கன்னியாகுமரி கிட்ட பட்டா ஆவணங்கள்.. அரசின் இலவச வீட்டு மனை பட்டா கிடைத்த மகிழ்ச்சி! சபாஷ் கவுன்சிலர்
கன்னியாகுமரி: கன்னியாகுமரியில் சுமார் 20 வருடங்களுக்கு மேலாக வசித்து வரும் தங்களுக்கு இலவச வீட்டுமனை பட்டா வழங்க வேண்டும் என நீண்ட காலமாக கோரிக்கை விடுத்து வந்தனர்.. இந்நிலையில், அம்மக்களுக்கு மகிழ்ச்சி அறிவிப்பு வெளியாகி உள்ளது.
கன்னியாகுமரி மாவட்டத்தை பொறுத்தவரை, சுமார் 20 வருடங்களுக்கு முன்பு, 7 ஆயிரம் பேருக்கு இலவச வீட்டுமனை பட்டா வழங்கப்பட்டது. அதாவது, ஆதிதிராவிடர் நலத்துறை மூலமாகவும், தாசில்தார் மூலமாகவும் இந்த பட்டாக்களை இணையவழி பட்டாவாக மாற்ற தமிழக அரசு உத்தரவிட்டிருந்தது.

அதன்படியே, தமிழக அரசால் இணையவழி பட்டா அனைத்து தரப்பு மக்களுக்கும் பட்டா தரப்பட்டது.. ஆனால், அந்த இணைய வழி பட்டாக்கள் மூலம், தங்களால் பத்திரப்பதிவு செய்யமுடியவில்லை, ரசீது பதிவு செய்ய முடியவில்லை என்று அதிருப்திகள் கிளம்பின..
மேலும், இணையவழி பட்டாவையும் அரசு நடைமுறைப்படுத்தவில்லை என்றும், இதனால் பட்டா கிடைத்தும் அதனை பயன்படுத்த முடியாத நிலைமை உள்ளதாகவும் வருத்தம் தெரிவித்திருந்த பொதுமக்கள், வழங்கப்பட்ட பட்டாக்கள் பயன்பெறும் விதத்தில் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றும் கோரிக்கை விடுத்திருந்தனர்.
வீட்டு மனை பட்டாக்கள்
இது தொடர்பான நடவடிக்கையை அரசு மேற்கொண்டு வருவதாகவும் தகவல் வெளியாகியிருந்தது. இந்நிலையில், கன்னியாகுமரி சிறப்பு நிலை பேரூராட்சி பத்தாவது வார்டுக்கு உட்பட்ட வில்லியம் பூத் பகுதியில், இலவச வீட்டு மனை பட்டா குறித்த மகிழ்ச்சி தகவல் வெளியாகியிருக்கிறது.
கடந்த 20 வருடங்களுக்கு மேலாக வசித்து வந்த பொதுமக்கள் தங்களுக்கு இலவச வீட்டுமனை பட்டா வழங்க வேண்டும் என நீண்ட காலமாக கோரிக்கை விடுத்து வந்த நிலையில், வார்டு கவுன்சிலர் இக்பால் இதற்காகவே பல்வேறு கட்ட முயற்சிகளை மேற்கொண்டு வந்தாராம்.
சபாஷ் கவுன்சிலர்
குறிப்பாக, மக்களின் கோரிக்கை குறித்து மாவட்ட நிர்வாகத்தின் கவனத்திற்கு கொண்டு சென்றதையடுத்து, இப்போது அப்பகுதி மக்களுக்கு இலவச வீட்டு மனை பட்டாக்கள் கிடைத்துள்ளன... நாகர்கோவிலில் நடைபெற்ற நிகழ்ச்சியில் அமைச்சர் தங்கம் தென்னரசு கன்னியாகுமரி வில்லியம் பூத் பகுதியை சார்ந்த 36 குடும்பங்களுக்கு, இந்த இலவச வீட்டு மனை பட்டா வழங்கினார்.
இந்த நிகழ்ச்சியில், கன்னியாகுமரி பேரூராட்சி கவுன்சிலர்கள் பூலோக ராஜா, சிவ சுடலை மணி, திமுக நிர்வாகிகள் ஆனந்த், பிரைட்டன், கன்னியாகுமரி கிராம நிர்வாக அலுவலர் பாலகிருஷ்ணன் ஆகியோர் பங்கேற்றனர். அதுமட்டுமல்லாமல், இந்த பட்டா கிடைக்க, முழு முயற்சி மேற்கொண்ட கவுன்சிலர் இக்பாலை பயனாளிகள் அனைவருமே பாராட்டினார்கள்..












Click it and Unblock the Notifications