தொடரும் சோதனை.. குமரி காங். வேட்பாளர் வசந்தகுமாரின் உறவினர்கள் வீடுகளிலும் ஐடி ரெய்டு!
குமரி காங். வேட்பாளர் வசந்தகுமாரின் உறவினர் வீடுகளில் வருமான வரித்துறையினர் சோதனை செய்து வருகிறார்கள்.
கன்னியாகுமரி: குமரி காங். வேட்பாளர் வசந்தகுமாரின் உறவினர் வீடுகளில் வருமான வரித்துறையினர் சோதனை செய்து வருகிறார்கள்.
லோக்சபா தேர்தலில் காங்கிரஸ் கட்சி சார்பாக கன்னியாகுமரி தொகுதியில் போட்டியிடுகிறார் காங்கிரஸ் எம்எல்ஏ எச். வசந்த குமார். இவர் இப்போது நாங்குநேரி தொகுதி எம்எல்ஏவாக இருக்கிறார். இவர் தேர்தலுக்காக தீவிரமாக பிரச்சாரம் செய்து வருகிறார்.

இந்த நிலையில் தற்போது இவருக்கு நெருக்கமானவர்களின் வீடுகளில் தீவிரமாக வருமான வரித்துறை சோதனை நடந்து வருகிறது. தமிழகம் முழுக்க இன்றும் பல இடங்களை, ஐடி துறையினர் சோதனை நடத்தி வருகிறார்கள். முக்கியமாக எதிர்கட்சிக்கு நெருக்கமானவர்களின் வீடுகளில் இந்த சோதனை நடக்கிறது.
அதன் ஒருகட்டமாக காலையில்தான் அரக்கோணம் அருகே வி.ஆர்.வி. லுங்கி நிறுவனத்தில் ரெய்டு நடந்தது. இந்த சோதனையில் முறையான ஆவணம் இல்லாத ரூ.1 கோடி பறிமுதல் செய்யப்பட்டது .
இந்த நிலையில்தான் தற்போது வசந்தகுமாரின் உறவினரிடம் வருமான வரித்துறையினர் சோதனை செய்து வருகிறார்கள். வசந்தகுமாரின் மைத்துநரான காமராஜ் என்பவர் நாகர்கோவிலில் உள்ள தனியார் ஹோட்டலில் தங்கி இருக்கிறார். அங்கு சோதனை நடந்து வருகிறது.
அதேபோல் வசந்தகுமாருக்கு நெருக்கமானவர்களின் வீடுகளிலும் ஐடி துறையினர் ரெய்டு நடத்தி வருகிறார்கள். இந்த சோதனை காரணமாக குமரியில் பரபரப்பான சூழ்நிலை நிலவி வருகிறது.
-
மம்தாவிற்காக எம்பி பதவியை ராஜினாமா செய்யும் யூசுப் பதான்? பேச்சுவார்த்தையில் சவுரவ் கங்குலி? பின்னணி -
3 நாளில் மன்னிப்பு கேட்க வேண்டும்.. தவெக எம்எல்ஏ பல்லவிக்கு திமுக அவதூறு நோட்டீஸ்.. என்ன மேட்டர்? -
திருப்பரங்குன்றத்தில் தீபம்.. முதல்வர் விஜய் ஒப்புதல் கொடுப்பார்னு நம்புறோம்.. இந்து முன்னணி! -
விழுப்புரத்தில் திருமாவளவன் திறக்க இருந்த அம்பேத்கர் சிலை.. இரவோடு இரவாக அகற்றப்பட்டது ஏன்? -
தமிழ்நாட்டுக்கு பெரிய அடி.. ஆந்திராவுக்கு கைமாறிய மசாகான் டாக் திட்டம்! தொழில் அமைச்சருக்கு சிக்கல்! -
டாஸ்மாக்கில் ரூ.3,600 கோடி ஊழல்.. லிஸ்ட் எடுத்த தவெக.. அமைச்சர் விக்னேஷ் திடுக் தகவல் -
கும்கி படம் எடுத்த தேனி கொட்டக்குடி கிராமத்தின் 56 வருட கனவு.. நிறைவேற்றிய தமிழக அரசு -
திருவண்ணாமலை செய்யாறு வீடுகளில் மின்சார மீட்டர்கள் பழுதுக்கு அணில் காரணம்.. மின்சார வாரியம் பதில் -
திருச்சி கிழக்கு இடைத்தேர்தலை எதிர்கொள்ள திமுகவின் இரட்டை வியூகம்.. இள ரத்தத்திற்கு முக்கியத்துவம்! -
வாண்டடா வண்டில ஏறிய செ.பா! ஹார்ட் டிஸ்க் திருட்டு என்றதும் பதற்றம் ஏன்? சிடிஆர் நிர்மல்குமார் கேள்வி -
சென்னை ரோட்டை கண்ணில் ஒத்திக்கலாம்.. பெங்களூர் நிலைமை படுமோசம்.. டிகே சிவகுமார் என்ன செய்வார்? -
விலகிய 113 ஒன்றிய செயலாளர்கள்.. தவெகவின் ஆபரேஷனால் மிரண்ட அறிவாலயம்! ஸ்டாலின் எடுத்த முக்கிய முடிவு












Click it and Unblock the Notifications