கன்னியாகுமரி "பபிஷா".. சென்னை லாட்ஜூக்குள் திடீர்னு நுழைந்தால் "புதுபொண்டாட்டி".. கிறுகிறுத்த போலீஸ்

Subscribe to Oneindia Tamil

கன்னியாகுமரி: குமரி குலசேகரத்தில் நடந்த சம்பவம் தொடர்பாக போலீசார் விசாரித்து கொண்டிருக்கிறார்கள்.. என்ன நடந்தது புது மாப்பிள்ளைக்கு?
கன்னியாகுமரி மாவட்டம் குலசேகரத்தை அடுத்துள்ளது செருப்பாலூர் என்ற பகுதி.. இங்கு வசித்து வருபவர் விஷ்ணு.. 27 வயதாகிறது.. இவர் ஒரு பிரைவேட் கம்பெனியில் வேலை பார்த்து வருகிறார்.

Kanniyakumari Kulasekharam incident and why did police enter into the Chennai Lodge

காதலி: இவர் பபிஷா என்ற பெண்ணை தீவிரமாக காதலித்து வந்தார்.. மாமூட்டுக்கடை பகுதியை சேர்ந்தவர் பபிஷா.. 25 வயதாகிறது. பபிஷாவும் விஷ்ணுவை உயிருக்கு உயிராக விரும்பிய நிலையில், கடந்த மே மாதம் 25-ந்தேதி இவர்கள் கல்யாணம் செய்து கொண்டனர்.

புதுமண தம்பதி 2 பேரும் பபிஷாவின் அம்மா வீட்டிற்கு கடந்த 3-ந்தேதி விருந்துக்கு சென்றிருக்கிறார்கள்.. பிறகு, பபிஷாவை அங்கேயே விட்டுவிட்டு, விஷ்ணு மட்டும் காலையில் கிளம்பி வேலைக்கு சென்று விட்டார். சாயங்காலம் வீட்டுக்கு வந்து பார்த்தால் பபிஷாவை காணவில்லை.. பபிஷா எங்கே என்று, தன் மாமியாரிடம் கேட்டுள்ளார்.. அதற்கு அவர், வெளியே செல்வதாக மட்டும் சொல்லிவிட்டு போனதாக கூறியிருக்கிறார்.

பபிஷா எங்கே: ஆனால், நைட் நேரமாகியும் பபிஷா வீட்டுக்கு திரும்பவில்லை.. இதனால் புது மனைவியை காணாமல் பதறிப்போனார் விஷ்ணு.. உடனே மார்த்தாண்டம் போலீஸ் ஸ்டேஷனுக்கு ஓடினார்.. மனைவி மாயமாகிவிட்டதாக புகார் தந்தார்.. போலீசாரும் வழக்கு பதிவு செய்து, காணாமல் போன பபிஷாவை தேட ஆரம்பித்தனர்.. இதற்காக, பபிஷாவின் செல்போன் டவர் வைத்து, அவர் எங்கிருக்கிறார் என்று டிரேஸ் செய்ய துவங்கினர்.

அப்போது அவர் சென்னையில் இருப்பதாக செல்போன் சிக்னல் காட்டியது.. உடனே போலீசார் சென்னைக்கு விரைந்தனர்.. கடைசியில் சிக்னல் இருக்குமிடத்தை பார்த்தால் அது ஒரு லாட்ஜ் என்று தெரியவந்தது.. அந்த லாட்ஜுக்குள் அதிரடியாக நுழைந்து, ஒவ்வொரு ரூமாக சென்று பார்த்ததில், பபிஷா சிக்கினார்.. ஒரு அறையில் அவருடன் இளைஞர் ஒருவரும் தங்கியிருந்தார்.. போலீசாரை பார்த்ததுமே அந்த நபர் எகிறி குதித்து தப்பி ஓடிவிட்டார்..

தஞ்சாவூர்: இதற்கு பிறகு போலீசாரின் விசாரணைக்குள் வந்தார் பபிஷா.. எகிறி ஓட்டம்பிடித்த அந்த நபர் தஞ்சாவூரை சேர்ந்தவராம்.. பபிஷாவின் காதலனாம்.. அதாவது, விஷ்ணுவை காதலித்து கொண்டே, இன்ஸ்டாகிராம் மூலம் பழக்கமான அந்த இளைஞரையும் பபிஷா காதலித்து வந்துள்ளார். 2 பேரை ஒருவருக்கொருவர் தெரியாமல், காதலித்து வந்தநிலையில், விஷ்ணுவை கல்யாணம் செய்துள்ளார்..

Kanniyakumari Kulasekharam incident and why did police enter into the Chennai Lodge

கல்யாணம் ஆகி இந்த குறுகிய நாட்களிலும்கூட, அந்த இளைஞருடன் ஊர் சுற்றி வந்திருக்கிறார் பபிஷா.. ஒருகட்டத்தில் கணவரை கைவிட்டுவிட்டு, காதலனுடன் பபிஷா ஓட்டம் பிடித்துள்ளார்.

அதிர்ச்சி: இத்தனை விவரங்களையும் போலீசாரிடம் சொல்லிய பபிஷா, போலீசாரின் விசாரணையில் தொடர்ந்து உள்ளார்.. புது பொண்டாட்டிக்கு என்ன ஆச்சோ? ஏது ஆச்சோ என்று பதறிய புதுமாப்பிள்ளை, தலையில் இடி விழுந்தது போல ஆகிவிட்டார்.. இன்னும் பபிஷா தந்த ஷாக்கில் இருந்து மீளவில்லை..!!

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+