பச்சை பச்சையாக.. சர்ச்சுக்கு வரும் பெண்களிடம் பாதிரியார் செய்த வாட்ஸ்அப் சாட்.. கொடுமை..!
குமரி: சர்ச்சில் பாதிரியாராக பணியாற்றிய பெனடிக் என்பவர், தற்போது குமரி போலீசாரின் விசாரணை பிடியில் உள்ளார்.. இந்நிலையில், இளம்பெண்களிடம் அவர் செய்த வாட்ஸ்அப் சேட்டிங் மெசேஜ்கள் கசிந்துள்ளன.
குமரி மாவட்டம் களியக்காவிளை பகுதியைச் சேர்ந்தவர் பெனடிக்ட் ஆன்டோ... 29 வயதாகிறது.. நன்றாக படித்தவர்.. சென்னையில் தத்துவயியல், எம்பிஏ., எம்ஏ ஆங்கிலம் படித்திருக்கிறார்.
இதைதவிர, இறையியல் தொடர்பான படிப்புகளை கிட்டத்தட்ட 7 வருடங்கள் படித்துள்ளார்.. ஆங்கிலம், மலையாளம், தமிழ் ஆகிய மொழிகளை சரளமாக பேசக்கூடியவர்.

அரைநிர்வாணம்
பாதிரியாக பணியாற்றுவதற்கு முன்பிருந்தே, பெண்களிடம் நெருங்கி பழகி வந்திருக்கிறார். அந்தவகையில், சென்னையில் படிக்கும்போது ஒரு பெண்ணை 4 வருடங்களாக காதலித்துள்ளார்... அதே பெண்ணுக்கு கல்யாணமும் செய்து வைத்துள்ளார்... ஆனால், கல்யாணத்துக்கு பின்னரும் அந்த பெண்ணுடன் பெனடிக்ட் கள்ளக்காதலில் இருந்து வந்துள்ளார்... இவர்கள் இருவரும் அரை நிர்வாணத்தில் பேசிக்கொண்ட வீடியோ கால் ஸ்கிரீன் ஷாட்டுகள் முதன்முதலில் இணையத்தில் வெளியாகியபோதுதான், பெனடிக்கின் லீலைகள் ஒவ்வொன்றாக வெளியே தெரிய ஆரம்பித்தது.

சர்ச்சுக்குள்
கல்லூரி மாணவிகள், திருமணமான பெண்கள், அவர்கள் வீட்டு பெண்கள் என 80க்கும் மேற்பட்ட பெண்களுடன் நெருங்கி பழகியதாகவும் கூறப்படுகிறது. எப்போதுமே சர்ச்சுக்கு வரும் இளம் பெண்களிடம், அறிமுகம் செய்து கொண்டு, அவர்களுடைய வாட்சப் நம்பர் கேட்டு வாங்கி கொள்வாராம்.. அதற்கு பிறகு, குட் மார்னிங், குட் நைட் மெசேஜ்களை அனுப்ப தொடங்குவாராம்.. அதற்கு யாரிடமிருந்தாவது ரிப்ளை வந்துவிட்டால், உடனே அவர்களிடம் அடுத்தகட்ட பேச்சை ஆரம்பிப்பாராம்.. அப்போது, 'நான் சர்ச்சில் மட்டும்தான் பாதிரியார்.. மற்றபடி எல்லாரையும் போல நான் சராசரி மனிதன்" என்று சொல்லி, அந்த பெண்களிடம் உள்ள தயக்கத்தை உடைக்க முயற்சிப்பாராம்..

அழகா இருக்கே
அதற்கு பிறகு, "நீ அழகாய் இருக்கே, உன் டிரஸ் நல்லா இருந்தது" என்று அடுத்தக்கட்ட பேச்சை ஆரம்பித்து, இறுதியில் ஆபாச பேச்சில் வந்து முடிப்பாராம்.. இப்படித்தான் அந்த பெண்களை தன்னுடைய வலையில் விழ வைத்துள்ளதாக போலீசார் சொல்கிறார்கள். ஆனால், ஒரே வீட்டிற்குள் காண்டிராக்டரின் மனைவி, மகள், மருமகள் என ஒரே வீட்டில் 3 பேருடன் ஒருவருக்கு தெரியாமல் இன்னொருவருடன் உறவு வைத்திருந்ததுதான், பலருக்கும் மிகுந்த அதிர்ச்சியை ஏற்படுத்யிருக்கிறது.. பாதிரியார் பணியை செய்துக்கொண்டே, இந்த காரியங்களை எல்லாம் செய்ததுதான் பலராலும் ஜீரணிக்க முடியவில்லை என்கிறார்கள்..

ஒரே ரூமில்
இத்தனைக்கும் அனைத்துவிதமான தேவாலய சலுகைகளை பெனடிக்ட் பெற்றுக் கொண்டு வந்திருக்கிறார்.. அதுமட்டுமல்ல, பல பெண்களுடன் பெனடிக் ஆண்டோ நிர்வாண வீடியோ கால் பேசி பதிவு செய்ததும் விசாரணையின்போது கண்டுபிடிக்கப்பட்டிருக்கிறது. பாதிரியார் தலைமறைவாக இருந்த சில நாட்கள் கேரள மாநிலம் பாறசாலையைச் சேர்ந்த தனியார் பள்ளி ஆசிரியை, சட்டக் கல்லூரி மாணவி, பெண் மருத்துவர் ஆகியோருடன் ஒரே ரூமில் வசித்ததாக போலீசார் விசாரணையில் பெனடிக் ஆண்டோ வாக்குமூலம் அளித்துள்ளது அதற்கு மேல் அதிர்ச்சியை தந்து வருகிறது..

காமன்மேன்
"சர்ச்சில் மட்டும்தான் நான் பாதிரியார், சர்ச்சுக்கு வெளியே நான் காமன்மேன்" என்று பெனடிக் பெண்களிடம் சொல்லி வந்த நிலையில், சர்ச்சுக்குள்ளேயே அவர் "காம"ன்மேன் போலதான் நடந்து கொண்டுள்ளதாக தெரிகிறது.. அதற்கான வாட்ஸ்அப் மெசேஜ்களும் தற்போது லீக் ஆகி கடுமையான அதிர்ச்சையை ஏற்படுத்தி கொண்டிருக்கிறது.. அந்த மெசேஜ்கள் எல்லாமே ஆபாசமாகவும், படுவிரசமாகவும் உள்ளன.. இந்த ஆபாசமான மெசேஜ்கள், வீடியோக்களைத்தான், தான் உருவாக்கிய 30 வாட்ஸ்அப் க்ரூப்களிலும் பாதிரியார் தொடர்ந்து ஷேர் செய்து வந்திருக்கிறார்.

மிஸ்யூடா லவ்யூடா
உதாரணத்துக்கு, ஒரு வாட்ஸ்அப் மெசேஜில், இளம்பெண் ஒருவர் பாதிரியாரை கேட்கிறார், "மாஸ்ல கம்யூனியன் கொடுத்தப்போ, ஏதோ நீங்க யோசிச்ச மாதிரி இருந்துச்சு.. ஏன்? ஒரு செகண்ட் ஏதோ ஃப்ரீஸ் ஆகி நின்ன மாதிரி தெரிஞ்சதே" என்று அந்த பெண் கேட்கிறார்.. அதற்கு பாதிரியார், "சும்மா, உன்னை உடம்பை பார்த்தேன்" என்கிறார்.. அதற்கு அந்த பெண், "நான் தான் ஷால் போட்டிருந்தேனே" என்று சொல்ல, "தெரியும்ல" என்று ஆபாசமாக அந்த சேட்டிங் தொடர்கிறது.. மிஸ்யூடா, லவ்யூடா என்றெல்லாம் கேஷூவலாகவும், கேவலமாகவும் அந்த மெசேஜ் பரிமாற்றங்கள் நடந்துள்ளன... அதுமட்டுமல்லாமல், வாட்ஸ்அப்பிலேயே விளையாடலாம் என்று சொல்லி, ஆப்ஷன்களை தந்து பெண்களை வலையில் விழ வைத்துள்ளார்..

சேட்டிங் +சீட்டிங்
பெனடிக்கிடம் 2 லேப்டாப்கள் இருந்திருக்கின்றன.,. அதில், ஒரு லேப்டாப்தான் இப்போதைக்கு சிக்கியுள்ளது. அதில்தான் இதுவரை வெளியான போட்டோக்கள், வீடியோக்கள் இருந்திருக்கின்றன.. இன்னொரு லேப்டாப்பைதான் போலீசார் தேடி வருகிறார்கள்.. அதேபோல, பாதிரியார் மீது பாலியல் புகாரளித்த இளம்பெண்ணிடம் போலீசார் விசாரணை நடத்த முயன்றபோது, அவர் விசாரணைக்கு ஒத்துழைக்காமல் தலைமறைவாகிவிட்டதாக தெரிகிறது.. அந்த பெண்ணை கைது செய்து, இன்னொரு லேப்டாப்பையும் பறிமுதல்செய்தால்தான், மொத்த உண்மையும் வெளியாகும்.. இதனிடையே, பாதிரியாரின் வாட்ஸ் ஆப் சேட்டிங்கில் இருந்த அனைத்து பெண்களிடமும் விசாரணை நடத்த உள்ளதாக போலீசார் தெரிவித்துள்ளது பரபரப்பை கிளப்பி விட்டு வருகிறது.
-
கும்மிடிப்பூண்டியில் 3 வயது சிறுமி கூட்டு பாலியல் வன்கொடுமை செய்யப்படவில்லை- காவல் துறை விளக்கம் -
"என் கைய விடு" ஐஏஎஃப் அதிகாரி மனைவிக்கு தோழன் விரித்த வலை! வசிய மாந்திரீகம்! நாக்பூரில் யார் பாருங்க -
கும்மிடிப்பூண்டி சிறுமியின் பெற்றோரை மிரட்டினாரா தவெக எம்எல்ஏ விஜயகுமார்? மாதர் சங்கத்தினர் புகார் -
இப்படியா நடக்கனும்.. பாலியல் வன்கொடுமைக்கு ஆளான 3 வயது சிறுமி! சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார்! -
குமுறுது கும்மிடிப்பூண்டி.. 3 வயது குழந்தை பாலியல் வன்கொடுமை? முட்புதரில் வீசிச் சென்ற கொடூரன்கள்! -
“முதல்வர் விஜய் கையில் இருக்கும் காவல்துறை.. கட்சிக்காரர்களுக்கு பயம் இல்லை” - எடப்பாடி பழனிசாமி -
தவெகவின் வெற்றி தொலைக்காட்சி ஆரம்பம்.. அதிகாரப்பூர்வ அறிவிப்பு.. நாஞ்சில் சம்பத் வாழ்த்து -
"சாக்கடையில் இருக்க வேண்டியது.." கரப்பான் பூச்சி கட்சி குறித்து பவன் கல்யாண் சொன்ன கருத்து -
300 கோடி சொத்துக்காக நந்தனாவை நடுத்தெருவில் நிறுத்தினாங்களா? பாரதிராஜா குடும்பத்தில் இப்படி சிக்கலா? -
“மக்களை தெருநாய்களாக சித்தரித்த உங்களுக்கும் ஓட்டு போடுவாங்க”.. ராகவா லாரன்ஸுக்கு சேரன் பதில்! -
தவெக அமைச்சரவையில் இருந்து எந்நேரத்திலும் வெளியேறுவோம்.. திருமாவளவன் கருத்துக்கு வன்னி அரசு விளக்கம் -
"கலைஞர் டிவி, ஜெயா டிவிக்கு அடுத்ததாக 'வெற்றி டிவி'... ஜூன் 22-ல் லோகோ வெளியீடு? விஜய்யின் அடுத்த மாஸ்டர் மூவ் இதுதானா?"












Click it and Unblock the Notifications