"வேலி தாண்டிய வெள்ளாடு".. காருக்குள்ளிருந்து வந்த சத்தம்.. கிட்டபோய் பாத்தால்.. அதிர வைத்த கள்ள ஜோடி
கன்னியாகுமரியில் கள்ளக்காதல் ஜோடி விஷம் குடித்து தற்கொலை செய்து கொண்டுள்ளது
கன்னியாகுமரி: இந்த குமரி மாவட்டத்துக்கு என்னதான் ஆச்சு? இன்னொரு பயங்கரமும் நடந்துள்ளது.. அசையாமல் நின்றிருந்த காரை பார்த்ததுமே பொதுமக்கள் பதட்டமடைந்து போலீசுக்கு ஓடினார்கள்.. தற்போது விசாரணையும் இது தொடர்பாக நடந்து கொண்டிருக்கிறது.
குளச்சல் அருகே உள்ள கடியப்பட்டணம் கடற்கரை கிராமத்தை சேர்ந்தவர் ஷாமினி.. 29 வயதாகிறது.. இவர் அதே பகுதியை சேர்ந்த ஆரோக்கிய சூசைநாதன் என்பவரை முன்பு காதலித்து வந்தார்.. இப்போது சூசைநாதனுக்கு 36 வயதாகிறது.

கிலி கல்யாணம்
ஆனால், ஷாமினிக்கு ராஜேஷ் என்பவருடன் திருமணம் நடந்துள்ளது.. அதே பகுதியை சேர்ந்தவர்தான் ராஜேஷ்.. ஷாமினிக்கு இப்போது 7, 3 வயதுள்ள 2 மகன்கள் இருக்கிறார்கள்.. அதேபோல சூசைநாதனுக்கும், திருச்செந்தூர் ஆறுமுகநேரியை சேர்ந்த ஒரு பெண்ணை பார்த்து அவர் வீட்டில் திருமணம் செய்து வைத்தனர்.. இவர்களுக்கு திருமணம் ஆகி 4 வருடமாகிறது.. ஆனால், ஷாமினியும், சூசைநாதனும் வேறு வேறு கல்யாணம் செய்துகொண்டாலும், உறவு நீடித்தது... காதலும் தொடர்ந்தது.. அடிக்கடி தனியாக சந்தித்தும் வந்துள்ளதாக தெரிகிறது.

மிஸ்ஸிங் மிஸ்ஸிங்
இவர்களது தொடர்பு சூசைநாதனின் மனைவிக்கு தெரிந்துவிட்டது.. கள்ளக்காதலை கைவிட சொல்லி எத்தனையோ முறை அந்த பெண் கெஞ்சி பார்த்துவிட்டார்.. ஆனால், சூசைநாதன் தன் விருப்பப்படியே ஷாமினியுடன் உறவை தொடர்ந்தார். இதனால் அந்த பெண், கோபித்து கொண்டு, கணவனை பிரிந்து அம்மா வீட்டுக்கு போய்விட்டார்.. இது சூசைநாதனுக்கு இன்னும் வசதியாக போய்விட்டது.. இதனிடையே, கடந்த மாதம் 18-ம் தேதி ஷாமினி, தன்னுடைய 2 குழந்தைகளுடன் யாருக்கும் தெரியாமல் வீட்டைவிட்டு வெளியேறினார்... திடீரென வீட்டில் மனைவியை காணோம் என்பதால், ராஜேஷ் மணவாளக்குறிச்சி போலீசில் புகார் தந்தார்.. போலீசாரும் இது குறித்த விசாரணையை நடத்தி, ஷாமினியை தேடி வந்தனர்.

அசைவேயில்லை
இந்நிலையில், இன்றுகாலை நாகர்கோவில் அருகே உள்ள ஆரல்வாய்மொழி தேவசகாயம் மவுண்ட் பகுதியில், சொகுசு கார் ஒன்று நின்று கொண்டிருந்தது.. அந்த கார் அசைவே இல்லாமல் நீண்ட நேரம் நின்றிருந்தது.. பிறகு, அந்த காருக்குள் இருந்து, அழுகை சத்தம் கேட்டது.. இதனால் பதறிப்போன அந்த பகுதி மக்கள், காருக்குள் எட்டிப்பார்த்தனர்.. அப்போதுதான், அங்கே ஒரு ஆணும், பெண்ணும், விழுந்து கிடப்பது தெரியவந்தது.. மற்றொருபக்கம் காரில் 2 குழந்தைகளும் அழுது கொண்டிருப்பதை பார்த்தனர். ஒருவேளை அந்த ஜோடி போதையில் விழுந்து கிடப்பார்கள் என்று நினைத்து, ஆரல்வாய்மொழி போலீசுக்கு புகார் தந்தனர்.

கால் டாக்ஸி
போலீஸார் விரைந்து வந்து பார்த்தபோதுதான், அந்த ஜோடி இறந்து கிடப்பது தெரியவந்தது.. அத்துடன், அது காணாமல் போன ஷாமினியும் அவரது கள்ளக்காதலன் சூசைநாதனும் என்பது உறுதியானது.. இவர்கள் இறந்துகிடந்த இடத்துக்கு பக்கத்தில்தான் அந்த கார் நின்று கொண்டிருந்தது. டாடா சுமோ கார் கதவை போலீஸார் திறந்து பார்த்தனர்... அங்கு ஷாமினியின் இரண்டு குழந்தைகளும் தூங்கிக்கொண்டிருந்தன.. அழுது அழுது அந்த குழந்தைகள் களைத்து தூங்கிவிட்டிருந்தன. பிறகு, காரில் இருந்து குழந்தைகளை போலீஸார் பத்திரமாக மீட்டனர்.. இறந்தவர்களின் சடலங்களை போஸ்ட் மார்ட்டம் செய்ய ஆசாரிப்பள்ளம் மருத்துவமனைக்கும் அனுப்பி வைத்தனர்.

தென்னை மரம்
சூசைநாதன் வாடகை கார் ஓட்டி வருபவராம்.. ஷாமினியை மறக்க முடியாமல் தவித்து வந்துள்ளார் சூசைநாதன்.. அதேபோல, ஷாமினியும் தொடர்பை விடமுடியாமல் தவித்துவந்தால், நேற்றைய தினம் தேவசகாயம் மவுண்ட் சர்ச் பகுதிக்கு வந்திருக்கிறார்கள்.. குழந்தைகளை காரிலேயே தூங்கவைத்துவிட்டு, இருவரும் விஷத்தை குடித்துள்ளனர்.. தென்னை மரத்துக்கு பயன்படுத்தும் பூச்சிமருந்தை வாங்கி குடித்தார்களாம்.. ஆரல்வாய்மொழி போலீஸார் தொடர் விசாரணையில் ஈடுபட்டு வருகிறார்கள்.. ஷாமினி தன் இரு குழந்தைகளுடன் ஒரு மாதத்திற்கு முன்பே வீட்டை விட்டு வெளியேறிவிட்டதாக புகார் கொடுக்கப்பட்டுள்ள நிலையில், இப்படி ஒரு சம்பவம் நடந்துள்ளது.. குழந்தைகள் பத்திரமாக மீட்கப்பட்டுவிட்டனர் என்றாலும், குமரி மாவட்டமே அதிர்ச்சியில் கிடக்கிறது..!!!

டிரைவிங் லைசென்ஸ்
முன்னதாக, பிணமாக கிடந்த ஆணின் பேண்ட் பாக்கெட்டை போலீசார் சோதனை செய்திருக்கிறார்கள்.. அவரது டிரைவிங் லைசென்சு கிடைத்துள்ளது.. அதன் மூலம்தான் அவரது பெயர் ஆரோக்கிய சூசைநாதன் என்பதும், கடிய பட்டணத்தைச் சேர்ந்தவர் என்பதும் தெரியவந்தது... அதில் இருந்த அட்ரஸுக்கு தொடர்பு கொண்டு போலீசார் விசாரித்தபோது, அவர் வேறு ஒரு பெண்ணுடன் மாயமான தகவல் கிடைத்தது... அதனால், பிணமாக கிடந்த பெண் அவரது கள்ளக்காதலி என தெரியவந்தது... தொடர்ந்து நடைபெற்ற விசாரணையில் அந்தப் பெண் கடியபட்டணத்தைச் சேர்ந்த சகாய சாமினி என்பது உறுதியானது. 2 பேர் உறவினர்களுக்கும் தகவல் கொடுத்து விட்டு, காரில் இருந்த 2 குழந்தைகளையும் போலீஸ் நிலையம் அழைத்து சென்றுள்ளனர்.
-
சொத்து வைத்திருப்போர் கவனத்திற்கு! ஏப்.1 முதல் பத்திரப்பதிவில் பெரிய மாற்றம்.. இனி நிலம் இந்த விலை? -
கேஸ் சிலிண்டர் விலை மாறுது! ஏப்.1 முதல் புதிய விலை! இல்லத்தரசிகள் மாத பட்ஜெட்டில் என்ன தாக்கம்? -
H-1B விசா கட்டுப்பாடுகள் நீக்கம்.. அமெரிக்காவில் முக்கிய மசோதா.. இதுதான் இந்தியர்களுக்கு நல்ல செய்தி -
இதுக்கு மேல கடன் வாங்க முடியாது.. கஜானா காலி.. தத்தளிக்கும் தமிழக வெற்றிக் கழகம்.. அப்போ விஜய்? -
தங்கம்.. 'தரை' தட்டியது ஏன்? கூடை கூடையாக மார்க்கெட்டில் விற்ற அரபு நாடுகள்.. ஒரு ராட்சனின் வீழ்ச்சி -
வளைகுடா வளையம்: ஈரானிடம் இந்தியா வைத்த 'செக்'.. தவிப்பில் கச்சா எண்ணெய்! டெல்லி மெகா முடிவு -
திமுக வேட்பாளர் நேர்காணலில் பங்கேற்ற துணை முதல்வர் உதயநிதி ஸ்டாலின்.. என்ன கேட்கப்பட்டது என விளக்கம் -
இமாச்சல் போல.. தமிழகத்தில் அரசு ஊழியர்களின் மாத சம்பளத்தை 30% குறைக்க வேண்டியது வரும்.. அன்புமணி -
டிராகனின் வெள்ளி வேட்டை.. சீனாவைச் சுழற்றியடிக்கும் சில்வர் ஜுரம்.. வெள்ளி இனி குட்டித்தங்கம்.. ஏன்? -
முதல் விக்கெட்.. திமுக கூட்டணியில் விலகிய தமிழக வாழ்வுரிமை கட்சி.. அறிவித்தார் வேல்முருகன் -
Siragadikka Aasai Promo: விஜயாவுக்கு எதிராக ஆதாரத்தை கண்டுபிடித்த முத்து- மீனா.. சிந்தாமணிக்கு ஆப்பு! செம சம்பவம் -
நன்றியய்யா நன்றி.. ஓட்டல் ஓனர்கள் வயிற்றில் பால் வார்த்த அறிவிப்பு! இனி சிலிண்டர் தட்டுப்பாடு இல்லை!












Click it and Unblock the Notifications