கன்னியாகுமரிக்கு ஹேப்பி நியூஸ்.. பள்ளி மாணவர்களுக்கும் குஷி.. திடீர்னு சர்ப்ரைஸ் தந்த கலெக்டர்.. செம
கன்னியாகுமரி: சிவராத்திரியை முன்னிட்டு, கன்னியாகுமரி மாவட்டத்திற்கு இன்று உள்ளூர் விடுமுறை அறிவித்து மாவட்ட கலெக்டர் உத்தரவிட்டுள்ளார்.
இன்று மகா சிவராத்திரி கோலாகலமாக கொண்டாடப்பட்டுள்ளது.. சக்தியை வழிபட நவராத்திரி என்ற ஒன்பது இரவுகள் இருப்பது போல், சிவபெருமானை வழிபாடு செய்ய மகா சிவராத்திரி என்ற இன்றைய ஒரு நாள் மிகவும் முக்கியமானதாக கருதப்படுகிறது.

எனவே, இன்றைய நாளின்போது, மாலை 6 மணி முதல் மறுநாள் காலை 6 மணி வரையான 4 ஜாம வேளைகளில் சிவபெருமானை பூஜை செய்வது மோட்சத்தை வழங்கும் என்பது வழக்கமான ஐதீகமாக உள்ளது..
சிறப்பு பூஜைகள்: அந்தவகையில் இன்று அதாவது 8ம் தேதி மாலை 6 மணி தொடங்கி நாளை 9ம் தேதி காலை 6 மணி வரை மகா சிவராத்திரி தினம். சிவராத்திரி தினத்தன்று இரவு கண் விழிப்பது மிக அவசியமானதாக உள்ளது..
அதேபோல, சிவாலயங்களிலும் சிறப்பு வழிபாடுகள் நடைபெற உள்ளன.. எனவே, சிவராத்திரியை முன்னிட்டு, கன்னியாகுமரி மாவட்டத்திற்கு இன்று ஒருநாள் உள்ளூர் விடுமுறை அளித்து மாவட்ட கலெக்டர் பி.என்.ஸ்ரீதர் உத்தரவிட்டுள்ளார்.
கலெக்டர் அறிவிப்பு: இதுதொடர்பாக கலெக்டர் ஸ்ரீதர் வெளியிட்டுள்ள செய்தி குறிப்பில் உள்ளதாவது: "கன்னியாகுமரி மாவட்டத்திற்கு மஹாசிவராத்திரியினை முன்னிட்டு இன்று கன்னியாகுமரி மாவட்டத்தில் இயங்கும் அனைத்து மாநில அரசு அலுவலகங்கள் மற்றும் கல்வி நிறுவனங்களுக்கு உள்ளூர் விடுமுறை வழங்கி உத்தரவிடப்படுகிறது.
08.03.2024 இன்று அறிவிக்கப்பட உள்ள உள்ளூர் விடுமுறையை ஈடு செய்யும் விதமாக 2024 மார்ச் நான்காவது சனிக்கிழமை (23.03.2024) அன்று கன்னியாகுமரி மாவட்டத்தில் இயங்கும் அனைத்து மாநில அரசு அலுவலகங்கள் மற்றும் கல்வி நிறுவனங்களுக்கும் வேலை நாளாக இருக்கும்.
விடுமுறை: கன்னியாகுமரி மாவட்டத்திற்கு மஹாசிவராத்திரிக்கு உள்ளூர் விடுமுறை செலவாணி முறிச் சட்டம் 1881 (Under Negotiable Instruments Act 1881)-இன் படி அறிவிக்கப்படவில்லை என்பதால் இன்று கன்னியாகுமரி மாவட்டத்தில் தலைமைக் கருவூலம் மற்றும் கிளைக் கருவூலங்கள் அரசு ஈடுபாடு சம்பந்தப்பட்ட அவசரப் பணிகளைக் கவனிக்கும் பொருட்டு, தேவையான பணியாளர்களைக் கொண்டு இயங்கும்" என்று அந்த செய்திக்குறிப்பில் தெரிவித்துள்ளார்.












Click it and Unblock the Notifications