கன்னியாகுமரி லாட்ஜ்ஜில் ஒரே ரூமில் 4 பேர்.. "இவங்களா"? அதிர்ந்த நின்ற போலீஸ்.. யாருப்பா அந்த மேனேஜர்
கன்னியாகுமரி: கன்னியாகுமரி லாட்ஜ் மேனேஜருக்கு வந்த ஆசையை பார்த்தீங்களா? பணத்துக்காக எதையும் செய்ய துணியும் இதுபோன்ற நபர்களை போலீசார் ரவுண்டு கட்டி கைது செய்திருப்பதில் தவறேயில்லை.
கன்னியாகுமரி ஒரு சுற்றுலா தலம் என்பதால், ஏராளமான காட்டேஜ்கள், விடுதிகள், ரிசார்ட்கள் அங்கு இயங்கி வருகின்றன.. கடந்த 2 மாதங்களுக்கு முன்பு, இங்குள்ள ஒரு லாட்ஜ்ஜில், இளம்ஜோடிகள் வந்திருப்பதாகவும், அவர்களை பார்க்க சந்தேகமாக இருப்பதாகவும் போலீசாருக்கு ரகசிய தகவல் வந்தது.

உடனே போலீசாரும், அந்த லாட்ஜ்ஜூக்கு விரைந்து சென்று சோதனை செய்தார்கள்.. அப்போது, 3 ரூம்களில் இளம் ஜோடிகள் தங்கியிருந்தனர். இதில் ஒரு ஜோடியிடம் விசாரணை நடத்தியபோது, 2 பேருக்குமே 17 வயதுதான் ஆகிறதாம்.. 2 பேருமே பிளஸ் 1 படிக்கிறார்கள். இவர்கள் நாகர்கோவிலை சேர்ந்தவர்கள். இன்ஸ்டாகிராமில் பழக்கம் ஏற்பட்டு, நேரில் பார்க்க ஆசைப்பட்டு, இப்படி கன்னியாகுமரிக்கு வந்து ரூம் போட்டுள்ளனர்.
மாணவன் மீது வழக்கு: கன்னியாகுமரிக்கு டூர் செல்வதாக இருவருமே அவரவர் வீட்டில் பொய் சொல்லிவிட்டு வந்திருக்கிறார்கள்.. இதற்கு பிறகு மகளிர் போலீசார், பெண்ணின் வீட்டிற்கு தகவல் தந்து ஸ்டேஷனுக்கு வரவழைத்து, சிறுமியை ஒப்படைத்தனர். பிறகு மாணவன் மீது வழக்கு பதிவு செய்யப்பட்டதுடன், இந்த ஜோடிக்கு ரூம் ஒதுக்கி தந்த, லாட்ஜ் மேனேஜர் மீதும் போலீசார் வழக்கு பதிவு செய்தார்கள்.
இதேபோல ஒரு சம்பவம் மறுபடியும், கன்னியாகுமரியில் நடந்துள்ளது.. பஸ் நிலையம் அருகே ஒரு லாட்ஜில் சிறுவர், சிறுமிகள் சிலர் தங்கி இருப்பதாக போலீசாருக்கு தகவல் வந்தது. இதனால் போலீசார் விரைந்து சென்று சோதனை நடத்தினார்கள்.. அப்போது ஒரு ரூமில் 4 பேர் இருப்பதை கண்டு அதிர்ந்தனர்..
4 பேர் கைது: 17 வயது சிறுமிகள் 2 பேரும், 17 வயது சிறுவன் மற்றும் 22 வயது இளைஞர் என மொத்தம் 4 பேருமே ஒரே ரூமில் தங்கி உல்லாசமாக இருந்திருக்கிறார்கள்.. இதையடுத்து, அவர்களிடம் நடத்தப்பட்ட விசாரணையில், 4 பேருமே தூத்துக்குடி மாவட்டத்தை சேர்ந்தவர்கள் என்பது தெரியவந்தது. 22 வயது மாணவர், சட்டக்கல்லூரியில் படித்து வருகிறார். மற்ற 3 பேருமே ஸ்கூல் படிக்கிறார்கள்.
இதையடுத்து 2 சிறுமிகளையும் மெடிக்கல் செக்கப்புக்காக போலீசார் மருத்துவமனைக்கு அழைத்து சென்றர்.. 17 வயது சிறுவனை போக்சோ சட்டத்தின் கீழ் கைது செய்தனர்.. சட்டக்கல்லூரி மாணவர் மட்டுமல்லாமல், இவர்களுக்கு ரூம் வழங்கிய லாட்ஜ் மேனேஜர் சிவன் (54), லாட்ஜ் ஓனர் பால்ராஜ் (61) ஆகியோரையும் போலீசார் கைது செய்தனர்.
சீர்திருத்த பள்ளி: ஆனால் கைது செய்யப்பட்டதுமே பால்ராஜ்ஜூக்கு உடம்பு சரியில்லாமல் போய்விட்டது. அதனால், அவரை போலீசார் மருத்துவமனையில் அனுமதித்துள்ளனர்.. மீட்கப்பட்ட 2 சிறுமிகளின் பெற்றோர்களும் வரவழைத்து, அவர்களுடன் அனுப்பி வைத்த போலீசார், 17 வயது சிறுவனை நாங்குநேரி சிறார் சீர்திருத்த பள்ளிக்கு அனுப்பியுள்ளனர். மற்றவர்கள் ஜெயிலில் இருக்கிறார்கள்..
2 மாதங்களுக்கு முன்பு நடந்த சம்பவத்திலும், ஒரு தனியர் லாட்ஜ் ஓனர் கைதாகியிருந்தார்.. சின்ன வயது பிள்ளைகள் என்றுகூட பார்க்காமல், இந்த குழந்தைகளுக்கு ரூம் ஒதுக்கி தந்திருக்கிறார் மேனேஜர்.. எனவே, இந்த சம்பவத்தை கேள்விப்பட்டு பொதுமக்கள் பதறிப்போனார்கள்.. கன்னியாகுமரி லாட்ஜ், ரிசார்ட்டுகளில் அடிக்கடி போலீசார் சோதனை நடத்த வேண்டும் என்றும் கோரிக்கை விடுத்தபடியே இருந்தனர்.
எச்சரிக்கை: அதற்குள் இன்னொரு சம்பவம் இப்போது நடந்துள்ளது.. முறையான அட்ரஸ் சான்று இல்லாமலும், சிறுவர், சிறுமிகளுக்கு ரூம்களை ஒதுக்கும் லாட்ஜ் நிர்வாகத்தின் மீது நடவடிக்கை எடுப்பதுடன், அவற்றின் உரிமத்தை ரத்து செய்யவும் பரிந்துரைக்கப்படும் என போலீசார் தற்போது எச்சரித்திருக்கிறார்கள்.












Click it and Unblock the Notifications