திரைப்பட சண்டை பயிற்சியாளர் கனல் கண்ணன் மீண்டும் கைது! கிறிஸ்தவ மதத்தை அவமதித்ததாக அதிரடி

Subscribe to Oneindia Tamil

கன்னியாகுமரி: மதபோதகர் ஒருவர் பெண்ணுடன் சேர்ந்து நடனமாடும் வீடியோவை தமிழ் பாடலுடன் எடிட் செய்து ட்விட்டரில் பதிவிட்ட வழக்கில் இந்து முன்னணி நிர்வாகியும், பாஜக ஆதரவாளருமான திரைப்பட ஸ்டண்ட் மாஸ்டர் கனல் கண்ணனை இன்று சைபர் கிரைம் போலீசார் அதிரடியாக கைது செய்தனர்.

திரைப்பட ஸ்டண்ட் மாஸ்டராக இருப்பவர் கனல் கண்ணன். இவர் இந்து முன்னணி மாநில கலை பண்பாட்டு பிரிவின் செயலாளராக பொறுப்பு வகித்து வருகிறார். தற்போது பாஜக ஆதரவு நிலைப்பாட்டில் இருந்து வரும் கனல் கண்ணன், அக்கட்சியின் கூட்டங்களிலும் பங்கேற்று வருகிறார்.

Kanal Kannan arrested by Kanyakumari Cyber Crime police after posting defamatory video on Christianity

இந்நிலையில் தான் கடந்த 18 ம் தேதி மாலை 5.50 மணிக்கு கனல் கண்ணன் தனது ட்விட்டர் பதிவிட்ட வீடியோ ஒன்றை பதிவிட்டு கருத்து கூறியது பெரும் சர்ச்சையை கிளப்பியது. அந்த வீடியோவில் கிறிஸ்தவ மதபோதகர் உடை அணிந்த நபர் பெண்ணுடன் நடனம் ஆடும் வகையில் காட்சிகள் இடம் பெற்றிருந்தது தான். அந்த வீடியோவின் பின்னணியில் தமிழ் பாடல் ஓடுகிறது.

இந்த பதிவில் கனல் கண்ணன், ‛‛வெளிநாட்டு மத கலாச்சாரத்தின் உண்மை நிலை இதுதான்??? மதம் மாறிய இந்துக்களே சிந்தியுங்கள்!!!! மனம் திரும்புங்கள்!!!'' என பதிவிட்டு இருந்தார். இது விவாதத்தை கிளப்பியது. மேலும் பலரும் எதிர்ப்பு தெரிவித்தனர். அவர் கிறிஸ்தவ மதத்தை அவமரியாதை செய்ததாக குற்றச்சாட்டு எழுந்தது.

இதையடுத்து கன்னியாகுமரி மாவட்டம் திட்டு விளையை சேர்ந்த திமுக ஐடி பிரிவு துணை அமைப்பாளர் ஆஸ்டின் பெனட் என்பவர் கன்னியாகுமரி எஸ்பி அலுவலகத்தில் உள்ள சைபர் கிரைம் போலீசில் புகார் செய்தார். இந்த புகாரை தொடர்ந்து கனல் கண்ணன் மீது 2 பிரிவுகளில் வழக்குப்பதிவு செய்யப்பட்டது.

இந்திய தண்டனை சட்டம் 295-ஏ (வேண்டுமென்றே மத உணர்வுகளை புண்படுத்தும் வகையில் செயல்படுதல்) மற்றும் இந்திய தண்டனை சட்டம் 506(2) ஆகிய பிரிவுகளின் கீழ் கனல் கண்ணன் மீது வழக்கு பாய்ந்தது. மேலும் வழக்கு தொடர்பாக விசாரணைக்கு ஆஜராக வேண்டும் என கனல் கண்ணனுக்கு போலீசார் நோட்டீஸ் அனுப்பி இருந்தனர்.

இதையடுத்து இன்று கனல் கண்ணன் கன்னியாகுமரி மாவட்ட எஸ்பி அலுவலகத்தில் உள்ள சைபர் க்ரைம் போலீசில் ஆஜரானார். அவரிடம் போலீசார் விசாரணை நடத்தி வந்தனர். இந்த விசாரணையின் முடிவில் போலீசார் கனல் கண்ணனை அதிரடியாக கைது செய்துள்ளனர். கனல் கண்ணன் சர்ச்சைக்குரிய வகையில் பேசி கைது செய்யப்படுவது இது முதல் முறையல்ல.

இதற்கு முன்பு சென்னை மதுரவாயலில் நடந்த நிகழ்ச்சியில் ஸ்ரீரங்கம் ரங்கநாதர் கோவில் எதிரேயுள்ள பெரியார் சிலையை உடைக்க வேண்டும் என அவர் பேசியதற்கு கடும் எதிர்ப்பு கிளம்பியது. இதுதொடர்பாக பெரியார் திராவிடர் கழகம் சார்பில் அளித்த புகாரில் அவர் கைது செய்யப்பட்டார். அதன்பிறகு ஜாமீனில் வெளியே வந்த கனல் கண்ணன் தொடர்ந்து சமூக வலைதளங்களில் கருத்துகள் பதிவிட்ட நிலையில் தற்போது கிறிஸ்தவ மதத்தை அவமதித்ததாக மீண்டும் கைது செய்யப்பட்டுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+