Get Updates
Get notified of breaking news, exclusive insights, and must-see stories!

கன்னியாகுமரிக்கு.. நல்ல சேதி வரப்போகுதாமே..அதுவும் குழித்துறை ரயில்வே ஸ்டேஷனில்.. பரபர எதிர்பார்ப்பு

Subscribe to Oneindia Tamil

கன்னியாகுமரி: விரைவில் கன்னியாகுமரிக்கு குட்நியூஸ் ஒன்று வரப்போவதாக சொல்கிறார்கள்.. இதுகுறித்த கோரிக்கை ஒன்று வலுத்தும் வருகிறது.

கன்னியாகுமரி-மும்பை இடையே ஸ்பெஷல் ரயில் சென்று வருகிறது.. ஆனால், இந்த ரயில், குழித்துறை ரயில்வே ஸ்டேஷனில் நிறுத்தப்படுவதில்லை.

இதனால், ரயில்வே அறிவித்திருக்கும் இந்த சிறப்பு ரயிலுக்கு குழித்துறை ரயில்வே ஸ்டேஷனில் நிறுத்தம் வேண்டும் என்று நீண்ட நாட்களாகவே கோரிக்கையை எழுப்பி வருகிறார்கள்.

கன்னியாகுமரி: காரணம், கன்னியாகுமரி மாவட்டத்தில் குழித்துறை 2வது பெரிய ரயில் நிலையம் ஆகும். இதன் வழியாக இயக்கப்படும் திருநெல்வேலி - ஜாம்நகர் (வாரம் இருமுறை), நாகர்கோவில்- காந்திதாம் (வாராந்திர ரயில்), கன்னியாகுமரி - திப்ருகர் (வாரம் இருமுறை), நாகர்கோவில்- ஷாலிமார் (வாராந்திர ரயில்), திருநெல்வேலி- காந்திதாம் ஹம்சஃபார் (வாராந்திர ரயில்) ஆகிய ரயில்கள் நிறுத்தம் இல்லாமல் இயக்கப்பட்டு வருகிறது.

Kanniyakumari mumbai special train and kulitura railway station announcement

ரயில்பயணம்: அந்தவகையில், நிறுத்தத்தை அறிவித்தால், தங்களுக்கு பயணம் எளிதாக இருக்கும் என்று ரயில் பயணிகள் கேட்டு வருகிறார்கள்.. ஆனால், திடீரென இந்த ரயில் சில மாதத்திலேயே நிறுத்தப்பட்டுவிட்டது.. அதாவது, கடந்த டிசம்பரில் அறிவிக்கப்பட்டு, மே மாதம் வரை மட்டுமே இயக்கப்பட்டு வந்தது.. சில மாதங்களே ஆனாலும், ரயில் பயணிகளுக்கு இந்த ஸ்பெஷல் ரயிலானது, ஒரு வரப்பிரசாதமாகவே இருந்தது.

இப்போது இந்த ரயிலை மறுபடியும் இயக்க வேண்டும் என்ற வேண்டுகோள் விடுக்கப்பட்டுள்ளது.. கன்னியாகுமரியில் இருந்து மும்பைக்கு இயக்கப்பட்ட சிறப்பு ரயிலை மறுபடியும் இயக்க வேண்டுமென கன்னியாகுமரி ரயில் பயணியர் சங்கம் அறிக்கை ஒன்றையே வெளியிட்டுள்ளது. அந்த அறிக்கையில் உள்ளதாவது

ஸ்பெஷல் அறிவிப்பு: கன்னியாகுமரியில் இருந்து கேரளா மாநிலம் திருவனந்தபுரம் எர்ணாகுளம் மங்களூரு கோவா வழியாக மும்பைக்கு வாராந்திர சிறப்பு ரயில் கடந்த ஆண்டு டிசம்பரில் அறிவிக்கப்பட்டு மே மாதம் முடிய இயக்கப்பட்டு வந்தது.. இந்த ரயில் கன்னியாகுமரி கேரளா பயணியர் இடையே மிகுந்த வரவேற்பை பெற்றது; ரயில்வே துறைக்கு அதிக வருவாய் கிடைத்து வந்தது. இப்போது இந்த ரயில் சேவை திடீரென நிறுத்தப்பட்டு விட்டது....

கன்னியாகுமரியில் இருந்து மும்பைக்கு இயக்கப்பட்ட ஜெயந்தி ஜனதா விரைவு ரயில் தற்போது புனே உடன் நிறுத்தப்பட்டு விட்டது.

கன்னியாகுமரி: இதனால் கன்னியாகுமரி மாவட்டத்தில் உள்ள இரணியல் குழித்துறை, கேரளாவில் உள்ள பாறசாலை நெய்யாற்றின்கரை ஆகிய ரயில் நிலைய பயணியர் மும்பைக்கு இப்போது நேரடி ரயில் சேவை இல்லாமல் அவதிப்படுகின்றனர்.. அதனால், பயணியர் நலன் கருதி கன்னியாகுமரி - மும்பை சிறப்பு ரயிலை மீண்டும் இயக்க வேண்டும் என்று அந்த அறிக்கையில் கேட்டுக் கொண்டுள்ளனர். இந்த வேண்டுகோளின்படி விரைவில் ரயிலை இயக்க, ரயில்வே துறை முடிவு செய்யும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

More From
Prev
Next
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+