சினேகிதனுடன் டூர்.. நடந்த விபரீதம்.. கன்னியாகுமரி மாணவியை கத்தி முனையில் பலாத்காரம் செய்த இளைஞர்கள்
கன்னியாகுமரி: கன்னியாகுமரி மாவட்டம் கொல்லங்கோடு அருகே கல்லூரியில் படிக்கும் சக மாணவர்களுடன் கடற்கரைக்கு சென்ற மாணவி சக மாணவர்களுடன் கேரளாவில் உள்ள கடற்கரைக்கு சுற்றுலா சென்றபோது, கல்லூரி மாணவியை கத்தி முனையில் மிரட்டி இளைஞர்கள் பாலியல் பலாத்காரம் செய்துள்ளனர். இது தொடர்பான வீடியோ வெளியான நிலையில் போலீசார் வழக்குப்பதிவு செய்துள்ளனர்.
கல்லூரியில் படிக்கும் சக நண்பர்களுடன் ஒரு பெண் தனியாக சுற்றுலா சென்ற நிலையில், அவரை அவர்களில் ஒரு மாணவன் சில்மிஷம் செய்துள்ளான். இதனை வேடிக்கை பார்த்த இளைஞர்கள், கடைசியில் செய்த சம்பவம் மிகவும் பயங்கரமானது. என்ன நடந்தது என்பதை பார்ப்போம்

கன்னியாகுமரி மாவட்டம் கொல்லங்கோடு அருகே உள்ள கிராமத்தைச் சேர்ந்த மாணவிக்கு 20 வயது ஆகிறது. இவர் கன்னியாகுமரி பகுதியில் உள்ள ஒரு தனியார் கல்லூரியில் டிகிரி 3-ம் ஆண்டு படித்து வருகிறார். இவருடன் சின்னத்துறையை சேர்ந்த ஒரு மாணவரும், தூத்தூரை சேர்ந்த ஒரு மாணவரும் அதே வகுப்பில் படித்து வருகிறார்கள். ஒரே வகுப்பில் படிப்பதால் அவர்களிடம் மாணவி நட்பாக பழகி வந்திருக்கிறார்கள்.
இந்தநிலையில் கடந்த ஜூலை மாதம் விடுமுறை நாளில் சின்னத்துறையை சேர்ந்த மாணவர், மாணவியின் வீட்டிற்கு போயிருக்கிறார். அப்போது அவர் தனது தாயாரின் பிறந்தநாளை அருகில் உள்ள பொழியூர் கடற்கரையில் குடும்பமாக கொண்டாட செல்கிறோம். எனவே நீ வா என்று, மாணவியை அழைத்தார். அப்போது மாணவியின் வீட்டில் உள்ளவர்கள் நண்பர் தானே, அதுவும் அம்மாவின் பிறந்த நாளை கொண்டாட கூப்பிடுகிறாரே என்று நினைத்து அவருடன் அனுப்பி வைத்தனர். மாணவியும் நண்பனுடன் சென்றுள்ளார். மாணவியை அழைத்து கொண்டு சிறிது தூரம் சென்றதும் அவர்களுடன் தூத்தூரை சேர்ந்த மற்றொரு மாணவனும் இணைந்து கொண்டார். இந்த மாணவனும் மாணவியுடன் ஒரே பிரிவில் படிப்பவர் தான்.
இந்நிலையில் மாணவி உள்பட 3 பேரும் கேரள மாநிலம் பொழியூர் கடற்கரைக்கு சென்றுள்ளனர். அங்கு மாணவரின் தாயாரும் இல்லை, சகோதரியும் இல்லை. இதை கண்டு மாணவி அச்சமடைந்தார். அவர் தன்னை வீட்டில் கொண்டு விடும்படி அவர்களிடம் கேட்டார். ஆனால், 2 மாணவர்களும் அதை கண்டுகொள்ளேவில்லை.
அதேநேரம் வாகனத்தின் பையில் மறைத்து எடுத்து வந்த மது பாட்டில்களை எடுத்து குடிக்க தொடங்கினர். இதைக்கண்டு அதிர்ச்சியடைந்த மாணவி, தன்னை வீட்டில் கொண்டு விட்ட பிறகு மது குடியுங்கள் என்று மாணவர்களிடம் கெஞ்சியிருக்கிறார் . இதற்கிடையே போதை தலைக்கேறியதால் சின்னத்துறையை சேர்ந்த மாணவியின் சினேகிதன், திடீரென சில்மிஷம் செய்ய தொடங்கி உள்ளார். இதற்கு மாணவி மறுப்பு தெரிவித்துள்ளார்.
இதனை மது போதையில் நின்று கொண்டிருந்த 2 இளைஞர்கள் பார்த்தனர். அவர்கள் அங்கு வந்து மாணவர்களை தடுத்து நிறுத்தியதுடன், மாணவியின் முன்னாள் மாணவர்களின் ஆடைகளை களைந்து அவர்களை நிர்வாணமாக கட்டி வைத்து தாக்கி உள்ளார்கள்.
தொடர்ந்து 2 இளைஞர்களும் சேர்ந்து கத்தியை காட்டி மாணவியை மிரட்டி உள்ளனர். தங்களுடைய ஆசைக்கு இணங்கமாறு மாணவியை கத்தி முனையில் பாலியல் பலாத்காரம் செய்திருக்கிறார்கள். மாணவி அவர்களிடம் இருந்து தப்பிக்க சத்தம் போட்ட போது, சத்தம் போட்டால் கத்தியால் குத்தி கொலை செய்து கடலில் தூக்கி வீசி விடுவோம் என்று மிரட்டி பணிய வைத்து மாறி மாறி பலாத்காரம் செய்திருக்கிறார்கள் அத்துடன் அதனை வீடியோவாக எடுத்து வைத்துக்கொண்டுள்ளனர். இதுகுறித்து வெளியே கூறினால் வீடியோவை சமூக வலைத்தளத்தில் வெளியிடுவோம்' என்றும் மிரட்டி உள்ளனர். அத்துடன் மாணவியின் செல்போன் நம்பரையும் வாங்கி கொண்டு விரட்டி உள்ளார்கள்
இதனையடுத்து வீட்டிற்கு வந்த மாணவி வாழ்க்கையே தொலைந்து விட்டதே என்று எண்ணி அழுதுகொண்டிருந்தார். இந்தநிலையில் பலாத்காரம் செய்த வாலிபர்கள் அடிக்கடி மாணவியை தொடர்பு கொண்டு தங்களது ஆசைக்கு இணங்க வருமாறு வற்புறுத்தி உள்ளார்கள். இதற்கு மாணவி மறுப்பு தெரிவித்தார். இதனால் ஆத்திரமடைந்த இளைஞர்கள் மாணவியை பலாத்காரம் செய்தபோது எடுத்த வீடியோக்களை சமூக வலைத்தளங்களில் வெளியிட்டு பரப்பிவிட்டனர். இந்த வீடியோ சமூக வலைதளங்களில் தற்போது வேகமாக பரவி வருகிறது.
இதனையடுத்து மாணவி பொழியூர் போலீஸ் நிலையத்திலும், குளச்சல் மகளிர் போலீஸ் நிலையத்திலும் தனக்கு நடந்த கொடுமைகளை கூறி புகார் அளித்தார். அந்த புகாரின் அடிப்படையில் போலீசார் நடத்திய விசாரணையில் மாணவியை மிரட்டி பலாத்காரம் செய்தது கேரள மாநிலம் பொழியூர் பகுதியை சேர்ந்த 34 வயதுடைய ஆசாமியும், அவருடைய கூட்டாளியும் என்பது தெரிய வந்தது. இதையடுத்து அவர்கள் மீதும், மாணவியை ஏமாற்றி கடற்கரைக்கு அழைத்து சென்ற சின்னத்துறையை சேர்ந்த மாணவர் மீதும் பொழியூர் போலீசார் வழக்குப்பதிவு செய்தனர். அவரது கூட்டாளி கடலில் மீன்பிடிக்க சென்றுள்ளதால் அவர் கரை திரும்பியதும் அவரையும் கைது செய்ய முடிவு செய்துள்ளனர்.
மாணவியை பலாத்காரம் செய்த வாலிபர்கள் அதை வீடியோவாக பதிவு செய்து மிரட்டியதால், மாணவி 2 முறை தற்கொலைக்கு முயன்ற பரிதாப சம்பவமும் நடந்திருக்கிறதாம். தற்கொலை முயற்சியில் இருந்து தப்பிய பின்னர் மாணவி புகார் அளித்துள்ளார். இதனிடையே மாணவிக்கு பெற்றோர் திருமணம் செய்து வைக்க ஒரு இளைஞருடன் நிச்சயதார்த்தம் செய்திருந்தனர். இதற்கிடையே பலாத்கார வீடியோ வெளியான தகவலை கேட்டு அந்த இளைஞர் திருமணத்தையே நிறுத்திவிட்டார். கடற்கரைக்கு சக வகுப்பு தோழன் கூப்பிடுகிறானே என்று போன பெண்ணுக்கு நடக்கவே கூடாத அனைத்து விபரீதமும் நடந்திருக்கிறது. பெண்களுக்கு எதிரான இதுபோன்ற மோசமான சம்பவங்களில் ஈடுபடுவோருக்கு மிக கடுமையான தண்டனை வழங்க வேண்டும் என்ற கோரிக்கை எழுந்துள்ளது.
தற்கொலை எந்த பிரச்சனைக்கும் தீர்வு அல்ல.. உங்களுக்கு மன அழுத்தம் உண்டானாலோ அல்லது தற்கொலை எண்ணம் எழுந்தாலோ, கீழ்கண்ட எண்களை தொடர்பு கொள்ளலாம்:
சினேகா தற்கொலை தடுப்பு உதவி மையம் - 044 -2464000 (24 மணி நேரம்)
மாநில தற்கொலை தடுப்பு உதவி மையம் - 104 (24 மணி நேரம்)












Click it and Unblock the Notifications