அடுத்தவர் மனைவிக்கு முத்தம் தந்த பாஜக பிரபலம்.. கன்னியாகுமரி மானமே போச்சு.. அருமனை கணவர் பரிதாபம்
கன்னியாகுமரி: கன்னியாகுமரி பாஜக பிரமுகர், அடுத்தவர் மனைவிக்கு முத்தம் தந்துள்ளார்.. அதுவும், அந்த பெண்ணின் கணவர் முன்னிலையிலேயே முத்தம் தந்த விவகாரம்தான், தற்கொலை, கைது வரை சென்றுவிட்டது. தலைமறைவாகியிருந்த பாஜக பிரமுகரை போலீசார் வலைவீசி கொண்டிருந்த நிலையில், அவரை கைது செய்து சிறையில் அடைத்தனர்.. ஆனால், ஜாமீனில் வெளிவந்த பாஜக பிரமுகர் மீண்டும் இதே குற்றத்தை செய்திருக்கிறார். அருமனையில் என்ன நடந்தது?
கன்னியாகுமரி மாவட்டம் பத்துகாணி குமாரபவன் பகுதியை சேர்ந்த அனிகுட்டன் என்கிற அனில்குமாருக்கு 48 வயதாகிறது. ஆட்டோ டிரைவரான இவரது மனைவி உமாவுக்கு 40 வயதாகிறது (பெயர் மாற்றப்பட்டுள்ளது). இந்த தம்பதிக்கு ஒரு மகன் உள்ளார்.

கடந்த சில வருடங்களாக தம்பதிக்கு இடையே கருத்துவேறுபாடு நிலவி வந்துள்ளது. பத்துகாணி சந்திப்பு பகுதியில், மளிகை கடையை வைத்து நடத்தி வருகிறார்..இதே பகுதியில் உள்ள பாஜக பிரமுகர் மதுகுமார் என்பவருக்கு 52 வயதாகிறது. ஆறுகாணி கிளை பாஜக செயலாளராக பொறுப்பில் உள்ளார்.
மளிகை கடையில் முத்தம்
கடந்த மாதம் உமாவின் மளிகை கடைக்கு சென்று, உமாவுக்கு மதுகுமார் முத்தம் தந்ததாகவும், இதை நேரில் பார்த்து அனில்குமார் அதிர்ச்சி அடைந்து மனைவியை கோபத்துடன் திட்டியதாகவும் தெரிகிறது.
இதனால் உமா, கணவரை கட்டையால் அடித்து தாக்கியிருக்கிறார். மறுநாள் பாஜக பிரமுகர் மதுகுமாரும், அனில்குமாரை மிகப்பெரிய கத்தியால், வெட்ட முயன்றுள்ளார். இவர்களிடமிருந்து படுகாயங்களுடன் உயிர் தப்பியிருக்கிறார் அனில்குமார். பிறகு தீவிர சிகிச்சைக்கு பிறகு, ஆறுகாணி போலீசில் புகார் தந்தார்..
அதிரடி கைது - ஜாமீன் - உல்லாசம்
இந்த புகாரின் பேரில் போலீசாரும், தலைமறைவாக இருந்த மதுகுமாரை கைது செய்தனர். ஆனால், ஜாமீனில் வெளியே வந்த மது குமார், கடந்த வாரம் மறுபடியும் உமாவுடன் உல்லாசமாக இருந்துள்ளார். இதை பார்த்து அதிர்ச்சியடைந்த அனில்குமார், மீண்டும் உமாவை கண்டித்திருக்கிறார். ஆனால் மீண்டும் உமா, கணவன் பேச்சை மதிக்கவில்லை..
இதனால் ஆத்திரம் அடைந்த அனில்குமார், மளிகை கடையிலேயே இரும்பு கம்பியை எடுத்து, இன்று உமாவை கடுமையாக தாக்கியிருக்கிறார்.. இதனால் பலத்த காயமடைந்த உமா, அங்கேயே ரத்த வெள்ளத்தில் மயங்கி சரிந்துள்ளார். ஆனால், உமா இறந்துவிட்டதாக நினைத்து பயந்துபோன அனில்குமார், வீட்டிற்குள் சென்று தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டார்..
ஆறுகாணி போலீஸார் - வழக்கு பதிவு
இதையடுத்து, ஆறுகாணி போலீசார், உயிருக்கு போராடி கொண்டிருந்த உமாவை மீட்டு கேரள மாநிலத்தில் உள்ள தனியார் மருத்துவமனையில் அனுமதித்தனர்.. அனில்குமாரின் சடலமும் போஸ்ட் மார்ட்டம் செய்ய அனுப்பி வைக்கப்பட்டது. இந்நிலையில், ஆட்டோ டிரைவரை தற்கொலைக்கு தூண்டியதாக ஆறுகாணி போலீசார் வழக்குப்பதிந்து பாஜக பிரமுகர் மதுகுமாரை கைது செய்துள்ளனர்..
இந்த விஷயம் கேள்விப்பட்ட பாஜக கட்சியினர் ஆறுகாணி போலீஸ் ஸ்டேஷன் முன்பு திரண்டனர்.. இதனால் அங்கு பெரும் பரபரப்பு ஏற்பட்டது.. குழித்துறை அரசு மருத்துவமனையில் பாஜக பிரமுகர் மதுகுமாரை பரிசோதனை செய்து, நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தினர்.
இப்போது மதுகுமாரை 15 நாள் சிறையில் அடைக்க நீதிபதி உத்தரவிட்டுள்ளதுடன், தொடர்ந்து அவர் நாகர்கோவில் ஜெயிலிலும் அடைக்கப்பட்டார். அடுத்தவர் மனைவிக்கு முத்தம் கொடுத்த விவகாரத்தில் டிரைவரை தற்கொலைக்கு தூண்டியதாக பாஜக கிளை செயலாளரை போலீசார் கைது செய்துள்ளது, குமரி மாவட்டத்தில் பரபரப்பை தந்து வருகிறது.












Click it and Unblock the Notifications