Get Updates
Get notified of breaking news, exclusive insights, and must-see stories!

போலீசுக்கே டிமிக்கி தர பார்த்த பலே பாதிரியார்! இங்கும் அங்கும் மாறி மாறி.. கடைசியில் கைதானது எப்படி?

தேவாலயத்திற்கு வரும் பெண்களுடன் பேசி அவர்களின் போன் எண்களை வாங்கி உள்ளார்.

Subscribe to Oneindia Tamil

கன்னியாகுமரி: கன்னியாகுமரியில் ஆபாச வீடியோ சர்ச்சையில் சிக்கிய மதபோதகர் பெனெடிக் ஆண்டோ தற்போது கைது செய்யப்பட்டு உள்ளார்.

இவர் கைது செய்யப்பட்டது எப்படி என்பது தொடர்பான விவரங்கள் வெளியாகி உள்ளன.

சர்ச்சுக்கு வரும் பெண்களை ஏமாற்றி, அவர்களை தனது பாலியல் தேவைக்கு பயன்படுத்தியதோடு, அவர்களிடம் இருந்து இந்த பாதிரியார் பணம் பறித்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது. இது தொடர்பாக போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரித்து வருகின்றனர். இவர் தொடர்பாக பல அதிர்ச்சி அளிக்கும் தகவல்கள், விஷயங்கள் வெளியாகி உள்ளன.

புகார்

புகார்

நர்சிங் படிக்கும் மாணவி ஒருவர் பெனெடிக் ஆண்டோ மீது போலீசில் புகார் அளித்துள்ளார். போலீசார் இதில் விசாரணை நடத்தி வருகின்றனர். இவரின் வீடியோக்கள், புகைப்படங்கள் இணையத்தில் வைரலாகி உள்ளன. ஆபாச வீடியோக்கள் பல அடுத்தடுத்து வெளியாகி உள்ளன. இவர் தற்போது அந்த கிறிஸ்துவ வழிபாட்டு தலத்தில் இருந்து ராஜினாமா செய்துவிட்டதாக கூறப்படுகிறது. இவர் பெண்களை மடக்கவும், தன்னிடம் வழிக்கு வராத பெண்களை தொல்லை செய்யவும், வீட்டில் இருந்து ஆண்கள் யாராவது பேசினால் அவர்களை சமாளிக்கவும் நிறைய வழி முறைகளை வைத்து இருந்துள்ளார் என்று கூறப்படுகிறது. அதன்படி இவர் பல பெண்களிடம் போனில் பேசி வந்துள்ளார்.

பெண்களை ஏமாற்றினார்

பெண்களை ஏமாற்றினார்

முக்கியமாக கல்லூரி மாணவிகளிடம் பேசி வந்துள்ளார். தேவாலயத்திற்கு வரும் பெண்களுடன் பேசி அவர்களின் போன் எண்களை வாங்கி உள்ளார். அதன்பின் அவர்களிடம் வாட்ஸ் ஆப் மூலம் பேசி உள்ளார். அதில் கொஞ்சம் கொஞ்சமாக நெருக்கம் ஆகி ஆபாசமாக பேச தொடங்கி உள்ளார். பெனெடிக் ஆண்டோ பேச்சில் சில பெண்கள் அப்படியே மயங்கி உள்ளனர். இது அதன்பின் வீடியோ கால் வரை சென்றுள்ளது. வீடியோ காலில் பெண்களிடம் ஆபாசமாக பேசி உள்ளார். அதோடு அவர்களை நிர்வாணமாக நிற்க சொல்லி அதை ஸ்கிரீன் ரெக்கார்ட் செய்துள்ளார். இது போக பெண்களை தனியாக அழைத்து அவர்களிடம் தவறாக நடந்து கொண்டு இருக்கிறார். அதன்பின் இந்த ஆபாச வீடியோக்களை வைத்து பெண்களை மிரட்டி இருக்கிறார்.

போலீஸ் தகவல்

போலீஸ் தகவல்

நர்சிங் மாணவி கொடுத்த புகாரின் பேரில் பாதிரியாரை பிடிக்க போலீசார் தனிப்படை அமைத்து இருந்தனர். முதல் கட்ட தகவல்களில் அவர் பெங்களூர் சென்றதாக தகவல் வெளியாகி இருந்தது. இதையடுத்து அவரது பிடிக்க போலீசார் பெங்களூர் சென்றனர். அங்கே தீவிரமாக விசாரணை மற்றும் சோதனைகள் மேற்கொள்ளப்பட்டது. அப்போதுதான் ஆண்டோ தப்பி ஓடிவிட்டதாகவும், மீண்டும் தமிழ்நாடு அல்லது கேரளா சென்று இருக்கலாம் என்றும் தகவல் தெரிவிக்கப்பட்டு இருக்கிறது. முக்கியமாக அவர் நாகர்கோவில் அல்லது கேரளாவில் பதுங்கி இருக்கலாம் என்று போலீசுக்கு தகவல் சென்றுள்ளது.

கைது செய்தது எப்படி?

கைது செய்தது எப்படி?

நாகர்கோவிலில் போலீசுக்கு இன்பார்மர்கள் தெரிவித்த தகவலில், அவர் அங்கே இல்லை என்பது உறுதி செய்யப்பட்டு இருக்கிறது. இதையடுத்தே நாகர்கோவிலில் தேடுவதை நிறுத்திவிட்டு போலீசார் கேரளாவில் பாதிரியாரை தேடி உள்ளனர். அங்கே இருந்து போலீசுக்கு கிடைத்த சோர்ஸ் தகவல்களின்படி அவர் கேரளாவில் வைத்து கைது செய்யப்பட்டு இருக்கிறார். நாகர்கோவில் - கேரளா எல்லையில் அவர் கைது செய்யப்பட்டு இருக்கிறார். பெங்களூர் போன பாதிரியார் அங்கிருந்து கார் மூலம் கேரளா வழியாக நாகர்கோவில் எல்லை வரை வந்து கேரளா பார்டரை தாண்டாமல் தலைமறைவாகி இருந்ததாக கூறப்படுகிறது.

More From
Prev
Next
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+