பேத்தின்னு கூட பார்க்கலியே.. மோசமான தாத்தா.. கிட்ட வந்தாலே கலங்கும் பெண்.. குலுங்கிய கன்னியாகுமரி
கன்னியாகுமரி: கன்னியாகுமரியில், ஒரே நாளில் நடந்த இரட்டை சம்பவம் பெரும் கொந்தளிப்பை மக்களிடம் ஏற்படுத்தி வருகிறது. என்ன நடந்தது?
நாளுக்கு நாள் பெண் குழந்தைகள் மீதான பாலியல் அட்டூழியங்கள் பெருகி கொண்டே வருகிறது.. போக்சோ சட்டங்கள் அமலில் இருந்தபோதும், இந்த குற்றங்களின் எண்ணிக்கை குறைந்தபாடில்லை. நேற்றைய தினம் ஆந்திராவில் ஒரு அக்கிரமம் நடந்துள்ளது.. பிரகாசம் மாவட்டத்தில் உண்டு உறைவிடப்பள்ளியில், 16 வயது மாணவி இன்டர் மீடியட் முதலாம் ஆண்டு வகுப்பில் (பிளஸ்1) படித்து வருகிறார்..

மாணவி: கடந்த ஜூன் 19ம்தேதிதான் இந்த ஹாஸ்டலில் சேர்ந்திருக்கிறார்.. ஆனால், அப்போதுமுதலே சோர்வாகவே காணப்பட்டுள்ளார். கடந்த 1ம் தேதி காலை 11 மணிக்கு, ஹாஸ்டலில் குளிப்பதற்காக பாத்ரூம் சென்றிருக்கிறார். நீண்ட நேரமாக வெளியே வரவில்லை. இதனால் ஆசிரியைகள் குளியலறை சென்று பார்த்தபோது, மாணவிக்கு குழந்தை இறந்த நிலையில் பிறந்திருந்ததும், அது ஒரு அட்டை பெட்டியில் வைக்கப்பட்டிருப்பதையும் கண்டு அதிர்ச்சி அடைந்தனர்.
மாணவி அங்கேயே மயங்கி கிடந்திருக்கிறார். அவரை மீட்டு உடனடியாக ஓங்கோல் ரிம்ஸ் அரசு மருத்துவமனையில் அனுமதித்தனர். இப்போது மாணவிக்கு தீவிர சிகிச்சை நடந்து வருகிறது. இது தொடர்பாக மாவட்ட கலெக்டர் தமீம் அன்சாரியா, விசாரணை நடத்த உத்தரவிட்டதன்பேரில், விசாரணையும் உடனடியாக தொடங்கியது.
பாலியல் பலாத்காரம்: மாணவியின் கிராமத்தை சேர்ந்த 20 வயது சைதாபாபு, மாணவியை காதலிப்பதாக கூறி பாலியல் பலாத்காரம் செய்துள்ளார்.. இந்த விஷயம் தெரிந்த, அதே கிராமத்தைச் சேர்ந்த சீனிவாசலு ரெட்டி (20), வெங்கடரெட்டி (21) ஆகியோரும் மாணவியை மிரட்டி அடிக்கடி பாலியல் பலாத்காரம் செய்து வந்ததும் தெரியவந்தது. இதையடுத்து, 3 பேரையுமே போலீசார் நேற்றைய தினம் போக்சோவில் கைது செய்தனர். ஹாஸ்டலில் அலட்சியத்துடன் செயல்பட்ட அருணகுமாரி, சத்யவதி ஆகியோர் சஸ்பெண்ட் செய்யப்பட்டனர்.
இன்றைய தினமும், கன்னியாகுமரியில் நடந்த மற்றொரு பலாத்கார சம்பவத்தில், போக்சோவில் 2 பேர் கைதாகி உள்ளனர். நித்திரவிளை அருகே உள்ள ஒரு கிராமத்தை சேர்ந்த அந்த 10 வயது சிறுமிக்கு, அப்பா இல்லை.. அம்மாவும் அவரை பிரிந்து சென்றுவிட்டார்.. இதனால், தூத்தூர் வட்டவிளாகம் பகுதியில், ஜான் (67) என்பவர், தன்னுடைய வீட்டிலேயே சிறுமியை தங்க வைத்திருந்தார். இவர் சிறுமிக்கு தாத்தா உறவு முறையாகிறது.
கன்னியாகுமரி: ஆனால், கடந்த ஒரு வருட காலமாகவே, சிறுமியை மிரட்டி ஜான் பாலியல் பலாத்காரம் செய்து வந்ததாக கூறப்படுகிறது. இந்த சம்பவத்தை யாரிடம் சொல்வது என தெரியாமல் 9 வயது குழந்தையும் பயந்து அழுதபடியே இருந்திருக்கிறார்.. நாளுக்கு நாள் தாத்தாவின் தொல்லை அதிகமாகவும், சிறுமி எதிர்ப்பு தெரிவிக்க துவங்கியிருக்கிறாள். இதனால், வெளியில் தன்னை பற்றி சிறுமி சொல்லிவிடுவாளோ என்று பயந்துபோன தாத்தா, அதேபகுதியில் உள்ள குழந்தைகள் இல்லத்தில் சிறுமியை சேர்த்துவிட்டார்.
அங்குள்ள மற்ற குழந்தைகளிடம், தாத்தா வீட்டில் தங்கியிருந்தபோது தனக்கு நேர்ந்த கொடூரத்தை சிறுமிகளிடம் சொல்லி அழுதிருக்கிறாள் சிறுமி.. இதற்கு பிறகுதான் இந்த விஷயம் வெளியே தெரிய வந்தது.. உடனே மாவட்ட குழந்தைகள் பாதுகாப்பு அலுவலருக்கு தகவல் தந்து வரவழைக்கப்பட்டனர். அவர்களும் சிறுமியிடம் இதை பற்றி விசாரித்து, இறுதியில் குளச்சல் மகளிர் போலீஸில் புகார் தரப்பட்டது. இதையடுத்து, போக்சோவில் ஜான் கைதாகி உள்ளார்.
நடுங்கும் சிறுமி: இதுபோலவே, இதே கருங்கல் பூட்டேற்றி அருகே உள்ள கிராம பகுதியை சேர்ந்தவர் முரளி.. இவருக்கு 64 வயதாகிறது.. பேத்தி உறவுமுறையான 6 வயது சிறுமியை அடிக்கடி கடைக்கு அழைத்து சென்று சாக்லேட், பிஸ்கெட் வாங்கி தருவாராம்.. ஆனால் சிறுமி கடைக்குபோய்விட்டு திரும்பி வரும்போதெல்லாம் சிறுமி மிகவும் சோர்வுடனே வருவாராம்..
பிறகு நாளடைவில், முரளி கடைக்கு கூப்பிட்டபோதெல்லாம் சிறுமி வரமாட்டேன் என்று சொல்லி பயந்து அழுவாராம்.. அதுவும் இல்லாமல் முரளியை பார்த்தாலே, உடம்பெல்லாம் அந்த குழந்தைக்கு நடுங்கி போய்விடுமாம். இதையெல்லாம் சிறுமியின் அம்மா கவனித்துள்ளார். அதற்கு பிறகுதான், சிறுமியிடம் நடந்ததை விசாரித்துள்ளார்..
அதிர்ச்சி: முரளி, தன்னை கடைக்கு அழைத்து செல்வதாக சொல்லி, பாலியல் தொந்தரவு கொடுத்ததாக சொல்லி கதறி அழுதுள்ளார். இதைக்கேட்டு அதிர்ச்சியடைந்த சிறுமியின் அம்மா, குளச்சல் போலீசில் புகார் அளித்தார். இதன்பேரில் முரளி மீதுபோக்சோ வழக்குப்பதிவு செய்து கைது செய்தனர்.
கன்னியாகுமரி மாவட்டத்தில், நடந்த இந்த 2 சம்பவமும் பெரும் அதிர்ச்சியை தந்து வருகிறது.. இப்போது இந்த 2 தாத்தாக்களும் ஜெயிலில் உள்ளார்கள்... ஆனால் போக்சோ சட்டம் நடைமுறையில் இருந்தும்கூட, பாலியல் குற்றங்கள் குறையவே இல்லையென்றால், சட்டத்தை இன்னும் கடுமையாக்க வேண்டியுள்ளது.. பெண் குழந்தைகள் மீது "கை" வைக்கவே நடுங்கும் அளவுக்கு தண்டனையை தீவிரப்படுத்த வேண்டியிருக்கிறது.
-
லால்குடியில் களமிறங்கிய ஆதவ் அர்ஜுனா மாமியார்.. அதிமுகவில் இணைந்த 1 மாதத்தில் சீட் கொடுத்த எடப்பாடி -
ரசிகர்கள் எதிர்பார்த்த வீடியோவை வெளியிட்ட திரிஷா.. ஒரு வழியாக எல்லோரும் கேட்டது நடந்துடுச்சு.. குவியும் பாராட்டு -
ஓசூரில் சத்தமின்றி புரட்சி.. ரெடியாகும் தமிழ்நாட்டின் 6-வது பிரம்மாண்ட 'டைடல் பார்க்'.. தரமான வேகம் -
பாதாளத்தில் பாய்ந்த அமெரிக்கா! டிரம்ப் கொஞ்சம் கூட எதிர்பார்க்காத சம்பவம்.. மொத்தமா போச்சு! -
வாழ்க்கை துணை கிடைச்சிடுச்சு.. இவர்தான் ஜென்டில்மேன்! சர்ச்சைக்கு மத்தியில் திரிஷாவின் லேட்டஸ்ட் பதிவு -
தமிழ் புத்தாண்டு பலன்: குருவின் அருளால் மகர ராசிக்கு அடிக்கும் ஜாக்பாட்.. பிரகாசமாகப் போறீங்க -
இடி, மின்னலுடன் மழை கொட்டப்போகுது.. அடிக்கும் வெயிலுக்கு ஜில் அப்டேட் கொடுத்த வானிலை மையம்! -
ஸ்டாலின் களமிறக்கும் "மிசைல்" விஐபி! அதிமுக எதிர்பார்க்கல! விஸ்வநாதனுக்கு செக்? திமுக சர்ப்ரைஸ் மூவ் -
உங்கள் வீட்டு பீரோவில் 62 சவரன் தங்கம் இருக்கா? நகைக்கு இந்த ஒரு கணக்கு இல்லனா ஐடி நோட்டீஸ் வரலாம் -
பெங்களூர் மாணவியிடம் கிட்ட நெருங்கிய ஆசிரியர்! அந்த பயங்கர காட்சி.. உடனே செருப்பை கழட்டி! என்னாச்சு -
எடப்பாடி பழனிசாமி வைத்த பொறி.. சிக்கிய அண்ணாமலை.. சல்லி சல்லியாக உடைந்த பர்னிச்சர் -
செங்கோட்டையனுக்கு பதில் கோபியில் பிரபு! 127 வேட்பாளர்களை அறிவித்தார் எடப்பாடி பழனிசாமி












Click it and Unblock the Notifications