போலீசார் அலட்சியம்.. கன்னியாகுமரியில் அடித்தே கொல்லப்பட்ட மீனவர்.. வெளியான பகீர் சிசிடிவி காட்சிகள்
கன்னியாகுமரி: கன்னியாகுமரி மாவட்டம் குறும்பனை அருகே மீனவர் அடித்து கொலை செய்யப்பட்ட சம்பவத்தில் போலீசார் ஒருவர் மட்டும் கைது செய்தனர். இந்தச் சூழலில் இது தொடர்பான சிசிடிவி காட்சியில் பலர் ஒன்றுசேர்ந்து அவரை தாக்குவது தெரியவந்துள்ளது.
கன்னியாகுமரி மாவட்டம் குறும்பனை மீனவ கிராமத்தைச் சேர்ந்தவர் 55 வயதான புருனோ. இவர் விசைப்படகுகளைப் பழுது பார்ப்பது, ஆழ்கடலில் சிக்கி நிற்கும் படகுகளை பைபர் படகுகளால் மீட்டு வருவது ஆகிய பணிகளில் ஈடுபட்டு வந்தார். மேலும், இவர் மீன்பிடி தொழிலையும் செய்து வந்தார்.
குடும்ப சொத்தை பிரிப்பது தொடர்பாக இவருக்கும் இவரது சகோதரிக்கும் பிரச்சினை இருந்ததாக கூறப்படுகிறது. இந்நிலையில், கடந்த மாதம் மீன்பிடி தொழிலுக்குச் சென்று திரும்பிய இவர்,தனது சகோதரியிடம் சொத்தில் உள்ள பங்கைக் கேட்டுள்ளார்

சொத்து பிரச்சினை
அக். 27ஆம் தேதி வீட்டிற்கு வருமாறும் அப்போது சொத்து தொடர்பாகப் பேசலாம் என அவரது சகோதரி தெரிவித்துள்ளார். இருப்பினும், அக். 27ஆம் தேதி வீட்டிற்குச் சென்ற போது, சொத்து தொடர்பாக அவரது சகோதரி பேச மறுத்துள்ளதாகக் கூறப்படுகிறது. இதனால் கோபமடைந்த புருனோ கடந்த 2ஆம் தேதி மதுபோதையில் தனது சகோதரியின் வீட்டிற்குச் சென்று சொத்து தொடர்பாகப் பேசியுள்ளார்.

அடித்துக்கொலை
அப்போது ஏற்பட்ட வாய் தகராறு திடீரென கைகலப்பாக முற்றியது. அப்போது புரூனோவின் சகோதரி வீட்டில் இருந்தவர்கள் ஒன்று சேர்ந்து புரூனோவையும் அவருடன் வந்த 44 வயது மதிக்கத்தக்க நபரையும் மிகக் கொடூரமாகத் தாக்கியுள்ளனர். இதனால் படுகாயம் அடைந்த இருவரும் ஆசாரிப்பள்ளம் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டனர். இது தொடர்பாக அவர் கருங்கல் காவல் நிலையத்தில் புகாரளித்துள்ளார். அதன்படி அடிதடி வழக்குப்பதிவு செய்து போலீசார்,

போலீசார் மெத்தனம்
இது தொடர்பாக விசாரணை நடத்தினர், இந்தச் சூழலில் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்த புருனோ சிகிச்சை பலனின்றி மருத்துவமனையில் உயிரிழந்தார். இதையடுத்து அடிதடி வழக்கைக் கொலை வழக்காக மாற்றிய போலீசார், இது தொடர்பாக அந்தோணி என்ற ஒருவரை மட்டும் கைது செய்தனர். இந்தச் சூழலில் இந்தத் தாக்குதல் தொடர்பான சிசிடிவி காட்சிகள் வெளியாகிப் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. அதில் மீனவரையும் அவருடன் வந்தவரையும் 4, 5 பேர் கடுமையாகத் தாக்குவது தெளிவாகத் தெரிகிறது. ஆனால் போலீஸார் மெத்தனமாக ஒருவரை மட்டும் கைது செய்துள்ளது பெரும் சர்ச்சையைக் கிளப்பியுள்ளது.

போலீசார் விளக்கம்
இது தொடர்பாக குளச்சல் உட்கோட்ட டி.எஸ்.பி. தங்கராமனை தொடர்பு கொண்டு கேட்ட போது, சிசிடிவி காட்சிகள் தற்போது தான் கிடைத்துள்ளதாகவும் காவல் அதிகாரிகள் சரியாகப் புலன் விசாரணை நடத்தாததாலேயே குழப்பம் ஏற்பட்டதாக விளக்கம் அளித்தார். மேலும், இது தொடர்பாக இரு நபர்களை தற்போது கைது செய்து விட்டதாகவும் அவர் குறிப்பிட்டார்.
-
“முதல்வர் விஜய் கையில் இருக்கும் காவல்துறை.. கட்சிக்காரர்களுக்கு பயம் இல்லை” - எடப்பாடி பழனிசாமி -
இப்படியா நடக்கனும்.. பாலியல் வன்கொடுமைக்கு ஆளான 3 வயது சிறுமி! சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார்! -
குமுறுது கும்மிடிப்பூண்டி.. 3 வயது குழந்தை பாலியல் வன்கொடுமை? முட்புதரில் வீசிச் சென்ற கொடூரன்கள்! -
அண்ணி மீதான மோகம்.. இளைஞரை எரித்து கொன்ற வழக்கில் பெரிய ட்விஸ்ட்! ஷாக் காரணம் -
லண்டனில் கேள்விக்குறியாகும் இந்தியர்களின் நிலை.. 26 வயது இளைஞருக்கு நடந்த அதிர்ச்சி சம்பவம்! -
நடத்தையில் ஏற்பட்ட சந்தேகம்.. 22 வயது காதலிக்கு, காதலன் கொடுத்த கொடூர தண்டனை.. உயிரே போச்சே -
"மேயர் பதவி கொடுத்தா தான் வருவேன்!" அழகிரி மகள் நிபந்தனை.. சிடிஆர் நிர்மல்குமார் வைத்த செக்! -
காவிரியில் மேகதாது அணை கட்டுவதை தடுக்க விஜய்க்கு வேல்முருகன் தந்த யோசனை -
இனி 18 வயதுக்கு மேற்பட்டோருக்கு ஆதார் கார்டு கிடையாது.. அறிவித்த ஒடிசா அரசு.. காரணம் இதுதான் -
அரசியல் என்ட்ரி.. அதிகாரப்பூர்வமான அறிவிப்பை வெளியிட்ட திரிஷா.. சக நடிகை கமெண்ட் ஹைலைட் -
அனுபவத்தை விட அதிகாரமே மேலானது.. இதில் தான் திமுக தோற்றது.. குமுறும் திமுக நிர்வாகி -
மனைவி சங்கீதாவுடன் மீண்டும் சேர்ந்து வாழும் விஜய்? விவாகரத்தை கைவிட இருவரும் முடிவா? வெளியான மேட்டர்












Click it and Unblock the Notifications