லாட்ஜ்ஜில் தங்கிய ஜோடி.. படக்குனு 4வது மாடிக்கு ஓடிய கணவர்..பின்னாடியே போன போலீஸ்.. ம்ஹூம் கேக்கலயே

Subscribe to Oneindia Tamil

கன்னியாகுமரி: கன்னியாகுமரி லாட்ஜ் ஒன்றில் நடந்த சம்பவத்தினால், போலீசார் கிட்டத்தட்ட 3 மணி நேரம் பதைபதைத்து போய்விட்டனர்.. என்ன நடந்தது?
கேரள மாநிலம் ஆலப்புழா மாவட்டம் படர்நிலம் பகுதியை சேர்ந்தவர் ரதீஸ்.. 30 வயதாகிறது.. அங்குள்ள ஒரு பேட்டரி கடையில் வேலை பார்த்து வருகிறார்.

திருமணமாகிவிட்டது.. மனைவி, 2 பெண் பிள்ளைகள் இருக்கிறார்கள்.. இவர் கடந்த ஒரு வாரத்திற்கு முன்பு, குடும்பத்தினருடன் சுற்றுலா வந்துள்ளார்.

 Kanniyakumari lodge and kerala tourist attempted suicide by jumping from floor

லாட்ஜ்ஜில் அக்கப்போர்: ஒரு பஸ்ஸை வாடகைக்கு பிடித்து, தன்னுடைய குடும்பத்தினர் மொத்தம் 47 பேரை அழைத்து கொண்டு, டூர் கிளம்பி உள்ளார்.. பல்வேறு இடங்களை சுற்றிப்பார்த்து விட்டு, 2 நாட்களுக்குமுன்பு கன்னியாகுமரிக்கு வந்து சேர்ந்தனர்..மாலை நேரம் கன்னியாகுமரி வந்துவிட்டதால், இரவு அங்கேயே தங்கிவிட்டு போக நினைத்தனர்.. இதற்காக ஒரு தனியார் லாட்ஜ்ஜில் அனைவரும் ரூம் எடுத்து தங்கினார்கள்.. பிறகு மறுநாள் காலை சுமார் 7 மணியளவில் ரதீஷ், தன்னுடைய ரூமில் இருந்து எழுந்து, 2வது மாடிக்கு சென்று இருக்கிறார்... பிறகு, அங்கிருந்து கீழே குதித்து தற்கொலை செய்வதாகவும் சத்தம் போட்டு உள்ளார்.

நைஸாக பேச்சு: அவரது அலறல் சத்தத்தை கேட்டு உறவினர்களுடன், லாட்ஜில் தங்கி இருந்த அனைவருமே அதிர்ச்சி அடைந்தனர். அதற்குள் அந்த பகுதி மக்களும் லாட்ஜில் திரண்டு விட்டனர்.. உடனடியாக கன்னியாகுமரி போலீஸ் நிலையம் மற்றும் தீயணைப்பு துறைக்கும் தகவல் தெரிவிக்கப்பட்டது.... தீயணைப்பு துறையினர் விரைந்து வந்து, ரதீஷின் குடும்பத்தாருடன் சேர்ந்து அவரிடம் பேச்சு தந்தார்கள்.. நைசாக பேசி அவரை கீழே இறங்கி வருமாறும் சொன்னார்கள்.. ஆனால், போலீஸ் பேசியும், குடும்பத்தார் பேசியும், ரதீஷ் எதையுமே காதில் போட்டுக் கொள்ளவில்லை..

கண்ணீர் கதறல்: அவர் 3 மற்றும் 4-வது மாடிக்கு ஓடினார். இதனால், தீயணைப்பு துறையினரும் அவர் பின்னாடியே, 3-வது, 4வது மாடிக்கு ஓடினார்கள்.. அவரை உயிருடன் மீட்கும் முயற்சியிலும் ஈடுபட்டனர். ஒருகட்டத்தில் பயந்துபோன குடும்பத்தினர், கண்ணீர் விட்டு கதறி அழ ஆரம்பித்துவிட்டனர்.. அவர்கள் கதறியதையும் ரதீஷ் கண்டுகொள்ளவில்லை.. தீயணைப்பு துறையினர் மேற்கொண்ட முயற்சிகளும் பயன் ஏற்படவில்லை. இப்படியே இரண்டரை மணி நேரம் ஓடியது.. யாராவது கிட்ட வந்தால் குதித்துவிடுவேன் என்று சொல்லி கொண்டேயிருந்தார்..

 Kanniyakumari lodge and kerala tourist attempted suicide by jumping from floor

எலும்பு உடைந்தது: இதற்கிடையில் 2 மணி நேர போராட்டத்துக்கு பிறகு 3-வது மாடியில் இருந்த அவர் முதல் மாடிக்கு இறங்கி வந்தார். அங்கு இருந்தபடியும் அவர் கீழே குதித்து தற்கொலை செய்து விடுவதாக மிரட்டல் விடுத்தார்... கடைசியில், காலை 9.30 மணிக்கு, திடீரென 2 மாடியில் இருந்து கீழே விழுந்தார் ரதீஷ்.. இதில் அவரது இடுப்பு எலும்பு உடைந்தாக கூறப்படுகிறது. உடனே தீயணைப்பு துறையினர் அவரை மீட்டு கன்னியாகுமரி அரசு மருத்துவமனையில் சிகிச்சைக்காக கொண்டு சென்றனர்... பிறகு, மேல் சிகிச்சைக்காக ஆசாரிபள்ளம் அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர்.. ரதீஷ் ஏன் தற்கொலை முயற்சியில் ஈடுபட்டார்? என்பது குறித்து போலீசார் தீவிர விசாரணை நடத்தினர். லேசான மனநலம் பாதிப்பு காரணமாக அவர் தற்கொலை மிரட்டல் விடுத்ததாக கூறப்படுகிறது.
இந்த சம்பவத்தால் சுமார் இரண்டரை மணி நேரம் அப்பகுதியில் பெரும் பரபரப்பு நிலவியது. இன்னொரு காரணமும் சொல்லப்படுகிறது.. ரதீஷூக்கு குடிப்பழக்கம் இருக்கிறதாம்.. மனைவியிடம் மது குடிக்க பணம் கேட்டு தகராறு செய்துள்ளார்.. ஆனால் அவர் பணம் கொடுக்கவில்லையாம். பலமுறை கேட்டும் பணம் தராததால், டென்ஷன் அடைந்த ரதீஷ் தற்கொலைக்கு முயன்றதும் தெரிய வந்தது... ஏற்கனவே, மன நலம் குன்றி இருந்த நிலையில், திடீரென லாட்ஜ் மாடியில் இருந்து கீழே குதித்து தற்கொலைக்கு முயன்ற சம்பவம் கன்னியாகுமரியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+