கன்னியாகுமரி சூப் கடைக்காரருக்கு இது தேவையா? அந்த பொண்ணு யாரு? நாகர்கோவில் அர்ச்சகர் செஞ்சதை பாருங்க
கன்னியாகுமரி: கன்னியாகுமரி மாவட்டம் நாகர்கோவிலை சேர்ந்த சூப் கடைக்காரர், போலீசில் தந்த புகாரானது, பெரும் அதிர்ச்சியை தந்து வருகிறது. இந்த புகாரின்பேரில், அர்ச்சகர் ஒருவரை போலீசார் கைது செய்துள்ளது, அதற்கு மேல் பரபரப்பை குமரியில் ஏற்படுத்தி வருகிறது. என்ன நடந்தது?
கன்னியாகுமரி மாவட்டம் நாகர்கோவில் தட்டான்விளை பகுதியை சேர்ந்த 42 வயது நபர், மாவட்ட சைபர் கிரைம் போலீசாரிடம் புகார் மனு ஒன்றை அளித்திருக்கிறார்.. அந்த மனுவில் கூறியிருப்பதாவது:

அர்ச்சகர்: "நான் ராமன்புதூர் சந்திப்பில் சூப் கடை வைத்து நடத்தி வருகிறேன். நானும், நாகர்கோவில் அருகே உள்ள களியங்காடு பகுதியை சேர்ந்த அர்ச்சகரான ஈசான சிவம் என்ற ராஜா (34) என்பவரும் கடந்த 5 வருடங்களாக நண்பர்களாக பழகி வந்தோம்.. ஈசான சிவம், கோயில்களில் கும்பாபிஷேகம், பூஜைகள் உள்ளிட்ட பணிகளை செய்து வருகிறார்.
அவர் ஒருநாள் திடீரென என்னிடம் கும்பாபிஷேகம் மற்றும் பூஜைக்கு தேவையான பொருட்கள் விற்பனை செய்யும் கடை தொடங்க இருக்கிறேன். எனவே ரூ.10 லட்சம் தருவாயா? என்று கேட்டார். ஆனால் நான் பணம் தர மறுத்துவிட்டேன். இதனால் கருத்துவேறுபாடு ஏற்பட்டதால், அவர் என்னிடம் அப்போதிருந்து பேசுவதில்லை.
கோலப்பன்: இந்த நிலையில் திடீரென ஈசான சிவத்தின் நண்பர் என கூறி, தாழக்குடியை சேர்ந்த கோலப்பன் (53) என்பவர் என்னை தொடர்பு கொண்டார். "ஈசான சிவம், உங்களிடம் பேச வேண்டும் என்கிறார்" என கூறி கோட்டாரில் உள்ள ஒரு வீட்டுக்கு என்னை அழைத்தார். நான், அந்த வீட்டுக்கு சென்றபோது அங்கு, ஈசான சிவம் இல்லை. கோலப்பன் மட்டும் தான் இருந்தார். ஈசான சிவம் காரில் வந்து கொண்டு இருப்பதாக கூறினார்.
இதையடுத்து கோலப்பன் எனக்கு மது ஊற்றி தந்தார்.. நான் அளவுக்கு அதிகமாக குடித்ததால், போதை தலைக்கு ஏறியது. அதன் பிறகு அங்கு என்ன நடந்தது என்பது எனக்கு தெரியவில்லை.
வீடியோ கால்: இந்த சம்பவம் நடந்து சில நாட்கள் கழித்து ஈசான சிவம், கோலப்பன் ஆகியோர் எனது சூப் கடைக்கு காரில் வந்தனர். ஈசான சிவம் என்னிடம், "நீ கோட்டாரில் உள்ள வீட்டுக்கு வந்த போது பெண் ஒருவருடன் உல்லாசமாக இருந்தாய். நீ உல்லாசமாக இருக்கும் போது, கோலப்பன் மூலம் வீடியோ கால் செய்ய வைத்து அதை ஸ்கீரின் ரிக்கார்டு செய்து வைத்துள்ளேன். நான் கேட்ட ரூ.10 லட்சத்தை தராவிட்டால், இந்த வீடியோவை வெளியிட்டு விடுவேன்" என்று மிரட்டினார்.
இதை கேட்டதும் எனக்கு அதிர்ச்சியாகிவிட்டது.. அன்றைய தினம் எனக்கு அளவுக்கு அதிகமாக மது குடிக்க வைத்து, இளம் பெண்ணுடன் உல்லாசமாக இருக்க வைத்து அதை வீடியோவாகவும் பதிவு செய்துள்ளனர் என்பது தெரிய வந்தது.
புகார் மனு: நான் அவர்கள் கேட்ட பணத்தை கொடுக்காததால், இப்போது இந்த வீடியோவை வாட்ஸ் அப் மூலம் பலருக்கும் அனுப்பி வைத்திருக்கிறார்கள். அதனால், இதற்கு காரணமாக உள்ள ஈசான சிவம் மற்றும் கோலப்பன் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும். இந்த வீடியோ மேலும் பரவாமல் தடுக்க வேண்டும் என்று கேட்டுக் கொண்டிருந்தார்.
இதையடுத்து, இந்த புகாரின் பேரில், சைபர் கிரைம் போலீசார் விசாரணை மேற்கொண்டனர்.. இறுதியில், ஈசான சிவம், கோலப்பன் ஆகியோர் மீது ஆபாச வீடியோ பரப்புதல் உள்ளிட்ட பல்வேறு பிரிவுகளின் கீழ் போலீசார் வழக்கு பதிவு ஈசான சிவனையும் அதிரடியாக கைது செய்தனர்.. அவரது நண்பரை தேடி வரும் போலீசார், ஈசான சிவனிடம் துருவி துருவி விசாரணை மேற்கொண்டு வருகிறார்கள்.
-
4 தொகுதி இடைத்தேர்தலை புறக்கணிக்க திமுக முடிவு? ஸ்டாலினின் ராஜதந்திரம்! -
Indoor Plants: வீட்டின் காற்றைச் சுத்திகரித்து ஆக்ஸிஜன் அளவை அதிகரிக்கும் இன்டோர் செடிகள்! -
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
தேசிய அளவில் பலவீனமடையும் பாஜக எதிர்ப்பு.. காங்கிரஸ் செயலால் திட்டத்தை மாற்றும் திமுக! -
“தவெகவுக்கு ஓட்டு போடாத தென்காசி மக்களும் பாதிக்கப்படுகிறோம்”.. நள்ளிரவில் எழுந்த திடீர் போராட்டம்! -
"பச்சை துரோகம்.. வாக்கு அறுவடை முடிந்ததும் ரிசர்வ் வங்கியை காரணம் காட்டுவதா?" தங்கம் தென்னரசு தாக்கு -
ஐடி ஊழியர்களை விட "இவர்கள்" காட்டில்தான் பணமழை! அடுத்த 5 ஆண்டுகளில் இந்தியாவில் ஏற்பட போகும் மாற்றம் -
நன்றி மறக்காத விஜய்.. தவெகவின் முதல் ராஜ்யசபா எம்பி யார்? ரேசில் முன்னணியில் ’லெஃப்ட் - ரைட்’ ஹேண்ட் -
விவசாயக் கடன் தள்ளுபடி.. பொய் சொல்லி ஏமாற்ற மாட்டேன்! விவசாயிகளே கவலைப்படாதீங்க.. விஜய் உத்தரவாதம் -
வளைகுடாவில் இந்தியாவிற்கு கிடைத்தது மாற்றுப்பாதை.. ஓமனால் பெரிய குட்நியூஸ் -
கட்டப்பா கூட ஒரு டைம்தான் குத்துனாரு.. இப்படி தினம் தினம் பண்ணுறீங்களே! கோபத்தின் உச்சியில் ஸ்டாலின் -
DMART முதலாளிக்கு இப்படியொரு பிஸ்னஸ் இருக்கா.. ஒரு வீட்டுக்கு ரூ.27.5 லட்சம் .. ஆடிப்போன மும்பை மக்கள்!












Click it and Unblock the Notifications