Get Updates
Get notified of breaking news, exclusive insights, and must-see stories!

"ஷேம் ஷேம்".. கணவன் டூ கள்ளக்காதலன் டூ கள்ளக்காதலன்.. குமரியில் ஒரே அக்கப்போர்.. பாவம் அந்த பிஞ்சுகள்

குமரியில் சிறுமிகளுக்கு பாலியல் தொல்லை தந்த நபரை போலீசார் தேடி வருகிறார்கள்

Subscribe to Oneindia Tamil

கன்னியாகுமரி: கணவனை விரட்டியடித்த பெண் ஒருவர், 3 குழந்தைகளையும் வைத்துக்கொண்டு அடுத்தடுத்து செய்த காரியம் குமரியையே நிலைகுலைய வைத்துவிட்டது.

கன்னியாகுமரி மாவட்டம் பத்துகாணி பகுதியை சேர்ந்தவர் அந்த பெண்.. இவரது கணவர் கேரள மாநிலம் அம்புரி பகுதியை சேர்ந்தவர்.

இந்த தம்பதிக்கு 15 வயதில் மகளும், 14, மற்றும் 12 வயதில் 2 மகன்களும் உள்ளனர்... தம்பதி இடையே அடிக்கடி தகராறு வந்துபோயுள்ளது. இதனால் ஒருகட்டத்தில் இருவருமே பிரிந்துவிட்டனர்.

மலப்புரம்

மலப்புரம்

எனவே, அந்த பெண் தன்னுடைய 3 குழந்தைகளுடன் பத்துகாணி பகுதியில் உள்ள தன்னுடைய அம்மா வீட்டில் வசித்து வந்தார்.. அந்த நேரத்தில் கேரள மாநிலம் மலப்புரம் பகுதியை சேர்ந்த டிஜேஷ் என்ற உண்ணி என்பவருடன் அவருக்கு பழக்கம் ஏற்பட்டது... இந்த பழக்கம் கள்ளக்காதலில் போய் முடிந்தது.. பிறகு, டிஜேஷ் அந்த பெண்ணின் வீட்டிலேயே தங்கி குடித்தனம் நடத்த ஆரம்பித்துவிட்டார்.. கள்ளக்காதலியின் 3 குழந்தைகளையும் டிஜேஷ் பராமரித்து வந்தார்.

 தகராறு

தகராறு

ஆனால், அந்த கள்ளக்காதலிக்கு இன்னொரு இளைஞருடன் பழக்கம் ஏற்பட்டது.. இந்த பழக்கம் கள்ளக்காதலில் போய் முடிந்தது.. இவர்கள் 2 பேரும் நெருங்கி பழகிய விவகாரம், டிஜேஷுக்கு தெரிய வந்தது... உடனே கள்ளக்காதலிக்கும் டிஜேஷூக்கும் தகராறு நடந்தது.. இறுதியில், முதல் கள்ளக்காதலனை கழற்றிவிட்டுவிட்டு, 2வது கள்ளக்காதலனுடன் ஓட்டம் பிடித்தார்... ஆனாலும், டிஜேஷ் ஓடிப்போன கள்ளக்காதலியின் தாய் உள்பட அந்த 3 குழந்தைகளையும் அதே வீட்டில் தங்கி கவனித்து வந்து உள்ளார்.

டிஜேஷ்

டிஜேஷ்

இப்போது அடுத்த சிக்கல் ஆரம்பமானது.. டிஜேஷுக்கு அந்த கள்ளக்காதலியின், 15 வயது மகள் மீது ஆசை வந்துவிட்டது.. சிறுமிக்கு பாலியல் ரீதியாக தொல்லையும் கொடுக்க ஆரம்பித்தார். இதனால் அதிர்ச்சியடைந்த சிறுமி, பாட்டியிடம் நடந்ததை சொன்னார்.. ஆனால் அவரோ, இந்த சம்பவத்தை வெளியே சொன்னால், வெட்கக்கேடு, டிஜேஷ் தான் நமக்கு தேவையான உதவி செய்து வருகிறார்.. அதனால், அவரை பகைத்துக் கொள்ளாதே என்று பாட்டி "கண்டித்தாராம்".. இதனால் சிறுமியும் இதுகுறித்து வெளியில் யாரிடமும் சொல்லாமல் இருந்துள்ளார்.

பிஞ்சுகள்

பிஞ்சுகள்

பாட்டியின் இந்த கண்டிப்பு, டிஜேஷ்ஷுக்கு சாதகமாக போய்விட்டது.. எனவே, கடந்த 4 மாதங்களாக சிறுமியிடம் பாலியல் துன்புறுத்தல் செய்துள்ளார்... இப்போது, அடுத்த சிக்கல் ஆரம்பமானது.. சிறுமியின், 14 வயது தம்பியிடமும் பாலியல் ரீதியாக தொந்தரவு கொடுத்தாராம் டிஜேஷ்.. அப்படித்தான், சிலதினங்களுக்கு முன்பு சிறுமிக்கு பாலியல் தொல்லை கொடுத்தபோது, பக்கத்து வீட்டில் வசிக்கும் பெண் ஒருவர் இதை நேரில் பார்த்து அதிர்ச்சியடைந்தார்.. டிஜேஷையும் தட்டிக் கேட்டுள்ளார்.. ஆனால், அந்த பெண்ணை அசிங்கமாக பேசி திட்டிவிட்டாராம் டிஜேஷ்..

எஸ்கேப்

எஸ்கேப்

எனினும், பக்கத்து வீட்டு இதற்கெல்லாம் பயப்படவில்லை.. பாதிக்கப்பட்ட சிறுமியை அழைத்துகொண்டு மார்த்தாண்டம் போலீஸ் ஸ்டேஷன்கு சென்றார்.. தனக்கு நேர்ந்த கொடுமை குறித்து கதறியபடி புகார் அளித்தார் அந்த சிறுமி.. இதையடுத்து, டிஜேஷ் மீது வழக்குப்பதிவு செய்த போலீசார், அந்த பாட்டி மீதும் வழக்கு பதிவு செய்தனர்.. உடனடியாக சிறுமியின் வீட்டுக்கு சென்றனர். ஆனால் அதற்குள் டிஜேஷ் கேரளாவுக்கு தப்பி சென்றுவிட்டார்.. வீட்டில் இருந்த பாட்டியை பாலியல் தொந்தரவுக்கு உடந்தையாக இருந்ததாக கூறி போலீசார் கைது செய்தனர். தப்பியோடிய டிஜேஷை பிடிக்க தனிப்படை போலீசார் கேரளாவுக்கு விரைந்துள்ளனர்.

எஸ்கேப்

எஸ்கேப்

எனினும், பக்கத்து வீட்டு இதற்கெல்லாம் பயப்படவில்லை.. பாதிக்கப்பட்ட சிறுமியை அழைத்துகொண்டு மார்த்தாண்டம் போலீஸ் ஸ்டேஷனுக்கு சென்று நடந்த சம்பவத்தை விளக்கினார்.. அதேபோல, தனக்கு நேர்ந்த கொடுமை குறித்து கதறியபடி புகார் அளித்தார் அந்த சிறுமி.. இதையடுத்து, டிஜேஷ் மீது வழக்குப்பதிவு செய்த போலீசார், அந்த பாட்டி மீதும் வழக்கை பதிவு செய்தனர்.. உடனடியாக சிறுமியின் வீட்டுக்கு சென்றனர். ஆனால் அதற்குள் டிஜேஷ் கேரளாவுக்கு தப்பி சென்றுவிட்டார்.. பாலியல் தொந்தரவுக்கு உடந்தையாக இருந்ததாக கூறி வீட்டில் இருந்த பாட்டியை போலீசார் கைது செய்தனர். தப்பியோடிய டிஜேஷை பிடிக்க தனிப்படை போலீசார் கேரளாவுக்கு விரைந்துள்ளனர். டிஜேஷூக்கு உன்னி என்று மற்றொரு பெயரும் உள்ளதாம்.. அதனால் போட்டோவை வைத்து அடையாளம் காணும் முயற்சியில் போலீசார் இறங்கி உள்ளதுடன், கேரள போலீஸாரின் உதவியையும் நாடியுள்ளனர்.. அத்துடன், போக்சோவிலும் டிஜேஷ் மீது வழக்கு பதிவாகி உள்ளது.

More From
Prev
Next
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+