''மத்தியில் ஆட்சி மாற்றம் நிகழ்வது உறுதி''! பாஜகவை வெளுத்து வாங்கிய கனிமொழி!
கன்னியாகுமரி: மத்தியில் ஆட்சி மாற்றம் நிகழப்போவது உறுதி என்றும் மதக்கலவரத்தையோ ஜாதி, பிரச்சனைகளையோ தூண்டி அதில் அரசியல் செய்யலாம் என்ற நிலைப்பாடு உடையவர்கள் பாஜகவினர் எனவும் கனிமொழி எம்.பி. விமர்சித்துள்ளார்.
திமுக தேர்தல் அறிக்கையில் இடம்பெற வேண்டிய அம்சங்கள் குறித்து நாகர்கோவிலில் பொதுமக்களை சந்தித்து கருத்துக் கேட்ட போது அவர் பேசியதாவது;

''திமுக தேர்தல் அறிக்கை குழு சந்திப்பு நிகழ்ச்சியில் கலந்து கொள்வதற்காக வந்திருக்கக்கூடிய அத்தனை பேருக்கும் எங்களுடைய நன்றியை தெரிவித்துக் கொள்கிறேன். உங்கள் அத்தனை பேருக்கும் தெரியும் திராவிட முன்னேற்றக் கழகத்தின் தேர்தல் அறிக்கை என்பது மக்களை சந்தித்து மக்களுடைய கருத்துக்களை, கோரிக்கைகளை கேட்டு எழுதப்படக்கூடிய மக்களுடைய தேர்தல் அறிக்கையாகத்தான் நம்முடைய தேர்தல் அறிக்கை இருக்கும். ''
''இப்பொழுது அந்த வழியில் தொழிலாளர்கள், நம்முடைய முதலமைச்சர், கழகத் தலைவர் கட்டளைக்கு இணங்க தேர்தல் சார்ந்து தொழிலாளர், விவசாயிகள், மீனவர்களை சந்தித்து அவர்களுக்கு இருக்கக்கூடிய அந்த கோரிக்கைகளை எல்லாம் தேர்தல் அறிக்கையாக உருவாக்கக்கூடிய அந்த வாய்ப்பை நாங்கள் பெற்று இருக்கிறோம்.''
''இந்த தேர்தல் அறிக்கை என்பது நம்முடைய உரிமைகளை மீட்பதற்கான ஒரு தேர்தல் அறிக்கை. ஒன்றியத்தில் இருக்கக்கூடிய அரசாங்கம் கொஞ்சம் கொஞ்சமாக மாநில உரிமைகளைச் சிதைத்துக் கொண்டிருக்கிறது. ''

''அதேபோல மக்களைப் பிரித்தாளக்கூடிய ஒரு மனப்பான்மையோடு நம்முடைய ஒற்றுமையை சிதைத்து ஒவ்வொரு மாநிலத்தின் அடையாளங்களை எல்லாம் அழித்து மக்களுக்கு இடையே பிரச்சனைகளை உருவாக்கி, வேறு பிரச்சனைகளைக் கொண்டு வந்து அங்கே முன்வைத்து மக்கள் சந்திக்கக்கூடிய அன்றாட பிரச்சனைகளாக இருக்கக்கூடிய வேலைவாய்ப்பு இல்லாதது, விவசாயிகள் பாதிக்கப்பட்டிருக்கிறது, மீனவர்களுடைய உரிமைகளை ஒவ்வொரு நாளும் பறிக்கப்படுவது இவைகள் தான் மறக்கடிக்க செய்து வேறு ஒரு புதிய மதக்கலவரத்தையோ ஜாதி, பிரச்சனைகளையோ தூண்டி அதில் அரசியல் செய்யலாம் என்ற நிலைப்பாடு உடையவர்கள் தான்.''
''ஒன்றிய ஆட்சி நிச்சயமாக மாறும் என்ற நம்பிக்கையோடு நாம் அந்த ஆட்சி மாற்றத்திற்கான உழைப்பை முதலில் செய்து கொண்டிருக்கிறோம். அந்த ஆட்சி மாற்றம் வந்த பிறகு நம்முடைய உரிமைகளை மீட்பதற்காக நம்முடைய கோரிக்கைகளை நிறைவேற்றுவதற்காக அதையும் நீங்கள் எங்களிடம் வழங்க வேண்டும். நிச்சயமாக நம்முடைய முதலமைச்சராக உங்களுடைய வழிகாட்டுதலில் வழியே ஒரு ஆட்சி மாற்றம் இந்த நாட்டிலே உருவாகும். அந்த ஆட்சி மாற்றம் மூலம் இந்த நாட்டை மீட்டெடுப்போம். இந்த நாட்டில் ஜனநாயகத்தை பாதுகாத்து மக்களை ஒற்றுமையாக முன்னேற்றப் பாதையில் அழைத்துச் செல்வோம்.''
-
Indoor Plants: வீட்டின் காற்றைச் சுத்திகரித்து ஆக்ஸிஜன் அளவை அதிகரிக்கும் இன்டோர் செடிகள்! -
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
தேசிய அளவில் பலவீனமடையும் பாஜக எதிர்ப்பு.. காங்கிரஸ் செயலால் திட்டத்தை மாற்றும் திமுக! -
“தவெகவுக்கு ஓட்டு போடாத தென்காசி மக்களும் பாதிக்கப்படுகிறோம்”.. நள்ளிரவில் எழுந்த திடீர் போராட்டம்! -
"பச்சை துரோகம்.. வாக்கு அறுவடை முடிந்ததும் ரிசர்வ் வங்கியை காரணம் காட்டுவதா?" தங்கம் தென்னரசு தாக்கு -
ஐடி ஊழியர்களை விட "இவர்கள்" காட்டில்தான் பணமழை! அடுத்த 5 ஆண்டுகளில் இந்தியாவில் ஏற்பட போகும் மாற்றம் -
நன்றி மறக்காத விஜய்.. தவெகவின் முதல் ராஜ்யசபா எம்பி யார்? ரேசில் முன்னணியில் ’லெஃப்ட் - ரைட்’ ஹேண்ட் -
விவசாயக் கடன் தள்ளுபடி.. பொய் சொல்லி ஏமாற்ற மாட்டேன்! விவசாயிகளே கவலைப்படாதீங்க.. விஜய் உத்தரவாதம் -
வளைகுடாவில் இந்தியாவிற்கு கிடைத்தது மாற்றுப்பாதை.. ஓமனால் பெரிய குட்நியூஸ் -
கட்டப்பா கூட ஒரு டைம்தான் குத்துனாரு.. இப்படி தினம் தினம் பண்ணுறீங்களே! கோபத்தின் உச்சியில் ஸ்டாலின் -
DMART முதலாளிக்கு இப்படியொரு பிஸ்னஸ் இருக்கா.. ஒரு வீட்டுக்கு ரூ.27.5 லட்சம் .. ஆடிப்போன மும்பை மக்கள்! -
சோறு இல்லைனா விளையாட முடியுமா? விவசாயத்தை விட விளையாட்டு கஷ்டம் என்ற ஆதவ்விற்கு கஸ்தூரி ராஜா கேள்வி












Click it and Unblock the Notifications