கன்னியாகுமரியில் அண்ணினே மரியாதை இல்லை.. ஏற்கனவே பாத்ரூம் டைல்ஸில் கொடுமை.. இப்ப ரவுடியின் நிலைமை?
கன்னியாகுமரி: தாய், தகப்பனின் வழிகாட்டுதல் இல்லாமல், கண்டித்து அரவணைத்து செல்ல மனைவியும் இல்லாமல், தான்தோன்றித்தனமாக வாழ்ந்த ஒரு நபர் இன்று 63 வயதில் மரணமடைந்து உள்ளார். மேட்டுப்பாளையத்தில் நடந்த இந்த பயங்கர சம்பவம் குறித்து போலீசார் விசாரித்து கொண்டு வருகிறார்கள். சம்பந்தப்பட்ட குற்றவாளியும் கைதாகி சிறையில் கம்பி எண்ணிக் கொண்டு உள்ளார்
கன்னியாகுமரி மாவட்டம் இரணியல் அடுத்து உள்ள பகுதி வடக்கு பேயன்குழி.. இங்கு வசித்து வருபவர் ராஜகோபால்.. இவருக்கு ராஜன் என்ற மற்றொரு பெயர் உண்டு.. 54 வயதாகும் ராஜகோபால் லாரி டிரைவராக உள்ளார்.

இவர் அந்த பகுதியிலேயே பல வருட காலம் ரவுடியாக உள்ளார்.. கொலை, கொலை முயற்சி உள்ளிட்ட பல்வேறு வழக்குகள் ராஜகோபால் மீது உள்ளது..
இவருக்கு திருமணமாகவில்லை.. வயது கடந்தும் திருமணம் செய்து கொள்ளவில்லை.. பல ஆண்டுகளுக்கு முன்பேயே தான் குடியிருந்த வீட்டை காலி செய்து விட்டு, வேறு இடத்துக்கு குடியேறினார்.. அங்கு சென்றபோதும், திங்கள்சந்தை, நெய்யூர் உள்ளிட்ட பகுதிகளில் ரவுடியாக வலம் வந்தார்.
பாத்ரூம் டைல்ஸ்
இந்நிலையில், கடந்த 2023ம் ஆண்டு, குளச்சல் பகுதியில் உள்ள மதுக்கடை ஒன்றில், ராஜகோபால் மது அருந்தி உள்ளார்.. அப்போது அதே மதுக்கடையில் மது அருந்தி கொண்டிருந்த அருள்பாபி என்ற எழுத்தாளருடன் மோதல் ஏற்பட்டுள்ளது.. இதனால் ஏற்பட்ட உச்சக்கட்ட தகராறில், எழுத்தாளரை கத்தியால் குத்தி கொன்றுவிட்டார் ராஜகோபால்.
இந்த கொலை வழக்கில் போலீசார் ராஜகோபாலை கைது செய்து சிறையில் அடைத்தனர்..
சொந்த பந்தங்கள் யாருமில்லாத நிலையில், அவரை ஜாமீனில் எடுக்க யாருமே முன்வரவில்லை..
இதனால் சிறையிலுள்ள கழிவறைக்குள்ளேயே தற்கொலைக்கு முயன்றார் ராஜகோபால். பாத்ரூம் டைல்ஸ்களை உடைத்து, தன்னுடைய கழுத்தை அறுத்து தற்கொலைக்கு முயன்றார்... இதற்கு பிறகு அவரை அங்கிருந்தவர்கள் காப்பாற்றிவிட்டார்கள்..
அண்ணினு மரியாதை இல்லை
இறுதியில் ஜாமீனில் வந்த ராஜகோபாலன், கடந்த 6 மாதங்களுக்கு முன்பு சொந்த ஊரான வடக்கு பேயன்குழி வந்தார். தங்குவதற்கு வீடு எதுவும் இல்லாததால், அங்கு கோயிலுக்கு சொந்தமான கலையரங்கத்தில் தங்கி வந்தார்... பிறகு திடீரென விபத்து ஒன்றிலும் சிக்கிவிட்டார்,.. இதனால் கைத்தடி உதவியுடன் நடமாடி வந்தார்.
ராஜகோபாலுக்கு, அண்ணன் உறவு முறையான கோபாலகிருஷ்ணன் வடக்கு பேயன்குழியில் உள்ளார்.. இவரது 55 வயது மனைவியிடம், ராஜகோபால் தவறாக நடக்க முயன்றதாக கூறப்படுகிறது.. அண்ணி என்ற மரியாதைகூட இல்லாமல் ராஜகோபாலின் நடவடிக்கை, அந்த பெண்ணுக்கு அதிர்ச்சியை தந்தது. உடனே இதுகுறித்து அவர் கணவர் கோபாலகிருஷ்ணனிடம் முறையிட்டுள்ளார்.
கலையரங்கில் ராஜகோபால்
இதைக்கேட்டு ஆத்திரமடைந்த கோபாலகிருஷ்ணன், நேற்றிரவு கலையரங்கம் வந்து படுத்து கொண்டிருந்த ராஜகோபாலை எடுத்து இதுகுறித்து கேட்டார்.. அண்ணியிடம் அத்துமீறலாமா என்றும் ஆவேசமானார். இதனால் ஏற்பட்ட வாய்த்தகராறு, இறுதியில் கைகலப்பு வரை சென்றுவிட்டது.
ஒருகட்டத்தில் ஆவேசமடைந்த கோபாலகிருஷ்ணன் அருகில் இருந்த கைத்தடியை எடுத்து சரமாரியாக கண்மூடித்தனமாக தாக்கினார். இதில் ராஜகோபால் சம்பவ இடத்திலேயே ரத்த வெள்ளத்தில் துடிதுடித்து உயிரிழந்தார்.. ராஜகோபால் இறந்துவிட்டார் என்பதை உறுதி செய்த கோபாலகிருஷ்ணன், அதற்கு பிறகு இரணியல் போலீஸ் ஸ்டேஷனுக்கு சென்று சரணடைந்துவிட்டார்.. அவரிடம் விசாரணை நடந்து கொண்டிருக்கிறது.












Click it and Unblock the Notifications