அண்ணாத்த ஆடுறார்.. ஒத்திக்கோ ஒத்திக்கோ..! சிலம்பம் சுற்றி அசர வைத்த அமைச்சர் மனோ தங்கராஜ்!
சிலம்பம் சுற்றி கவனம் ஈர்த்த அமைச்சர் மனோ தங்கராஜ்
கன்னியாகுமரி: நாகர்கோவிலில் நடைபெற்ற அரசு விழா ஒன்றில் கலந்துகொண்ட தகவல் தொழில்நுட்பத் துறை அமைச்சர் மனோ தங்கராஜ், அங்கு சிலம்பம் சுற்றி பார்வையாளர்களை அசர வைத்திருக்கிறார்.
சிலம்பாட்டத்தில் கை தேர்ந்த வீரரை போல் கடகடவென அமைச்சர் மனோ தங்கராஜ் சிலம்பம் சுற்றியது சமூக வலைதளங்களிலும் பகிரப்பட்டு வருகிறது.
களரி, சிலம்பம், கபடி, உள்ளிட்ட விளையாட்டுகள் மீது அமைச்சர் மனோ தங்கராஜுக்கு எப்போதுமே ஆர்வம் அதிகம் என்கிறார்கள் அவரை நெருங்கி அறிந்தவர்கள்.

அமைச்சர் மனோ தங்கராஜ்
தமிழ்நாடு தகவல் தொழில்நுட்பத் துறை அமைச்சரும், கன்னியாகுமரி மேற்கு மாவட்ட திமுக செயலாளருமான மனோ தங்கராஜ் எப்போதுமே கொஞ்சம் பரபரப்பாக இயங்கக் கூடியவர். சென்னையில் இருந்தாலும் சரி, சொந்த ஊரில் இருந்தாலும் சரி தன்னை பிஸியாகவே வைத்துக் கொள்ளும் இவர், அவ்வப்போது சில அதிரடிகளையும் அரங்கேற்றுவார். அண்மையில் கூட ஒரு பேரூராட்சி செயல் அலுவலரிடம் பேசிய போது, ஒரு மினிஸ்டரிடம் பேசுகிறோம் என்பதை கவனத்தில் கொள்ளுமாறு பகிரங்கமாகவே எச்சரிக்கை விடுத்திருந்தார்.

சிலம்பம் சுற்றிய அமைச்சர்
அதேபோல் மழை, புயல், வெள்ளக் காலங்களில் அதிகாரிகளை விரட்டி விரட்டி வேலை வாங்குவதில் தனித் திறமை மிக்கவர். இப்படி ஆக்டிவாகவே வலம் வரும் அமைச்சர் மனோ தங்கராஜ், நாகர்கோவிலில் முதலமைச்சர் கோப்பைக்கான விளையாட்டுப் போட்டிகளை தொடங்கி வைக்கச் சென்றிருக்கிறார். அப்போது அங்கிருந்த சிலர் அமைச்சரையும் பாரம்பரிய விளையாட்டுகளில் ஒன்றான சிலம்பம் சுற்றுமாறு கேட்டுக் கொண்டதற்கிணங்க மறுப்பேதும் சொல்லாமல் களத்தில் இறங்கியிருக்கிறார்.

ஆரோக்யமான உடல்
கையில் கம்பு கிடைத்தவுடன் கை தேர்ந்த சிலம்பாட்ட வீரரை போல் சும்மா சுற்றி சுற்றி சிலம்பாட்டம் ஆடி பார்வையாளர்களை அசத்தியுள்ளார். இதனிடையே இந்த வீடியோவை தனது டிவிட்டர் பக்கத்திலும் பதிவாக வெளியிட்டிருக்கிறார் அமைச்சர் மனோ தங்கராஜ். வயது 50ஐ கடந்தாலும் உடல்நலத்தை கட்டுக்கோப்பாக வைத்திருக்கிறேன் என்பதையும் அமைச்சர் மனோ தங்கராஜ் இதன் மூலம் சூசகமாக உணர்த்தியுள்ளார்.

விளையாட்டரங்கம்
இதனிடையே கன்னியாகுமரி மாவட்டம் குலசேகரத்தில் ரூ.3 கோடி மதிப்பில் விளையாட்டரங்கம் அமைப்பதற்கான நிதி ஒதுக்கீடு பெறப்பட்டுள்ளதாகவும் விரைவில் பணிகள் தொடங்கப்படும் எனவும் அமைச்சர் மனோ தங்கராஜ் கூறியிருக்கிறார்.
-
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
தவெகவின் முதல் ராஜ்யசபா எம்.பி யார்? 4 பேரில் ஒருவர் பெயரை 'டிக்' அடிக்க ரெடியாகும் விஜய்! -
20 நிமிடம்.. அஜித்குமார் தாயாருக்கு முதல்வர் விஜய் நேரில் அஞ்சலி.. சென்னை வீட்டுக்கு சென்று ஆறுதல் -
"விஜய்" பெயரை யாரும் சொல்லக் கூடாது.. வார்த்தையைவிட்ட துணை சபாநாயகர்.. பத்திரிகையாளர் சொன்ன பதில்! -
திமுகவை தோற்கடித்த 8 அதிர்ச்சி காரணங்கள்.. ஸ்டாலின் மேஜைக்கு போன இறுதி ரிப்போர்ட்.. உள்ளே ஷாக்! -
ஓரம் கட்டப்பட்ட சித்தராமையா.. ஆட்சி அமைக்க டி.கே.சிவகுமாருக்கு ஆளுநர் அழைப்பு! ஆட்டம் ஆரம்பம் -
விஜய் என் வீடு தேடி வந்து எனக்கு துணை முதல்வர் பதவி கொடுத்திருப்பார்! பிரேமலதா பரபரப்பு தகவல் -
என்னை தொட்டிருக்கவே கூடாது.. கோவையில் வேலுமணிக்கு தண்ணி காட்டும் எடப்பாடி.. அடித்து ஆடும் வேலுசாமி -
விஜய்-ஐ அடித்து மேலே வந்த சிவக்குமார்.. லீமா ரோஸ் கொடுத்த ஷாக்! -
கொஞ்சம் அவகாசம் கொடுங்க.. எங்களுக்கு ஓட்டு போட்டதற்கு பெருமையடைய வைப்போம்.. அமைச்சர் ரமேஷ் -
ஒரு 'நாளுக்கு' ரூ.22.63 லட்சம் சம்பளம் வாங்கும் இன்போசிஸ் ஊழியர்.. யாருப்பா அது! -
திருமணம் முதல் அஜித் தாயார் அஞ்சலி வரை! சுப, துக்க நிகழ்வுகளில் மட்டும் விஜய்யுடன் வருகிறாரா த்ரிஷா?












Click it and Unblock the Notifications