கண் இமைக்கும் நேரத்தில் 'சூப்பர்மேன்' கேட்ச்! ஆப்கான் பேட்டரை மிரள வைத்த வைபவ் சூர்யவன்ஷி

Subscribe to Oneindia Tamil

மும்பை: ஆப்கானிஸ்தான் ஏ அணிக்கு எதிரான போட்டியின் போது, இந்திய அணியின் இளம் வீரர் வைபவ் சூர்யவன்ஷி கண் இமைக்கும் நேரத்தில் எடுத்த ஒரு அசாத்தியமான கேட்ச் தற்போது சமூக சோசியல் மீடியாவில் காட்டுத்தீயாய் பரவி வருகிறது. ஆப்கான் பேட்டர் காலித் தனிவால் களத்தில் மிரட்டலாக விளையாட முயன்றார். இந்திய பந்துவீச்சாளர் வீசிய பந்தை அவர் பலமாக லெக்-சைடு திசையில் விளாசினார்.

பந்து பேட்டில் பட்ட அடுத்த நொடி, அசாத்திய வேகத்தில் ஷார்ட் லெக் திசையில் நின்றுகொண்டிருந்த வைபவ் சூர்யவன்ஷியை நோக்கிச் சென்றது. பந்து தன்னை நோக்கி வருவதைக் கணிப்பதற்கு கூட நேரம் இல்லாத சூழலில், வைபவ் சூர்யவன்ஷி தனது அபாரமான ஃபீல்டிங் திறமையால், உடலை வளைத்து பந்தை ஒற்றைக் கையில் பிடித்து அசத்தினார்.

Vaibhav Sooryavanshi

காலித் தனிவால் தான் அடித்த பந்து பவுண்டரிக்குச் செல்லும் என்று நினைத்த வேளையில், சூர்யவன்ஷியின் இந்த 'சூப்பர்மேன்' கேட்ச்சைக் கண்டு அவுட்டாகி, ஏமாற்றத்துடன் மைதானத்தை விட்டு வெளியேறினார். மைதானத்தில் இருந்த சக இந்திய வீரர்களே இந்த கேட்ச்சை நம்ப முடியாமல் ஆச்சரியத்தில் உறைந்தனர்.

மிகவும் ஆபத்தான ஷார்ட் லெக் திசையில் நின்றுகொண்டு, இவ்வளவு துல்லியமாக ஒரு கேட்ச்சை எடுத்த வைபவ் சூர்யவன்ஷியின் ஃபீல்டிங் திறமையை கிரிக்கெட் விமர்சகர்களும், ரசிகர்களும் சமூக வலைதளங்களில் வெகுவாகப் பாராட்டி வருகின்றனர். இந்திய கிரிக்கெட்டின் வளர்ந்து வரும் இளம் நட்சத்திரமான வைபவ் சூர்யவன்ஷி, பேட்டிங்கில் மட்டுமின்றி ஃபீல்டிங்கிலும் தான் ஒரு கில்லாடி என்பதை நிரூபித்துள்ளார்.

இலங்கை ஏ அணிக்கு எதிரான போட்டியின் போது வைபவ் சூர்யவன்ஷி இலங்கை வீரரை தள்ளிவிட்டு நேரடியாக மோதலில் ஈடுபட்டார். களத்தில் ஸ்லெட்ஜிங்கை வைபவ் சூர்யவன்ஷியால் ஏற்றுக் கொள்ள முடியாமல் உடனடியாக ரியாக்ட் செய்துவிட்டார். அந்த வீடியோ சோசியல் மீடியாவில் வெளியாகி அவர் மீது கடுமையான விமர்சனங்களை பெற்று வருகிறது.

ஆனாலும் விமர்சனங்கள் எதுவும் வைபவ் சூர்யவன்ஷியை பாதிக்கவில்லை. ஆஃப்கானிஸ்தான் ஏ அணிக்கு எதிரான இன்றைய ஆட்டத்தில் கூட 28 பந்துகளில் 2 சிக்ஸ், 4 பவுண்டரி உட்பட 38 ரன்களை விளாசி அசத்தினார். இதன் மூலமாக இந்திய ஏ அணி இறுதிப்போட்டிக்கு முன்னேறி இருக்கிறது. இதனால் ஃபைனலிலும் வைபவ் சூர்யவன்ஷி அசத்துவாரா என்ற எதிர்பார்ப்பு எழுந்துள்ளது.

More From
Prev
Next
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+