உடம்பில் ஏறி உட்கார்ந்த சாத்தான்.. கதவை நீண்ட நேரம் திறக்கவில்லை.. துடிதுடித்து போன கன்னியாகுமரி
கன்னியாகுமரி: கன்னியாகுமரி மாவட்டத்தில் நடந்த சம்பவம், ஒட்டுமொத்த பெற்றோர்களையும் கதிகலங்க செய்து வருகிறது.. 8 வயது சிறுவனை ஸ்கிப்பிங் கயிறால் சரமாரியாக அடித்து தாக்கப்பட்டுள்ளான்.. உடம்பெல்லாம் காணப்பட்ட ரத்த காயங்கள் பலருக்கும் அதிர்ச்சியையும், வேதனையையும் கலக்கத்தையும் தந்து வருகிறது.. இது தொடர்பான விசாரணையை போலீசார் நடத்தி வருகிறார்கள் என்றாலும், குமரி சம்பவத்தின் அதிர்வலைகள் இன்னமும் விலகவில்லை.
கன்னியாகுமரி மாவட்டம் தேவிகோடு இடைக்கோடு பகுதியைச் சேர்ந்தவர் கிங்ஸ்லி.. 45 வயதாகிறது.. அந்த பகுதியில் மதபோதகராக செயல்பட்டு வருகிறார்.. அந்த பகுதியில் உள்ள சபைகளில் போதனைகளை செய்து வந்துள்ளார். இவருடைய மனைவி பெயர் சஜினி.

இந்த தம்பதிக்கு ஆறு மற்றும் மூன்று வயதில் 2 மகன்களும், 8 மாதத்தில் ஒரு பெண் குழந்தையும் உள்ளனர்.
3 குழந்தைகளையும் காணவில்லை
இந்நிலையில், நேற்றைய தினம் கிங்ஸ்லியும், அவரது மனைவியும் வெளியே சென்று விட்டு வீட்டுக்கு திரும்பி வந்திருக்கிறார்கள்.. அப்போது அவருடைய குழந்தைகள் பக்கத்து வீட்டிற்கு சென்று விளையாடி கொண்டிருந்தார்கள்.. இது கிங்ஸ்லிக்கு பிடிக்கவில்லை.. எனவே ஆத்திரமடைந்த கிங்ஸ்லி, 3 குழந்தைகளையும் வீட்டுக்கு வரவழைத்து, கயிற்றால் சரமாரியாக விளாசி தள்ளியிருக்கிறார்..
இதைப்பார்த்து அக்கம் பக்கத்து வீட்டுக்காரர்கள் அதிர்ச்சி அடைந்து கருங்கல் போலீசுக்கு தகவல் தந்தனர்.. உடனே போலீசார் விரைந்து வந்து 3 குழந்தைகளையும் கிங்ஸ்லியிடமிருந்து மீட்டனர்.. பிறகு கிங்ஸ்லியை ஸ்டேஷனுக்கு அழைத்து சென்று விசாரித்தனர்.. அப்போது போலீசாரிடம் கிங்ஸ்லி சொன்னதாவது:
பகீர் வாக்குமூலம்
"எனக்கு அக்கம்பக்கம் வீடுகளில் குழந்தைகள் பழகுவது பிடிக்காது.. அதனால், தினமும் ஊழியத்துக்கு செல்லும்போது குழந்தைகளை வீட்டில் வைத்து பூட்டிவிட்டு செல்வது வழக்கம். நேற்று வெளியில் சென்றுவிட்டு, வீட்டுக்கு வந்தால், குழந்தைகளை காணவில்லை.
பக்கத்து வீட்டில் குழந்தைகளுடன் விளையாடிக் கொண்டிருந்தனர்... குழந்தைகள் மீது சாத்தான் புகுந்து விட்டதாகவும், அதனால் தான் வீட்டை விட்டு வெளியேறி சென்றுவிட்டதாகவும் நினைத்து பயந்துவிட்டேன்.. உடம்பில் சாத்தான் புகுந்து விட்டதுல்தான், அதனை உடம்பிலிருந்து சாத்தானை விரட்ட கயிற்றினால் கட்டி வைத்து அடித்தேன்" என்றார்.
இந்த வாக்குமூலத்தை கேட்டு அதிர்ச்சியடைந்த போலீசார், கிங்ஸ்லியை கைது செய்தனர்.. உடம்பெல்லாம் காயமடைந்த 3 குழந்தைகளையும் மருத்துவமனையில் சிகிச்சைக்காக சேர்த்தனர்..
நாங்கள் இருக்கோம்
தனது 8 வயது மகனை ஸ்கிப்பிங் ரோப்பால் சரமாரியாக கிங்ஸ்லி தாக்கியுள்ளார். ரத்த காயங்களுடன் உட்கார்ந்திருந்த சிறுவனிடம் பக்கத்து வீட்டு சிறுவர்கள், "நாங்க உன்ன பத்திரமா பாத்துகிறோம் சரியா? அழாதே" என்று சமாதானம் கூறும் வீடியோ ஒன்று சோஷியல் மீடியாவில் வைரலாகி கொண்டிருக்கிறது.
இந்த வீடியோவை பார்த்து பதறிப்போன மாவட்ட குழந்தைகள் நல பாதுகாப்பு அதிகாரிகள், உடனடியாக விரைந்து சென்று சிறுவனின் சிகிச்சையை தீவிரப்படுத்தினார்கள்.. இப்போது போலீசார் கிங்ஸ்லியை கைது செய்து விசாரணை நடத்தி கொண்டிருக்கிறார்கள்.
நீண்ட நேர அலறல்
நீண்ட நேரமாக குழந்தைகள் அலறும் சத்தம் அக்கம் பக்கத்தில் கேட்டிருக்கிறது.. அதனால்தான், அதிர்ச்சி அடைந்த அக்கம்பக்கத்தினர் கதவை தட்டினர்... கதவு திறக்கப்படவில்லை. இதற்கு பிறகு பொதுமக்கள் கருங்கல் போலீசாரிடம் தெரிவித்தனர்.
போலீசார் விரைந்து வந்து கதவை தட்டினால், அப்போதும் திறக்கவில்லையாம்.. சென்று நீண்ட நேரம் நேரம் கழித்து கிங்ஸ்லி கில்பர்ட் கதவை திறந்துள்ளார்.. அப்போது மூன்று குழந்தைகளையும் கயிற்றால் கட்டி கொடூரமாக அவர் தாக்கியதை பார்த்து போலீசார் உறைந்துபோய் நின்றுள்ளனர்.
மூடநம்பிக்கைகள்
தமிழகம் மட்டுமல்லாமல் மூடநம்பிக்கைகள் உலகளாவிய அளவில் பரவி கிடக்கிறது.. அனைத்து மதங்களிலுமே இந்த மூட நம்பிக்கைகள் பல உயிர்களை காவு வாங்கி கொண்டிருக்கின்றன.. நினைத்ததையெல்லாம் நடத்தித் தந்துவிட்டு, அதன் பிறகு நரபலி போன்ற பயங்கரங்களையும் சிலர் அரங்கேற்றி விடுகிறார்கள் . படித்தவர்களே, இதுபோன்ற மூட நம்பிக்கைகளில் ஈடுபடுவது அதைவிட வேதனையை தந்து கொண்டிருக்கிறது
-
பிராய்லர் சிக்கன் சாப்பிட்டால் சிறுமிகள் சீக்கிரம் பருவமடைகிறார்களா? 65 சாப்பிடலாமா? FSSAI விளக்கம்? -
கங்கை அமரன் போட்ட போடு! பாரதிராஜாவின் 500 கோடி சொத்தில் வெடித்த சர்ச்சை! நீலாங்கரை பங்களா யாருக்கு -
40,000 கோடி முதலீட்டில் கப்பல் தளம்! அமைச்சர் கீர்த்தனாவின் மாஸ்டர் மூவ்! ஆனால் கனிமொழி சொல்வதென்ன -
ராஜ்மோகன் மெகா அறிவிப்பு.. அரசு பள்ளி மாணவர்களுக்கு சிறப்பு திட்டம்.. 5000 அரசுப் பள்ளிகளுக்கு ஜாக்பாட்! -
அரசியலுக்கு வருகிறேன்! முடிவை அறிவித்தார் லாரன்ஸ்! விஜய்யின் தவெகவா? அண்ணாமலை இயக்கமா? -
"மீட்டிங் போட்டு.. யாரும் கமிஷன் தர வேண்டாம்னு சொன்னவரு.." ஆதவ் அர்ஜுனாவை புகழ்ந்து தள்ளிய ராஜ்மோகன் -
10 பைசா செலவு இல்லாம.. ரூ.7 லட்சம் கிடைக்கும்.. எத்தனை பேருக்கு இப்படியொரு திட்டம் இருப்பது தெரியும்? -
சிபிஐ எந்த கூட்டணியிலும் இல்லை.. தவெகவுக்கு எதிராக போராட்டத்தை அறிவித்த வீரபாண்டியன்! -
கடன் சுமையை சமாளிக்க முடியல.. அதிமுகவினர் தவெகவிற்கு தாவ இதுதான் காரணமா? ஆட்டம் காணும் அடித்தளம்! -
அறிவாலயத்தை உலுக்கிய ஆய்வுக்குழு! சேகர்பாபு மீது அடுக்கப்பட்ட குற்றச்சாட்டுகள்.. டென்ஷனில் ஸ்டாலின்! -
ஐடி துறையை கதறவிட்ட எலான் மஸ்க்! ஒரே ஆண்டில் கோடிங் எழுதும் வேலையை மொத்தமாக AI காலி செய்யுமாம்! -
“ஆண் உறுப்பின் சைஸை பார்ப்போம்..” பெண் டாக்டர் பேச்சால் சர்ச்சை! சவக்கிடங்கில் இதுதான் நடக்குதா?












Click it and Unblock the Notifications