ஓட்டை உடைசல் + ஓயாத துயரம்.. அழுதுட்டே உத்தரத்தில் தொங்கிய திமுக விசுவாசி பழனிகுமார்..இப்படி ஒருவரா?

Subscribe to Oneindia Tamil

கன்னியாகுமரி: அரசியல்வாதிகள் என்றாலே வறுமைக்கு அப்பாற்பட்டவர்கள் என்ற பிம்பத்தை, தன் மரணத்தினால் சுக்குநூறாக நொறுக்கி தள்ளியுள்ளார் பழனிசாமி.. யார் இந்த பழனிசாமி? குமரியே உருகி கொண்டிருக்கிறது இவரை நினைத்து?
கன்னியாகுமரி மாவட்டம், இரணியலை அடுத்த தெக்கன்விளை கிராமத்தை சேர்ந்தவர் பழனிகுமார்.. 56 வயதாகிறது.. இவருக்கு ஆஷிகா, என்ற மகளும், ஆதிஷ் என்ற மகனும் இருக்கின்றனர்... பழனிகுமார் குடும்பம் தீவிரமான திமுக குடும்பம்.

இவரது அப்பா போலவே, தன்னுடைய 15-வயது முதலே திமுகவில் இணைந்து செயல்பட்டு வந்தார் பழனிகுமார்.. குருந்தன்கோடு மேற்கு ஒன்றிய திமுக துணை செயலாளராக இருந்தார்...

kanniyakumari Crime: dmk panchayat ward member who committed suicide due to family issues

சிமெண்ட் கூரை: பிறகு, கடந்த உள்ளாட்சி தேர்தலில் கக்கோட்டுதலை கிராம ஊராட்சியில் 2-வார்டு உறுப்பினராக திமுக சார்பில் போட்டியிட்டு வெற்றி பெற்றார். இதற்கு பிறகு, கக்கோட்டுத்தலை ஊராட்சி வார்டு உறுப்பினராக இருந்து முழு நேர அரசியலிலும் பொது வாழ்விலும் ஈடுபட்டுவந்தார். இப்படி ஒரு தீவிரமான அரசியல்வாதியாக இருந்தபோதிலும் பழனிகுமார் வருமானமின்றி தவித்தார்.. குடும்பமே வறுமையில் வாடியது.. தனக்கு சொந்தமாக இருந்த ஒரு பாழடைந்த சிமெண்ட் கூரை வீட்டில்தான் மனைவி, குழந்தைகளுடன் வசித்து வந்தார்.

கடந்த வருடம், இவரது மூத்த மகள் ஆஷிகா11-ம் வகுப்பு படித்து வந்தார்.. அப்போது, தன்னுடைய ஸ்கூலில் இருந்து கல்வி சுற்றுலாச் செல்ல அழைத்து செல்வதால், பழனிகுமாரிடம் பணம் கேட்டிருக்கிறார்.. ஆனால் பொருளாதார சிக்கலில் தவித்த பழனிகுமார், பணம் இல்லாததால் தன்னுடைய மகளை சுற்றுலாவுக்கு அனுப்பாமல் இருந்திருக்கிறார்... இதனால் மனமுடைந்த ஆஷிகா, கடந்த வருடம் ஏப்ரல் மாதம் 18-ம் தேதி வீட்டில் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டார்..

kanniyakumari Crime: dmk panchayat ward member who committed suicide due to family issues

பழனிகுமார் : ஏற்கனவே வறுமையில் தவித்து வந்த பழனிகுமார், மகளின் மரணத்துக்கு பிறகு மொத்தமாக நிலைகுலைந்து போய்விட்டார்.. வருமானம் இல்லாத தன்னால் மனைவி, குடும்பத்தை சரிவர கவனிக்கவும் முடியாமல், அவதிப்பட்டு வந்திருக்கிறார்... கண்ணெதிரே அவர்கள் படும் சிரமத்தை கண்டு மனம் புழுங்கி தவித்துள்ளார்.. தினம் தினம் தூக்கமின்றி கண்ணீர் வடித்துள்ளார்.. இந்த சூழலில், தன்னுடைய பழைய வீட்டை காலி செய்துவிட்டு, மனைவி, மகனுடன் உறவினர் ஒருவர் வீட்டில் வசித்து வந்திருக்கிறார் பழனிகுமார்...

நேற்று முன்தினம் கட்சி கூட்டத்துக்கு சென்று வருவதாக சொல்லிவிட்டு வீட்டை விட்டு போயுள்ளார்.. ஆனால், பழனிகுமார் இரவு வெகு நேரமாகியும் வீடு திரும்பவில்லை. அப்போதுதான் அவர் தற்கொலை செய்து கொண்டது தெரியவந்தது.. நேற்று முன்தினம், தன்னுடைய மகளின் மகளின் முதலாம் ஆண்டு நினைவு தினம்.. அன்றைய தினம், தன்னுடைய பழைய வீட்டு உத்திரத்தில் கயிற்றால் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டுள்ளார் பழனிகுமார்.. சடலமாக தூக்கில் தொங்கிய அவரை பார்த்து குடும்பத்தினர் கதறி அழுதது காண்போரை கலங்க செய்தது..

kanniyakumari Crime: dmk panchayat ward member who committed suicide due to family issues

அனாதை குடும்பம்: தகவல் அறிந்து சம்பவ இடத்துக்குச் சென்ற இரணியல் போலீஸார், வழக்கு பதிவுசெய்து அவரின் உடலை மீட்டு போஸ்ட் மார்ட்டத்துக்காக ஆசாரிப்பள்ளம் மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். சின்ன வயதில் இருந்தே திமுகவுக்காக தன்னை அர்ப்பணித்து கொண்டவர் பழனிகுமார்.. அப்படிப்பட்டவர் இன்று அவரது குடும்பத்தினரை அனாதையாக விட்டு சென்றுவிட்டார்... மகன் பதினொன்றாம் வகுப்பு படிக்கின்றான். தன்னுடைய மகளின் சின்ன ஆசையைக்கூட நிறைவேற்ற முடியவில்லையே என்று பழனிகுமார் புலம்பி கொண்டே இருப்பாராம்..

ஓட்டை வீடு: ஓட்டை, உடைசல் சூழ்ந்த வீட்டிலேயே காலத்தை தள்ளி வந்துள்ளார்.. மழை நேரத்தில் அந்த ஓட்டுவீடு ஒழுகுமாம்.. பழுதடைந்த சிமெண்ட் கூரை வீட்டில் பத்துக்கு பத்து அறையில் தான் வசித்து வந்திருக்கிறார்கள். வீடு இல்லாமல் மகனுடன் வசிக்கும் அவரின் மனைவிக்கு, முதலமைச்சர் உதவி செய்ய வேண்டும் என்று உறவினர்கள் கோரிக்கைகளை வைத்து வருகிறார்கள். வறுமையின் விளிம்பில் இருந்த திமுக கவுன்சிலரும், ஒன்றிய நிர்வாகியுமான பழனிகுமார், தன்னுடைய 16 வயது மகள் இறந்த அதேநாளில் தற்கொலை செய்துகொண்ட சம்பவம் குமரியை உலுக்கி எடுத்து கொண்டிருக்கிறது.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+