரை உள்ளிட்ட பொருட்கள் மாநில அரசால், மானிய விலையில் வழங்கப்படுகிறது.

இதில், அட்டைதாரர்களுக்கு இலவசமாக வழங்கப்படும் அரிசிக்கு கேரளாவில் நல்ல விலை கிடைக்கிறது.. அதனால்தான், கேரளா மட்டுமல்லாமல், ஆந்திரா, கர்நாடகா என அண்டை மாநிலங்களுக்கு கடத்தி செல்வது தொடர்கதையாகிவிட்டது.
இட்லி மாவுக்கு ரேஷன் அரிசி
இந்த ரேஷன் பொருட்களை கடத்தி செல்வதென்றே, புரோக்கர்கள் சிலர் இருக்கிறார்களாம்.. இந்த அரிசியை கடத்தி கொண்டுவந்து விற்பதற்கு இவர்களுக்கு தனி கமிஷன்களும் உண்டு..
இவர்களிடமிருந்து பெறப்படும் ரேஷன் அரிசியை, மலிவு விலைக்கு வாங்கும் அண்டை மாநிலத்தவர்கள், அதே அரிசியை பாலிஷ் செய்து, அதிக விலைக்கு திரும்பவும் நம்மிடமே விற்றுவிடுகிறார்கள்.
அதேபோல, ரேஷன் அரிசியை மூட்டை மூட்டையாக வாங்கி, இட்லி மாவு அரைத்து பாக்கெட்டுகளில் விற்பனை செய்கிறார்கள். இரவு நேரங்களில் வேன்களை வைத்து, அரிசி மில்களுக்கு, ரேஷன் அரிசி கடத்தப்படுகிறது. இதற்கும் பிரத்யேகமான புரோக்கர்களும், அரிசி மூட்டைகளை பதுக்கி வைப்பதற்காக, பிரத்யேகமான குடோன்களும் இருக்கிறதாம்.
கன்னியாகுமரி சபாஷ்
இதுபோன்ற கடத்தல்களால், அட்டைதாரர்களுக்கு உரிய அரிசி, பருப்புகள் முறையாக கிடைக்காமல் போய்விடுகிறது.. எனவே, இதுபோன்ற அரிசி கடத்தலை ஒழிக்கும் முயற்சியில், தமிழக அரசு தீவிரமாக இறங்கியிருக்கிறது.. குறிப்பாக, தமிழக எல்லைகளில் இதற்கெனவே கூடுதல் விழிப்புணர்வுடன் செயல்பட்டு, ரேஷன் அரிசி கடத்தலில் ஈடுபடுவோர்களை மடக்கி பிடித்து, ரேஷன் கடத்தல் சம்பவங்களையும் கட்டுப்படுத்தி வருகிறார்கள்.
இப்போதுகூடகன்னியாகுமரியில் ஒரு அதிரடி வாகன சோதனையை நடத்தி அசத்தியிருக்கிறார்கள்.. கன்னியாகுமரி சுனாமி காலனி வழியாக வாகனங்களில் ரேஷன் அரிசி கடத்தி செல்லப்படுவதாக SI எட்வர்ட் பிரைட்டுக்கு ரகசிய தகவல் ஒன்று கிடைத்துள்ளது.
மூட்டை மூட்டையாக அரிசி
இதையடுத்து நேற்றிரவு எஸ்.ஐ. தலைமையிலான போலீசார் சுனாமி காலனி பகுதியில் வாகன சோதனையில் ஈடுபட்டனர். அப்போது அந்த வழியாக வந்த காரை சந்தேகத்தின்பேரில் நிறுத்தியுள்ளனர்.. பிறகு அந்த காரை சோதனை செய்தபோது, மூட்டை மூட்டையாக ரேஷன் அரிசி இருந்துள்ளதை கண்டு திகைத்து போயிருக்கிறார்கள்.
கிட்டத்தட்ட ஒரு டன் ரேஷன் அரிசி பதுக்கி வைத்து கடத்தி கொண்டு வந்தது கண்டுபிடிக்கப்பட்டது... இதையடுத்து அந்த காரை ஓட்டி வந்த டிரைவரிடம் போலீசார் விசாரணை மேற்கொண்டனர்..
அட்டைதாரர்களுக்கு நிம்மதி
அப்போதுதான், காரை ஓட்டி வந்தவர் களியக்காவிளையை சேர்ந்த வினு என்ற 49 வயது நபர் என்பதும், கன்னியாகுமரி சுற்றுவட்டாரத்திலிருந்து ரேஷன் அரிசியை வாங்கி, காரில் கேரளாவிற்கு கடத்தி செல்ல முயன்றதும் தெரியவந்தது... இதையடுத்து, வினுவை கைது செய்த போலீசார், அந்த காரையும், ரேஷன் அரிசியையும் அதிரடியாக பறிமுதல் செய்தனர்.
பறிமுதல் செய்யப்பட்ட 1 டன் ரேஷன் அரிசி மூட்டைகளை போலீசார் உணவு பொருட்கள் பிரிவு அதிகாரிகளிடம் ஒப்படைத்தனர். காவல்துறையினர் தொடர்ந்து முன்னெடுத்து வரும் இந்த நடவடிக்கைகள் ரேஷன் அட்டைதாரர்களுக்கு நிம்மதியையும், நம்பிக்கையையும் தந்து வருகிறது..
-
விஸ்வரூபம் எடுத்த ஆந்திர விவகாரத்தில் ட்விஸ்ட்.. விஜய்-க்கு நிம்மதி! 'உல்சான்' ஆக மாறும் தூத்துக்குடி -
மதிமுக எம்எல்ஏக்களின் ராஜினாமா முடிவு.. குமுறிய துரை வைகோ.. பிடி கொடுக்காத விஜய் -
வங்கியில் இருக்கும் மக்களின் தங்கத்தை டார்கெட் செய்யும் மத்திய அரசு? அவசர அவசரமாக அனுப்பப்பட்ட உத்தரவு! -
இந்தியாவை தாக்கும் பெரிய ஆபத்து.. விஷயம் கேட்டு எலான் மஸ்க் கூட அதிர்ந்து போனார்! பேரழிவு கன்பார்ம்? -
கிழிந்தது இரட்டை இலை.. அறிவாலயத்துக்கு பறக்கும் விராலிமலை விஜயபாஸ்கர்! சேர்ந்ததும் இந்த பொறுப்பா? -
சென்னை சூட்கேஸில் தலை இல்லாத சடலம்... இப்படி ஒரு பெண்ணா? பார்கோடு தந்த மரண துப்பு.. அலறிய பெரம்பூர் -
இனி அதிகபட்சமே ஆண்டுக்கு 4 சிலிண்டர் தான்.. எக்ஸ்ட்ரா சிலிண்டருக்கு ரூ.300 அதிகமாம்.. வெளியான தகவல் -
டெல்லியில் இந்தியா கூட்டணி ஆலோசனை.. திமுக, ஆம் ஆத்மி புறக்கணிப்பு.. வைகோ, திருமாவளவன் பங்கேற்பு -
மீண்டும் வந்த அதே வரலாற்று சிக்னல்.. தங்கம் விலை மிகப்பெரிய அளவில் சரிகிறது.. இப்போ வாங்கலாமா? -
ஸ்டாலின் காங்கிரஸுக்கு தந்த பவர்புல் ஷாக்! பாஜகவும் இல்லை.. அப்ப தேசிய அரசியலில் திமுகவின் ரூட் என்ன -
கேஸ் சிலிண்டர் விலை ரூ.1,600.. விலை உயர்வை அறிவித்த கையோடு.. மத்திய அரசு சொன்ன முக்கியமான பாயிண்டு -
இன்னும் சில மணி நேரம் தான்.. பூமியை நோக்கி வரும் 'சூரிய புயல்'! மெகா அலர்ட் கொடுத்த நாசா












Click it and Unblock the Notifications