"அந்தரங்கம்".. குறுக்கே வந்த பக்கத்து வீட்டுப்பையன்.. இதற்கு நடுவில் 2 வில்லன்கள்.. இன்னொரு க்ரீஷ்மா?
கன்னியாகுமரி: இன்னொரு க்ரீஷ்மா கன்னியாகுமரியில் முளைத்து விட்டார் போலும்.. உருகி உருகி காதலித்த அந்த இளைஞர், இப்போது ஆஸ்பத்திரியில் சீரியஸாக இருக்கிறார்... என்ன நடந்தது?
கன்னியாகுமரி மாவட்டம் வேர்கிளம்பியை அடுத்துள்ளது மாத்தார் என்ற பகுதி... இங்கு வசித்து வருபவர் பிரவீன்.. டிப்ளமோ முடித்துள்ளார்..
வெல்டராக வேலை பார்த்து வருகிறார்.. இவர் ஜெஸ்லின் என்ற பெண்ணுடன் நட்பு ஏற்பட்டுள்ளது.. ஜெஸ்லினுக்கு 19 வயதாகிறது.. இன்ஸ்டாகிராமில் இவர்கள் பழக்கமாகி உள்ளனர்..
அப்போ ஈரோடு.. இப்போ மதுரை.. இன்ஸ்டாகிராமில் பழக்கம்.. சீரழியும் சிறுமிகள் வாழ்க்கை.. பெற்றோரே உஷார்

ஜாலி
இன்ஸ்டாகிராம் மூலம் பழக்கம் ஏற்பட்டு, அதற்கு பிறகு நேரில் ஒருவரையொருவர் சந்திக்க முடிவு செய்துள்ளனர்.. அப்படி நேரில் பார்த்தபோது, இருவரும் நெருங்கி பழகினர்.. ஒருவரையொருவர் விரும்பினர்.. ஒருகட்டத்தில் பிரவீனை திருமணம் செய்யவும் ஜெஸ்லின் முடிவு செய்தார்.. அதற்காக தன்னுடைய வீட்டிற்கு வந்து பெண் கேட்கும்படியும் பிரவீனிடம் சொல்லி உள்ளார்.. காதலி சொன்னதால், பிரவீனும் தன்னுடைய வீட்டில் ஜெஸ்லினை பற்றி எடுத்து சொல்லி, பெற்றோரை அழைத்து சென்று பெண் கேட்டுள்ளார்..

கிஃப்ட்கள்
இரு குடும்பத்தினரும் உட்கார்ந்து பேசிமுடித்து, திருமணத்துக்கும் சம்மதம் தெரிவித்துவிட்டனர்.. ஆனால், கல்யாணத்தை மட்டும் 2 வருடங்கள் கழித்து வைத்துக் கொள்ளலாம் என்று ஜெஸ்லின் வீட்டில் சொல்லி உள்ளார்கள். இதற்கு பிரவீன் குடும்பத்தினரும் ஓகே சொல்லிவிட்டனர்.. கல்யாணத்துக்கு இரு குடும்பத்தினரும் சம்மதித்து விட்டதால், காதல் ஜோடி பல இடங்களில் சுற்றித்திரிந்தது. கணவன் மனைவி போல பழக ஆரம்பித்துவிட்டனர்.. வருங்கால மனைவி என்பதால், ஜெஸ்லினுக்கு விதவிதமான கிப்ட்களை உரிமையுடன் நிறைய வாங்கி தந்து கொண்டே இருப்பாராம் பிரவீன்..

வண்டவாளம்
இதனால் ஜெஸ்லினும் பூரித்து போனார்.. இந்நிலையில், பிரவீன் உடனான நெருக்கத்தை மெல்ல குறைத்து கொள்ள ஆரம்பித்துள்ளார் ஜெஸ்லின்.. முன்புபோல் சரியாக பேசுவதில்லையாம். அவரது பேச்சிலும் வித்தியாசம் தென்பட்டுள்ளது.. இதனால் பிரவீன் அதிர்ந்து போயுள்ளார். ஜெஸ்லினின் இந்த நடவடிக்கைக்கு காரணம் தெரியாமல் குழம்பினார்.. கவலையும், அத்துடன் சந்தேகமும் சேர்ந்து கொண்டது.. அதனால், ஜெஸ்லினின் நடவடிக்கைக்கு காரணம் என்ன என்பதை கண்காணிக்கவும் தொடங்கினார்.. அப்போதுதான் ஜெஸ்லினின் வண்டவாளம் தெரிந்தது.

வெள்ளிக்கிழமை
பக்கத்துவீட்டு டிரைவருடன் பழக்கம் வந்துவிட்டது.. அந்த டிரைவர் பெயர் ஜெனித்.. அவருடன் சில நாட்களாகவே நெருக்கமாக இருப்பதையும், பைக்கில் 2 பேரும் சுற்றி திரிவதையும் பிரவீன் நேரடியாகவே பார்த்துள்ளார். இதனால் ஜெஸ்லினை கண்டித்துள்ளார்.. இது ஜெஸ்லினுக்கு பிடிக்கவில்லை... தான் ஜெனித்தை காதலிப்பதாகவும், அவரையே திருமணம் செய்து கொள்ள போவதாகவும், தன்னை மறந்துவிட வேண்டும் என்றும் பிரவீனிடம் சொல்லி உள்ளார் ஜெஸ்லின்.. அத்துடன் தன் காதலையும் ஒரேயடியாக முறித்து கொண்டுவிட்டதையும் சொல்லி உள்ளார்..

மூஞ்சியிலேயே
இதனால், அதிர்ந்துபோன பிரவீன், உண்மையான காதலை விடமுடியாது என்று கெஞ்சியுள்ளார்.. அப்போதும் ஜெஸ்லின் மனம்மாறவே இல்லையாம்.. இதனால், உச்சக்கட்ட ஆத்திரமும், வெறுப்பும் அடைந்த பிரவீன், தான் இதுவரை வாங்கி கொடுத்த பரிசு பொருட்களை எல்லாம் திரும்ப கொடு என்று கேட்டாராம்.. அதற்கு ஜெஸ்லினும், உன் மூஞ்சியிலேயே எல்லாத்தையும் தூக்கி எறிகிறேன் என்று சொல்லிவிட்டு சென்றுள்ளார்.. இந்நிலையில், கடந்த வெள்ளிக்கிழமை காலை, பிரவீனுக்கு போன் செய்த ஜெஸ்லின், பரிசு பொருட்களை தருகிறேன், வேர்கிளம்பி பகுதிக்கு வா என்று அழைத்துள்ளார்..

ஓடிப்போய்டு
பிரவீனும் பைக்கில் அந்த இடத்துக்கு சென்றார்.. ஜெனித்துடன் வந்திருந்த ஜெஸ்லின், பரிசு பொருட்களை எல்லாம் தரமுடியாது, இதோடு ஓடிப்போய்விடு என்று பிரவீனை மிரட்டி உள்ளார்.. இதுகுறித்து பிரவீன் வாதம் செய்துள்ளார்.. அப்போது, திடீரென அங்கு மறைந்திருந்த 2 கூலிப்படை நபர்கள், பிரவீனை பைக்குடன் கீழே தள்ளிவிட்டு, சரமாரியாக தாக்கி உள்ளனர்.. இதனால் வலி பொறுக்க முடியாமல் பிரவீன் அலறி துடித்துள்ளார்.. ஜெனித்துடன் சேர்ந்து ஜெஸ்லின் இதை வேடிக்கை பார்த்து கொண்டே நின்றிருக்கிறார்.. பிரவீன் சத்தத்தை கேட்டு, அங்கிருந்த பொதுமக்கள் ஓடிவந்து அவரை மீட்டு தக்கலை அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.. அங்கு அவருக்கு தீவிர சிகிச்சை தரப்பட்டு வருகிறது..

ஓ மை காட்
இதனிடையே, சிசிடிவி ஆதாரங்களுடன் கொற்றிக்கோடு போலீஸ் ஸ்டேஷனில் புகார் ஒன்றை தந்துள்ளார் பிரவீன்.. இந்த புகாரின்பேரில் போலீசாரும் ஜெஸ்லின், + ஜெனித் + கூலிப்படையை சேர்ந்த 2 பேர் என மொத்தம் 4 பேர் மீது வழக்கு பதிவு செய்துள்ளனர்.. ஆனால், இந்த 4 பேருமே இப்போது எஸ்கேப் ஆகி உள்ளனர்.. அவர்களை தேடி கொண்டிருக்கிறார்கள்.. ஷாரோன் மரணத்தின் துயரமே இன்னும் அடங்கவில்லை.. விஷப்பெண் க்ரீஷ்மா குறித்த அதிர்ச்சியும் இன்னும் அடங்கவில்லை.. அதற்குள் இன்னொரு பெண்ணின் பயங்கரம் நம்மை அதிர வைத்து கொண்டிருக்கிறது..!

டீஸிங்
பக்கத்து வீட்டுபையனை திருமணம் செய்து கொள்வதாக ஜெஸ்லின் சொல்லியுள்ள நிலையில், அவருடனான பழக்கம் வெறும் ஒரு மாத காலம் என்கிறார்கள்.. ஜெஸ்லினின் நடவடிக்கை மாற துவங்கியதும், கடந்த ஒரு மாத காலமாகத்தானாம்.. அதேபோல, பரிசு பொருட்களை திருப்பி தரும் எண்ணம் ஜெஸ்லினுக்கு இல்லை என்றாலும், அவரை வெறுப்பேற்ற வேண்டும் என்பதற்காகத்தான், நேரடியாக வர சொன்னாராம்.. எப்படியும் பிரவீன் தன்னை விட்டு செல்ல மறுப்பார், தகராறு செய்வார் என்பதை முன்கூட்டியே அறிந்துதான், 2 கூலிப்படைகள் ஆட்களையும் தயாராக சம்பவ இடத்தில் நிற்க வைத்திருந்தாராம் ஜெஸ்லின்.. 2 முறை காதல், ஏமாற்றும் போக்கும், பழிவாங்குதல், கூலிப்படை நபர்கள், கொடூர தாக்குதல் என 19 வயது பெண்ணுக்குள் இத்தனை விஷயங்களா? என்பது மலைப்பாக உள்ளது..!!