கன்னியாகுமரி அருகே பீச்சில்.. தனியாக இருந்த காதல் ஜோடி! காதலனை அடித்து போட்டு காதலி பலாத்காரம்! ஷாக்
கன்னியாகுமரி: கன்னியாகுமரி கடற்கரையில் இரவு நேரத்தில் தனியே அமர்ந்திருந்த காதல் ஜோடியை தாக்கி, இளம்பெண்ணை பாலியல் வன்கொடுமை செய்த இருவர் கைது செய்யப்பட்டு உள்ளனர்.
கன்னியாகுமரி மாவட்டம் சொத்தவிளை கடற்கரையில் இந்த சமபவம் நடந்து உள்ளது. அங்கே இரவு நேரத்தில் தனியே அமர்ந்திருந்த காதல் ஜோடி பேசிக்கொண்டு இருந்துள்ளனர்.

இவர்கள் இரவு 10 மணி வரை அங்கே அமர்ந்து இருந்ததாக கூறப்படுகிறது. அந்த பக்கம் வந்த இரண்டு பேர் இந்த பெண்ணிடமும் அவளின் காதலனிடமும் விசாரித்துள்ளனர். நீங்கள் எந்த ஏரியா, எங்கே வீடு என்பதை எல்லாமே கேட்டு மாரல் போலீசிங் செய்துள்ளனர்.
அதன்பின் அந்த காதலனை தாக்கி, இளம்பெண்ணை பாலியல் வன்கொடுமை செய்து உள்ளனர். காதலனை தாக்கிவிட்டு பாறைக்கு அடியே தூக்கி வீசிவிட்டு.. அங்கிருந்த காதலியை தாக்கி அவரை அங்கிருந்து தூக்கி சென்றுள்ளனர். அதன்பின் மறைவான இடத்தில் வைத்து அந்த பெண்ணை பலாத்காரம் செய்துள்ளனர்.
இதை தொடர்ந்து அந்த பெண்ணிடம் மிரட்டி ஜிபே மூலம் ₹10,000 பணம் பறித்துள்ளனர். இந்த சம்பவத்தை அவர்கள் மொத்தமாக வீடியோ எடுத்துள்ளனர். இதை வீடியோ எடுத்த நிலையில்.. வீடியோவை வெளியே விட்டுவிடுவோம் என்று கூறி மிரட்டி பணம் வாங்கி உள்ளனர்.
அந்த மாணவியிடம் 10 ஆயிரம் இருந்துள்ளது.. அதனால் அதை மட்டும் வாங்கிக்கொண்டு விட்டுள்ளனர். இதை போலீசிடம் சொன்னால்.. அவ்வளவுதான். வீடியோ வெளியாகி விடும் என்றும் மிரட்டி உள்ளனர். இந்த நிலையில்தான் அந்த பெண் தைரியமாக போலீசில் புகார் அளித்தார்.
இதையடுத்து போலீசார் நடத்திய விசாரணையில் அந்த இரண்டு பேர் சகாய சீமோலியன், லியோ ராஜ் என்ற இரண்டு பேர் என்று கண்டுபிடிக்கப்பட்டது. அவர்கள் இருவரும்தான் அந்த நேரத்தில் கடலில் இங்கும் அங்கும் நடந்து உள்ளனர். ஊர்க்காரர்கள் கொடுத்த ஆதாரங்களின் அடிப்படையில் அவர்கள் இரண்டு பேர்தான் குற்றத்தை செய்தது கண்டுபிடிக்கப்பட்டது.
இதையடுத்து போலீசார் இருவரையும் கைது செய்துள்ளனர். பாதிக்கப்பட்ட 19 வயது பெண் நீட் தேர்வுக்காக பயிற்சி பெற்று வருகிறார். தாக்கப்பட்ட 22 வயது இளைஞர் ஐ.டி. நிறுவனத்தில் பணியாற்றி வருகிறார் என்று கூறப்படுகிறது.












Click it and Unblock the Notifications