10ம் வகுப்பு மாணவியின் ரூமில் நுழைந்த அப்பா.. டக்னு ஜன்னலில் தொங்கிய உருவம்.. பரபரத்த கன்னியாகுமரி
கன்னியாகுமரி: கன்னியாகுமரி மாவட்டத்தில் மாணவிகளின் பாதுகாப்பு நாளுக்கு நாள் கேள்விக்குறியாகி வரும்நிலையில், அவர்களின் மனநிலைமையையும் அறிய வேண்டிய தேவை பெற்றோர்களுக்கு ஏற்பட்டுள்ளது. இந்நிலையில், 10ம் வகுப்பு மாணவி ஒருவருக்கு என்ன நடந்தது தெரியுமா?
சில நாட்களுக்கு முன்பு, பிளஸ் 1 படிக்கும் மாணவிக்கு பாலியல் தொல்லை தந்த விவகாரம் மிகப்பெரிய அதிர்ச்சியை ஏற்படுத்தியிருந்தது.. கடந்த ஏப்ரல் மாதம், தக்கலை அருகே பெருஞ்சிலம்பு பகுதியை சேர்ந்த பிளஸ் 1 மாணவி, கணித தேர்வு முடிந்து, வழக்கம்போல் அரசு பஸ்ஸில் ஏறி பயணித்து, தன்னுடைய வீட்டிற்கு வந்துள்ளார். வீட்டின் சாவியை திறந்ததுமே, மாணவியை பின்தொடர்ந்து வந்த மர்ம நபர், மாணவியின் முகத்தில் கைக்குட்டையை வைத்து மூடியிருக்கிறார்.

மர்மநபர்: சிறிது நேரம் கழித்து மாணவி கண் விழித்து பார்த்தபோது, ஆடைகள் கலைந்துள்ளதை பார்த்து அதிர்ச்சி அடைந்தார். அதற்கு பிறகே அந்த மர்மநபர் தன்னை பலாத்காரம் செய்ததை அறிந்து, கதறி அழுதுள்ளார். ஆனால், இந்த விஷயத்தை யாரிடமும் சொல்வில்லை. சில மாதங்கள் கழித்து, அந்த மாணவி கர்ப்பமானார்..
இதுபற்றி பெற்றோர், மாணவியிடம் கேட்டபோதுதான், தனக்கு நடந்த கொடுமையை சொல்லி அழுததுடன், அந்த நபர் யாரென்றே தனக்கு தெரியாது என்று சொல்லி அழுதார்.. இதற்கு பிறகு, மார்த்தாண்டம் மகளிர் போலீசாரிடம் இது தொடர்பாக புகார் தரப்பட்டு, அந்த மர்ம நபர் யார் என்பதை தேட துவங்கினார்கள்.
10ம் வகுப்பு: இப்போது இன்னொரு கொடுமை கன்னியாகுமரி மாவட்டம் கருங்கல் அருகே நடந்துள்ளது.. தொலையாவட்டம் கண்டக்குழிவிளையை சேர்ந்தவர் சசிகுமார். இவருக்கு ஷாஜினி என்ற மகளும், ஒரு மகனும் உள்ளனர்.. ஷாஜினிக்கு 15 வயதாகிறது.. அங்குள்ள பள்ளி ஒன்றில் 10-ம் வகுப்பு படித்து வந்தார்.
இவர் நேற்று முன்தினம், பள்ளியில் நடத்தப்பட்ட ஸ்பெஷல் கிளாசுக்கு சென்றுவிட்டு மாலை வீட்டுக்கு வந்தார். பிறகு தன்னுடைய தம்பியுடன் மாடியிலுள்ள ரூமில் படித்து கொண்டிருந்தார்.. பின்னர் இரவு சாப்பிடுவதற்காக தம்பி, மாடியிலிருந்து கீழே இறங்கி வந்துவிட்டார்..
ஜன்னல் கம்பி: சிறிது நேரம் கழித்து, மாணவியின் அப்பா சசிகுமார், மாடிக்கு சென்றிருக்கிறார். அப்போது ஷாஜினி, அந்த அறையிலேயே ஜன்னல் கம்பியில் தூக்கில் தொங்கிக் கொண்டிருப்பதை கண்டு அலறினார்.
உடனே ஷாஜினியை மீட்டு புதுக்கடையில் உள்ள ஒரு தனியார் மருத்துவமனைக்கு கொண்டு சென்றார். ஆனால், ஷாஜினி ஏற்கனவே இறந்து விட்டதாக டாக்டர்கள் கூறினார்கள்.. இதையடுத்து, இதுகுறித்து கருங்கல் போலீஸ் நிலையத்துக்கு தகவல் கொடுக்கப்பட்டது. அதன்பேரில் போலீசார் விரைந்து வந்து உடலை கைப்பற்றி போஸ்ட் மார்ட்டம் செய்வதற்காக குழித்துறை அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.
விசாரணை: இதுகுறித்த புகாரின் பேரில் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். ஆனால், மாணவி ஏன் தற்கொலை செய்து கொண்டார் என்று இதுவரை தெரியவில்லை.












Click it and Unblock the Notifications