கன்னியாகுமரியின் "லிவிங் டூகெதர்".. அம்மாவின் காதலனின், தம்பியோடு ஓட்டம் பிடித்த மகள்.. தலை சுத்துதே
கன்னியாகுமரி: கன்னியாகுமரியில் நடந்த காதல் விவகாரம் ஒன்று, குடும்பத்தினரை பதற வைத்து வருகிறது. இது தொடர்பாக மார்த்தாண்டம் போலீசார் துரிதமான விசாரணையை மேற்கொண்டு வருகிறார்கள்.
கன்னியாகுமரி மாவட்டம் மார்த்தாண்டம் அருகே உள்ளது திருவிதாங்கோடு.. இங்கு வசித்து வருகிறார் 34 வயது பெண்.. இவருக்கு திருமணமாகிவிட்டது. ஆனால், கருத்து வேறுபாடு காரணமாக கணவனை பிரிந்து தன்னுடைய பிள்ளைகளுடன் வாழ்ந்து வருகிறார்.

படிப்பு நிறுத்தம்: இவருக்கு 16 வயதில் மகனும், 15 வயதில் மகளும் உள்ளனர்... இந்த 15 வயது மகள் அதே பகுதியிலுள்ள ஒரு பள்ளியில் 9ம் வகுப்பு படித்து வந்தார்.. ஆனால், படிப்பை தொடராமல், பாதியிலேயே விட்டுவிட்டதால், வீட்டிலேயே இருந்து வருகிறார்..
இந்நிலையில், குருந்தன்கோடை சேர்ந்த சிவக்குமார் என்ற இளைஞருடன், 34 வயது தாய்க்கு பழக்கம் ஏற்பட்டது.. பிறகு இருவருமே நெருங்கி பழக ஆரம்பித்தனர்.. 15 வயது மகள் வீட்டில் இருந்தும்கூட, ஒரே வீட்டில் "லிவிங் டுகெதர்" உறவில் வாழ துவங்கிவிட்டனர்.
சிவக்குமார்: இப்படிப்பட்ட சூழலில், சிவக்குமாரின் தம்பி கண்ணன் என்பவர், அண்ணனை பார்ப்பதற்காக , வீட்டுக்கு வந்துள்ளார்.. கண்ணனுக்கு 20 வயதாகிறது.. அடிக்கடி வீட்டுக்கு வந்து செல்லவும், சிறுமியின் மீது கண்ணனுக்கு ஆசை வந்துள்ளது. அதனால், சிறுமியிடம் நெருங்கி பழகியிருக்கிறார். ஒருநாள் தன்னுடைய காதலை கண்ணன் சொல்லவும், சிறுமியும் அந்த காதலை ஏற்றுள்ளார்..
இவ்வளவு சமாச்சாரம் ஒரே வீட்டில் நடந்து கொண்டிருக்கிறது.. ஆனால், அந்த சிறுமியின் அம்மாவுக்கு இது எதுவுமே தெரியாது... தன்னுடைய காதலனின் தம்பிதானே? என்பதால், அம்மாவுக்கு சந்தேகம் வரவில்லை.
கண்ணன் போன்: சம்பவத்தன்று மதியம், திருவிதாங்கோட்டிலுள்ள தாத்தா வீட்டிற்கு சென்றிருந்தார் சிறுமி.. அப்போது தாத்தாவின் செல்போனுக்கு கண்ணன் போன் செய்து, சிறுமியிடம் பேச வேண்டும் என்று சொல்லிஉள்ளார்.. குடும்பத்துக்கு தெரிந்த நபர்தானே என்று நினைத்த தாத்தா, தன்னுடைய போனை சிறுமியிடம் தந்து பேச சொல்லி உள்ளார். அப்போது கண்ணன் சிறுமியிடம், "நாம கல்யாணம் செய்துக்கலாமா" என்று கேட்டுள்ளார்.
இதைக்கேட்டு கொஞ்சம்கூட யோசிக்காத சிறுமி, "இப்பவே வீட்டை விட்டு வரேன்" என்று சொல்லிவிட்டு, அங்கிருந்த தாத்தாவையும் ஏமாற்றிவிட்டு, வீட்டை விட்டு வெளியேறினார். பிறகு கண்ணன் சிறுமியை அழைத்துக்கொண்டு எங்கேயோ தப்பி சென்றுவிட்டார்.
சிறுமியின் அம்மா: இதனிடையே, பேத்தியை காணாமல் தாத்தா பதறினார்.. நீண்ட நேரமாக வீட்டிற்கும் வரவில்லை என்பதால், அதிர்ச்சியடைந்த தாத்தா, உடனடியாக சிறுமியின் அம்மாவுக்கு போன் செய்து விஷயத்தை சொன்னார்.. அப்போதுதான் கண்ணனையும் காணவில்லை என்பது தெரியவந்துள்ளது.
இதற்கு பிறகு, தன்னுடைய மகளை கண்ணன் கடத்தி சென்றிருப்பதை உறுதி செய்த அம்மா, மார்த்தாண்டம் மகளிர் போலீசில் புகார் தந்தார்.. இதன்பேரில் வழக்குப்பதிந்த போலீசார், இது தொடர்பான விசாரணையை மேற்கொண்டுள்ளனர்.. வீட்டை விட்டு ஓடிச்சென்ற 2 பேரும் எங்கே என்று தெரியவில்லை.. சிறுமியை கண்ணன் எங்கு அழைத்து சென்றார்? 2 பேரும் இப்போது எங்கே பதுங்கியிருக்கிறார்கள் என தெரியவில்லை.. போலீசார் தேடிக் கொண்டிருக்கிறார்கள்.












Click it and Unblock the Notifications