• search
கன்னியாகுமரி அப்டேட்டுகளுக்கு
நோட்டிபிகேஷனை அனுமதி  

நர்ஸை நாசம் செய்து.. அபார்ஷனும் செய்த எஸ்ஐ.. தூக்க மாத்திரையை விழுங்கிய பெண்.. ஷாக்கடிக்கும் குமரி

|

கன்னியாகுமரி: புகார் கொடுக்க சென்ற நர்ஸை பலாத்காரம் செய்ததுடன், அடுத்த சில மாதங்களில் அபார்ஷனும் செய்து விட்டாராம் ஒரு எஸ்.ஐ... இதையடுத்து அந்த எஸ்ஐ மீது புகார் தந்துகூட ஏன் நடவடிக்கை எடுக்கவில்லை என்று மனம் உடைந்த அந்த நர்ஸ் தூக்க மாத்திரை சாப்பிட்டு தற்கொலைக்கு முயன்றுவிட்டார். இந்த சம்பவம் கன்னியாகுமரியில் பெரும் பரபரப்பை தந்து வருகிறது.

Suicide: \"அந்த\" எண்ணம் வருதா.. தைரியமா இருங்க.. ஹேப்பியா மீண்டு வரலாம்!

கன்னியாகுமரி மாவட்டம் குழித்துறை அருகே உள்ள மேக்கோடு பகுதியை சேர்ந்தவர் ஜோஸ்பின்.. 31 வயதாகிறது.. திருவனந்தபுரத்தில் நர்சாக வேலை பார்த்து வந்தார்.

இவரை மேக்கோடு பகுதியை சேர்ந்த இளைஞர் ஒருவர் காதலித்து ஏமாற்றி உள்ளார்.. அத்துடன் பணமோசடியும் செய்திருக்கிறார். இந்த மோசடி குறித்து புகார் தருவதற்காக பளுகல் போலீஸ் ஸ்டேஷனுக்கு சென்றார்.

அது என்ன நீல நிறத்தில்.. அமைச்சர் செல்லூர் ராஜு அணிந்திருக்கும் அட்டை.. ஜப்பான் மேட்.. இதான் காரணம்!

சுந்தரலிங்கம்

சுந்தரலிங்கம்

அங்கேதான் சப்-இன்ஸ்பெக்டர் சுந்தரலிங்கம் டியூட்டியில் இருந்தார்... புகாரை பெற்று கொண்டு, ஜோஸ்பினிடம் நடந்த விவரங்கள் எல்லாம் கேட்டார்.. இளம்பெண் தனியாக தவிப்பதை அறிந்த சுந்தரலிங்கம் தான் குடியிருக்கும் பகுதியில் ஒரு வீட்டை வாடகைக்கு ஏற்பாடு செய்து தந்து குடியமர்த்தினார்.

பலாத்காரம்

பலாத்காரம்

பிறகு ஆறுதல் சொல்வது போல அடிக்கடி அந்த வீட்டுக்கு சென்றவர், நாளடைவில் பெண்ணை பலாத்காரமும் செய்துவிட்டதாக தெரிகிறது. இதில் ஜோஸ்பின் கர்ப்பமாகிவிட்டார்.. இதை சுந்தரலிங்கத்திடம் சொல்லி உள்ளார்.. சுந்தரலிங்கமோ அந்த பெண்ணை அபார்ஷன் செய்துவிடும்படி சொல்லி உள்ளார்.அதற்கு ஜோஸ்பின் மறுக்கவும், கட்டாயப்படுத்தி குலசேகரம் அருகே தனியார் ஆஸ்பத்திரிக்கு அழைத்துச் சென்று அபார்ஷன் செய்ய வைத்துள்ளார்.

அபார்ஷன்

அபார்ஷன்

அப்போது ஜோஸ்பின் சத்தம் போடவும், பொதுமக்கள் கூட தொடங்கினர்.. உடனே சுந்தரலிங்கம் தப்பி ஓடிவிட்டாராம். இதையடுத்து, ஜோஸ்பின் தனக்கு நடந்த கொடுமை பற்றி, பலமுறை போலீசில் புகார் தந்துள்ளார் போலும். ஆனால் உரிய நடவடிக்கை எடுக்காததால், சென்ற மாதம் கலெக்டர் ஆபீசுக்கு வந்து புகார் தந்ததுடன், உள்ளிருப்பு போராட்டத்திலும் ஈடுபட்டார்... அப்போது தன் உயிருக்கு பாதுகாப்பு இல்லை என்றும் முறையிட்டார்.

போராட்டம்

போராட்டம்

பெண் அளித்த இந்த புகாரின் பேரில் கலெக்டர் உத்தரவிட்டதையடுத்து போலீசார் விசாரணையை துரிதப்படுத்தி உள்ளதாக செய்திகளும் அப்போது வெளிவந்தன... நர்ஸ் ஜோஸ்பினுக்கு ஆதரவாக மாதர் சங்கத்தினர் இறங்கினர்.. போராட்டங்களும் நடத்தினர்.. ஆனாலும் நடவடிக்கை எடுக்கப்படவில்லை என கூறப்படுகிறது... இதனால், கடந்த சில நாட்களாகவே ஜோஸ்பின் மனம் உடைந்து போயிருந்தாராம்.. இந்நிலையில், அவர் திடீரென தற்கொலை முயற்சியில் ஈடுபட்டார்.

தற்கொலை முயற்சி

தற்கொலை முயற்சி

அளவுக்கு அதிகமாக தூக்க மாத்திரைகளை விழுங்கிவிட்டு, அப்படியே மயங்கிய நிலையில் கிடந்துள்ளார்.. இந்த தகவல் அறிந்ததும், மாதர் சங்கத்தினர்தான் விரைந்து சென்றுள்ளனர்.. நர்ஸை மீட்டு தக்கலை அரசு ஆஸ்பத்திரியில் சேர்த்தும் உள்ளனர்.. அங்கு இப்போது ஜோஸ்பினுக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறதாம். இதுகுறித்து மார்த்தாண்டம் போலீசார் விசாரணை நடத்தி வருகிறார்கள்.

வரன் தேடுகிறீர்களா? தமிழ் மேட்ரிமோனியில் இன்றே பதிவு செய்யுங்கள் - பதிவு இலவசம்!

 
 
 
English summary
kannykumari young woman abused by sub inspector, and attempted suicide
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X