கலங்கிய கன்னியாகுமரி.. சொல்ல சொல்ல அடங்காத செல்ல மகள்.. பாத்ரூமில் அப்பா பகீர்.. பக்கத்தில் பிளேடு
கன்னியாகுமரி: பாடுபட்டு வளர்த்த மகள், தன்னை ஏமாற்றிவிட்டாரே என்ற விரக்தியில் பெற்ற தகப்பன் எடுத்த முடிவு கன்னியாகுமரியை அதிர வைத்து வருகிறது.
நாகர்கோவில் அருகே ஆரல்வாய்மொழி வடக்கூர் கீழத்தெருவை சேர்ந்தவர் சுந்தர்... 50 வயதாகிறது.. இவர் ஆரல்வாய்மொழியில் கவுன்சிலராக இருந்தவர்.. இப்போது சவுதி அரேபியாவில், ஒரு தனியார் நிறுவனத்தில் வேலை பார்த்து வருகிறார்.

திருமணம்: இவரது மனைவி பெயர் ரூபா.. இவர்களது ஒரே மகள், நாகர்கோவிலிலுள்ள கல்லூரியில் பி.காம் 3-ம் வருடம் படித்து வருகிறார்.. இவர், தனக்கு நட்பான இளைஞர் ஒருவரை காதலித்து வந்துள்ளார்.. இந்த காதல் விவகாரம் பெற்றோருக்கு தெரியவந்ததுமே, பெண்ணின் வீட்டில் கொந்தளித்தனர்.. காதலை கைவிட்டுவிட்டு, படிப்பில் கவனம் செலுத்த சொல்லியிருக்கிறார்கள்.
ஆனாலும் மகளால் காதலை கைவிட முடியவில்லை.. எனினும், தங்கள் மகளை கண்டித்து, விடாமல் அறிவுரைகளை சொல்லி வந்தனர்.. அப்போதும் அந்த பெண் அசரவேயில்லை..
காதலன்: ஒரு கட்டத்தில் பெற்றோரின் எதிர்ப்பையும் மீறி, 2 வாரங்களுக்கு முன்பு காதலனுடன் ஓடிச்சென்று கோவிலில் வைத்து திருமணம் செய்து கொண்டார்.. இந்த விஷயம் வெளிநாட்டிலுள்ள சுந்தருக்கு தெரியவந்ததுமே, அதிர்ச்சி அடைந்தார்.. உடனடியாக வெளிநாட்டிலிருந்து கிளம்பி சொந்த ஊருக்கு வந்தார்..
எவ்வளவு அட்வைஸ் செய்தும், தங்களது ஒரே மகள் அதை மதிக்கவில்லையே? தன்னை ஏமாற்றிவிட்டு வீட்டை விட்டு ஓடிச்சென்று திருமணமும் நடந்துவிட்டதே? என்று சுந்தர் வேதனையும், விரக்தியும் அடைந்தார்.. எனினும், மகள் மீதிருந்த பாசத்தினால், இந்த திருமணத்தை ஏற்றுக்கொண்டார்.. அதேசமயம், விரக்தியிலிருந்து அவரால் மீளவே முடியவில்லை.. இதனால், யாரிடமும் பேசாமல் மனஉளைச்சலிலேயே இருந்தார்.
கழிவறை: சம்பவத்தன்று இரவு மாடியிலுள்ள பாத்ரூமுக்குள் செல்வதாக சொல்லிவிட்டு போனார் சுந்தர்.. ஆனால், நீண்ட நேரமாகியும் அவர் கழிவறையிலிருந்து வெளியே வரவில்லை.. இதனால் சந்தேகமடைந்த அவரது மனைவி மாடிக்கு சென்று பார்த்தபோது, பாத்ரூம் கதவு உள்பக்கமாக தாழ்ப்பாள் போடப்பட்டிருந்தது. ஆனால், பாத்ரூமிலிருந்து முனகல் சத்தம் மட்டும் கேட்டது.
இதனால் பதறிப்போன மனைவி, அக்கம் பக்கத்தினரின் உதவி கேட்டு, பாத்ரூம் கதவை உடைத்து, உள்ளே சென்றார். அப்போது, கழுத்து அறுக்கப்பட்ட நிலையில் சுந்தர் ரத்த வெள்ளத்தில் விழுந்து கிடந்தார்.. சுந்தருக்கு பக்கத்திலேயே ஒரு பிளேடு கிடந்தது. சுந்தரை பார்த்து அலறிய மனைவி, உடனடியாக ஆம்புலன்ஸ் மூலம் மருத்துவமனைக்கு கொண்டு சென்றார். ஆனால், டாக்டர்கள் பரிசோதித்துவிட்டு, சுந்தர் ஏற்கனேவே இறந்து விட்டதாக சொல்லிவிட்டார்கள்.
அதிர்ச்சி: பின்னர் ஆரல்வாய்மொழி போலீசார் இதுகுறித்த விசாரணையை துவங்கியிருக்கிறார்கள்.. வேறுவழியின்றி மகள் திருமணத்தை ஏற்றுக்கொண்டாலும், தன்னை மகள் ஏமாற்றிவிட்டதை சுந்தரால் ஜீரணிக்க முடியாமலேயே இப்படியொரு முடிவை எடுத்திருக்கலாம் என்கிறார்கள்.. பிளேடால் கழுத்தை அறுத்து பெற்ற தகப்பன் தற்கொலை செய்துகொண்ட சம்பவம் குமரி மாவட்டத்தில் பெரும் பரபரப்பை தந்துவருகிறது.
-
ரூட்டை மாற்றிய இந்திய ஐடி நிறுவனங்கள்.. இனியும் சும்மா இருந்தா வேலைக்கு ஆகாது! -
மேகதாதுவில் அணை கட்ட தமிழகத்தின் அனுமதி தேவையில்லை.. கர்நாடக முதல்வரானதும் டிகே சிவக்குமார் பேச்சு -
விஜய்யின் ஆலோசகர் + 2 அமைச்சர்களால் நேர்ந்த அவமானம்.. சட்டசபை செயலாளர் சீனிவாசன் பதவி விலகியது ஏன்? -
தமிழகம் முழுவதும் டாஸ்மாக் கடைகள், பார்களை தனியாரிடம் ஒப்படைக்க திட்டம்? விஜய் எடுக்க போகும் முடிவு? -
75 பவுன்ஸ் ஆன செக்குகள்.. நடிகர் கரண் வாழ்க்கையை கெடுத்தது அந்த பெண்ணா? உண்மையை உடைத்த பிரபலம் -
எலக்ட்ரீஷியன் நள்ளிரவில் வாஷ்பேசினில் பண்ண காரியம்! உறைந்து போன 4 பிஞ்சு குழந்தைகள்! பதைபதைத்த கேரளா -
பனையூர் பாபுவின் மாஸ் மூவ்... அந்த தொகுதிதான் காரணமா? 7ம் தேதி திமுகவில் சர்ப்ரைஸ்.. ஆடிப்போன விசிக -
விஜய்யை இப்படியே விடக்கூடாது.. பாஜக பாணியை கையில் எடுக்கும் திமுக.. பெரிய மாற்றம் வரப்போகுது -
டாஸ்மாக் தனியார் மயம் ஆகிறதா? மிகப்பெரிய சீர்திருத்தம் வரப்போகிறது.. அமைச்சர் விக்னேஷ் தகவல் -
விஜய் அமைச்சரவை கூட்டத்தின் Exclusive Footage.. திமுக ஐடி விங் பதிவிட்ட வீடியோ! -
திருச்செந்தூர் முருகனின் விஸ்வரூப தரிசனம்! அடுத்தடுத்து முதல்வர்களான விஜய், டி.கே.சிவக்குமார்! -
தவெக அரசின் முதல் பிரம்மாண்ட முதலீடு: எல் அண்ட் டி உடன் ₹18,600 கோடி ஒப்பந்தம்.. 8,200 வேலைவாய்ப்பு!












Click it and Unblock the Notifications