Get Updates
Get notified of breaking news, exclusive insights, and must-see stories!

கன்னியாகுமரியின் அடையாளம் மாறுகிறது! திருவள்ளுவர் சிலை வெள்ளி விழா வளைவை திறந்து வைக்கிறார் முதல்வர்

Subscribe to Oneindia Tamil

கன்னியாகுமரி: தமிழக முதல்வா் மு.க. ஸ்டாலின் 2 நாள் சுற்றுப்பயணமாக இரு செவ்வாய்க்கிழமை கன்னியாகுமரிக்கு வருகிறாா். கன்னியாகுமரி மாவட்டத்தில் பல்வேறு நிகழ்ச்சிகளில் கலந்து கொள்வதற்காக முதல்வா் கன்னியாகுமரி வருகிறாா். திருவள்ளுவர் சிலையின் 25-வது ஆண்டு வெள்ளி விழாவை முன்னிட்டு அமைக்கப்பட்டுள்ள பிரம்மாண்ட நினைவு வளைவைத் திறந்து வைக்கிறார் ஸ்டாலின்..

தமிழக முதல்வர் மு.க. ஸ்டாலின் இரண்டு நாள் அரசுமுறைப் பயணமாக இன்று கன்னியாகுமரி மாவட்டத்திற்கு வருகை தருகிறார்.. இதற்காக அவர் சென்னையிலிருந்து விமானம் மூலம் காலை 11 மணிக்கு தூத்துக்குடி வந்தடைந்து, அங்கிருந்து சாலை மார்க்கமாக கன்னியாகுமரிக்குச் செல்கிறார்..

Kanyakumari Thiruvalluvar Statue Silver Jubilee Arch MK Stalin

குமரி மாவட்டத்தில் பல்வேறு புதிய திட்டங்களைத் தொடங்கி வைப்பதற்கும், நலத்திட்ட உதவிகள் வழங்குவதற்கும் விரிவான ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன..

இன்று மதியம் கன்னியாகுமரி வந்தடையும் முதல்வர், திருவள்ளுவர் சிலையின் 25-வது ஆண்டு வெள்ளி விழாவை முன்னிட்டு அமைக்கப்பட்டுள்ள பிரம்மாண்ட நினைவு வளைவைத் திறந்து வைக்கிறார்..

கருணாநிதி சிலை

இந்த வளைவு சுமார் 1.45 கோடி ரூபாய் மதிப்பீட்டில் கட்டப்பட்டுள்ளது.. முன்னதாக ஜீரோ பாயிண்ட் முதல் அலங்கார வளைவு வரை அவர் ரோடு ஷோ எனப்படும் சாலைப் பயணத்தை மேற்கொண்டு பொதுமக்களைச் சந்திக்கிறார்.. இதனைத் தொடர்ந்து மாலையில் புத்தளம் கல்லடிவிளையில் அமைக்கப்பட்டுள்ள முன்னாள் முதல்வர் கருணாநிதியின் சிலை மற்றும் முதல்வர் படைப்பகம் ஆகியவற்றை அவர் திறந்து வைக்கிறார்..

பின்னர் நாகர்கோவில் வேப்பமூடு பூங்காவில் 50 லட்சம் ரூபாய் செலவில் நிறுவப்பட்டுள்ள பொன்னப்ப நாடார் வெண்கலச் சிலையையும் முதல்வர் திறந்து வைக்கிறார்..

நாளை பிரம்மாண்ட விழா

நாளை பிப்ரவரி 25ம் தேதி காலை நாகர்கோவில் கன்கார்டியா மேல்நிலைப்பள்ளி வளாகத்தில் நடைபெறும் பிரம்மாண்ட விழாவில் முதல்வர் பங்கேற்கிறார்.. இந்த விழாவில் 25 ஆயிரத்திற்கும் மேற்பட்ட பயனாளிகளுக்குப் பல்வேறு அரசு நலத்திட்ட உதவிகளை அவர் வழங்குகிறார்..

மேலும் நாகர்கோவில் அநாதைமடம் மைதானத்தில் அமையவுள்ள புதிய ஐடி பார்க் உள்ளிட்ட பல்வேறு திட்டங்களுக்கு அவர் அடிக்கல் நாட்டுகிறார்.. பணிகள் நிறைவடைந்த மற்ற அரசுத் திட்டங்களையும் அவர் தொடங்கி வைத்து சிறப்புரையாற்றுகிறார்.. அனைத்து நிகழ்ச்சிகளையும் முடித்துவிட்டு நாளை காலை 10.30 மணியளவில் அவர் நாகர்கோவிலில் இருந்து புறப்பட்டு தூத்துக்குடி வழியாக விமானத்தில் சென்னை திரும்புகிறார்..

பாதுகாப்பு ஏற்பாடுகள்

முதல்வரின் இந்த வருகையை முன்னிட்டு கன்னியாகுமரி மாவட்டத்தில் பாதுகாப்பு ஏற்பாடுகள் பலப்படுத்தப்பட்டுள்ளன.. மாவட்ட காவல் கண்காணிப்பாளர் தலைமையில் சுமார் 2,500-க்கும் மேற்பட்ட போலீசார் பாதுகாப்புப் பணியில் ஈடுபடுத்தப்பட்டுள்ளனர்.. அண்டை மாவட்டங்களான திருநெல்வேலி மற்றும் தூத்துக்குடியில் இருந்தும் கூடுதல் போலீசார் வரவழைக்கப்பட்டுள்ளனர்..

பொதுமக்களின் வசதிக்காகவும், போக்குவரத்து நெரிசலைத் தவிர்க்கவும் நாகர்கோவில் மற்றும் கன்னியாகுமரி பகுதிகளில் முக்கிய போக்குவரத்து மாற்றங்கள் செய்யப்பட்டுள்ளன..

குறிப்பாக முதல்வர் செல்லும் பாதைகளான கொட்டாரம், மகாதானபுரம், இடலாக்குடி மற்றும் பார்வதிபுரம் பகுதிகளில் வாகனங்கள் மாற்றுப் பாதையில் செல்ல அறிவுறுத்தப்பட்டுள்ளது.. விழா நடைபெறும் இடங்களில் பொதுமக்கள் வாகனங்களை நிறுத்துவதற்குத் தனி இடவசதிகளும் செய்யப்பட்டுள்ளன..

சுற்றுலா பயணிகள் - பெருமிதம்

திருவள்ளுவர் சிலை வெள்ளி விழா வளைவு மற்றும் தலைவர்களின் சிலைகள் திறக்கப்படுவது கன்னியாகுமரி மாவட்ட மக்களுக்கு மிகுந்த மகிழ்ச்சியையும் பெருமையையும் அளித்துள்ளது.. இந்த நினைவு வளைவு, அந்தப் பகுதியின் அடையாளமாகவும் பார்க்கப்படுகிறது..

மேலும், வரலாற்றுச் சிறப்புமிக்க தலைவர்களின் சிலைகள் நிறுவப்படுவது மாவட்டத்தின் கலாச்சாரப் பெருமையை அடுத்த தலைமுறைக்குக் கொண்டு செல்லும் முயற்சியாக மக்கள் கருதுகின்றனர்.. சுற்றுலாப் பயணிகள் அதிகம் வரும் குமரி முனையில் இத்தகைய புதிய சிறப்பம்சங்கள் சேர்க்கப்படுவது உள்ளூர் மக்களிடையே பெரும் வரவேற்பைப் பெற்றுள்ளது..

டிரோன்கள் பறக்க தடை

முதல்வரின் வருகையை முன்னிட்டு பாதுகாப்பு ஏற்பாடுகளின் ஒரு பகுதியாக, திருநெல்வேலி மாநகர காவல் எல்லைக்குட்பட்ட பகுதிகளில் இன்று காலை 6 மணி முதல் பிப்ரவரி 25-ம் தேதி மாலை 6 மணி வரை டிரோன்கள் மற்றும் ஆளில்லா வான்வழி வாகனங்கள் பறக்க தடை விதிக்கப்படுவதாக மாநகர போலீஸ் கமிஷனர் மணிவண்ணன் உத்தரவிட்டுள்ளார்; இந்த தடையை மீறுபவர்கள் மீது சட்டப்படி கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என்றும் காவல்துறை எச்சரித்துள்ளது.

More From
Prev
Next
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+