கன்னியாகுமரி ரிசார்ட்டில் அசிங்கமா சிக்கிட்டாங்க.. யாருன்னு பாருங்க..அந்த காட்டேஜ் மேனேஜர் யாருப்பா?
கன்னியாகுமரி: கன்னியாகுமரி லாட்ஜ் ஒன்றில், போலீசார் நடத்திய ரெய்டு பெரும் பரபரப்பையும் அதிர்ச்சியையும் தந்துள்ளது.
லாட்ஜுக்கு பள்ளி மாணவியை அழைத்து வந்து பாலியல் தொந்தரவு செய்ததாக பள்ளி மாணவன் மீது போக்சோ வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது. மேலும் சிறுவர்களுக்கு அறை வழங்கிய லாட்ஜ் மேலாளர் மீதும் வழக்கு பதிவு செய்துள்ளனர்.

கன்னியாகுமரி: கன்னியாகுமரி ஒரு சுற்றுலா தளம் என்பதால், ஏராளமான காட்டேஜ்கள், விடுதிகள், ரிசார்ட்கள் அங்கு செயல்பட்டு வருகின்றன.. இந்நிலையில், இங்குள்ள ஒரு லாட்ஜ்ஜில், இளம்ஜோடிகள் வந்திருப்பதாகவும், அவர்களை பார்க்க சந்தேகமாக இருப்பதாகவும் போலீசாருக்கு ரகசிய தகவல் கிடைத்தது.
உடனே போலீசாரும், சம்பந்தப்பட்ட லாட்ஜ்ஜூக்கு விரைந்து சென்று, ஒவ்வொரு அறையிலும் சென்று சோதனை செய்தார்கள்.. அப்போது, 3 ரூம்களில் இளம் ஜோடிகள் தங்கியிருநதார்கள்.. இதில் ஒரு ஜோடியிடம் விசாரணை நடத்தியபோதுதான் தெரிந்தது, அவர்கள் 2 பேருக்குமே வெறும் 17 வயதுதான் ஆகிறதாம்.. 2 பேருமே பிளஸ் 1 படித்து வருகிறார்களாம்..
விசாரணை: எனவே, 2 பேரையுமே தனித்தனியாக போலீசார் விசாரித்தபோது, 2 பேருமே உளறி கொட்டினார்கள்.. பிறகு, மகளிர் போலீசாரிடம் அந்த மாணவி ஒப்படைக்கப்பட்டார்... மகளிர் போலீசாரும் 2 வீட்டின் பெற்றோருக்கும் தகவல் தந்து ஸ்டேஷனுக்கு வரவழைத்தனர்.
இந்த இளம்ஜோடி, நாகர்கோவிலை சேர்ந்தவர்களாம்.. இன்ஸ்டாகிராம் மூலம் இருவருக்கும் பழக்கம் ஏற்பட்டு, பிறகு செல்போனில் பேசிவந்துள்ளனர்.. ஒருகட்டத்தில் இருவருக்குமே நேரில் பார்க்க வேண்டும் என்று ஆசை வந்துள்ளது. இதனால், அடிக்கடி தனிமையில் சந்தித்து வந்தார்களாம்..
லாட்ஜ் ரூம்: தன்னுடைய நண்பர்களுடன் கன்னியாகுமரிக்கு டூர் செல்வதாக இருவருமே அவரவர் வீட்டில் சொல்லிவிட்டு வந்திருக்கிறார்கள்.. நண்பர்களுடன் கன்னியாகுமரி வந்தவர்கள், ஜாலியாக இருக்க வேண்டும் என்று ஆசைப்பட்டதால், லாட்ஜில் ரூம் எடுத்து தங்கியிருப்பதும் விசாரணையில் தெரியவந்துள்ளது.
இதற்குபிறகு, மாணவியின் அம்மா, கன்னியாகுமரி மகளிர் போலீஸில், மாணவன்மீது புகார் தந்தார்.. இந்த புகாரின்பேரில், போக்சோ வழக்கு மாணவன் மீது பதிவு செய்யப்பட்டது.. இந்த விவகாரத்தில், அந்த லாட்ஜ் மேனேஜரும் சிக்கியிருக்கிறார்..
சின்ன வயது பிள்ளைகள் என்றுகூட பார்க்காமல், இந்த குழந்தைகளுக்கு ரூம் ஒதுக்கி தந்திருக்கிறார் அந்த மேனேஜர்.. அதனால், அவர்மீதும் வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது..
கோரிக்கை: இந்த சம்பவத்தை கேள்விப்பட்டு பொதுமக்கள் பதறிப்போய் உள்ளனர்.. கன்னியாகுமரி லாட்ஜ், ரிசார்ட்டுகளில் அடிக்கடி போலீசார் சோதனை நடத்த வேண்டும் என்றும் கோரிக்கை விடுத்து வருகிறார்கள்.












Click it and Unblock the Notifications