Kanyakumari: கன்னியாகுமரி விவேகானந்தர் பாறைக்கு படகுகளில் சவாரி போறீங்களா? இனி ஆன்லைனில் டிக்கெட் புக் பண்ணலாம்
நாகர்கோவில்: கன்னியாகுமரி மாவட்டத்தில் வங்கக்கடல் மற்றும் அரபிக்கடல் சங்கமிக்கும் இடத்தில் கடலில் விவேகானந்தர் பாறை மற்றும் திருவள்ளூவர் சிலை இருக்கிறது. இதற்கு தமிழக அரசு படகுகளை இயக்கி வருகிறது. படகு சவாரிக்கான டிக்கெட் நேரில் வழங்கப்பட்டு வந்த நிலையில், இன்று முதல் ஆன்லைன் மூலம் டிக்கெட் விநியோகம் தொடங்கப்பட்டிருக்கிறது.
கன்னியாகுமரி என்று சொன்னாலே விவேகானந்தர் பாறையும், திருவள்ளூவர் சிலையும்தான் நினைவுக்கு வரும். இதில் விவேகானந்தர் பாறை, கரையிலிருந்து சுமார் 500 மீட்டர் தொலைவிலும், திருவள்ளூவர் சிலை 400 மீ தொலைவிலும் அமைந்திருக்கின்றன.

இந்த இடத்திற்கு தமிழ்நாடு அரசின் பொதுத்துறை நிறுவனமான பூம்புகார் கப்பல் போக்குவரத்த கழகம் படகு சேவையை வழங்கி வருகிறது. பெரும்பாலானா நாட்களில் படகு சவாரி இருப்பினும், கடல் சீற்றம் மற்றும் மோசாமான வானிலை காரணமாக படகு சவாரி ரத்து செய்யப்படுகிறது. இருப்பினும் ஒவ்வொரு நாளும் படகு சவாரிக்காக ஆயிக்கணக்கான பயணிகள் இங்கு குவிகின்றனர். இந்தியாவின் வட எல்லையிலிருந்து கூட இங்கு சுற்றுலா பயணிகள் வருகின்றனர்.
இப்படி இருக்கையில் தமிழக அரசு சமீபத்தில் இந்த சுற்றுலா தளங்களை மேம்படுத்தியிருந்து. குறிப்பாக விவேகானந்தர் பாறைக்கும் திருவள்ளுவர் சிலைக்கும் இடையே சுமார் 95 மீட்டர் நீளமுள்ள நடைபாதை அமைக்கப்பட்டுள்ளது. இந்த நடைபாதை கண்ணாடியால் செய்யப்பட்டிருப்பதால் சுற்றுலா பயணிகளை பெரிய அளவில் கவர்ந்திருக்கிறது.
இந்நிலையில் சமீபத்தில் படகு சவாரிக்கான கட்டணம் ரூ.100 மற்றும் சிறப்பு கட்டணம் ரூ.300 என உயர்த்தப்பட்டிருந்தது. இதனையடுத்து தற்போது ஆன்லைன் மூலம் டிக்கெட் பெற்றுக்கொள்ளும் வசதி சுற்றுலா பயணிகளுக்காக கொண்டுவரப்பட்டிருக்கிறது.
https://www.psckfs.tn.gov.in/public என்கிற வெப்சைட்டுக்குள் நுழைந்தால் எந்த தேதியில் படகு சவாரி செய்யப்போகிறீர்கள் என்கிற விவரங்கள் கேட்கும். அதேபோல எந்த தேதிகளில் சாதாரண கட்டண டிக்கெட்கள் எவ்வளவு இருக்கிறது? சிறப்பு கட்டண டிக்கெட்கள் எவ்வளவு இருக்கிறது என்கிற விவரமும் இருக்கிறது.
டிக்கெட் புக் செய்ய விரும்புவோர்கள், தங்கள் செல்போன் எண்ணை உள்ளீடு செய்ய வேண்டும். நம்பருக்கு ஓடிபி வரும் அதை கொண்டு லாக்-இன் செய்தால் எத்தனை டிக்கெட், டிக்கெட் கட்டணம் உள்ளிட்ட விவரங்கள் தெரியவரும். அதில் வேண்டிய டிக்கெட்களை புக் செய்துக்கொள்ளலாம். இதன் மூலம் பயணிகள் வரிசையில் நின்ற சிரமப்படுவது தவிர்க்கப்படும்.
-
விவசாயக் கடன் தள்ளுபடி.. பொய் சொல்லி ஏமாற்ற மாட்டேன்! விவசாயிகளே கவலைப்படாதீங்க.. விஜய் உத்தரவாதம் -
வளைகுடாவில் இந்தியாவிற்கு கிடைத்தது மாற்றுப்பாதை.. ஓமனால் பெரிய குட்நியூஸ் -
கட்டப்பா கூட ஒரு டைம்தான் குத்துனாரு.. இப்படி தினம் தினம் பண்ணுறீங்களே! கோபத்தின் உச்சியில் ஸ்டாலின் -
DMART முதலாளிக்கு இப்படியொரு பிஸ்னஸ் இருக்கா.. ஒரு வீட்டுக்கு ரூ.27.5 லட்சம் .. ஆடிப்போன மும்பை மக்கள்! -
தமிழக அமைச்சரவையில் சீனியாரிட்டி லிஸ்ட்.. பின் தள்ளப்பட்ட செங்கோட்டையன்.. வன்னி அரசுக்கு எந்த இடம் -
உதயசூரியனில் போட்டியிட்ட 2 மதிமுக எம்எல்ஏக்கள் ராஜினாமா செய்ய முடிவு? திமுகவுக்கு பெருத்த ஷாக்! -
MDMK: எம்எல்ஏக்கள் ராஜினாமா இல்லை.. புது வியூகம் எடுக்கும் மதிமுக? திமுகவுக்கு கல்தா கன்பார்ம்? -
ஆனானப்பட்ட அமெரிக்காவுக்கே இந்த நிலைமையா..? அப்போ இந்தியா? -
அண்ணாமலை ஒரு பிராண்டு.. விட்றாதீங்க! லெட்டரைப் பார்த்ததும் பதறிப் போன டெல்லி! குவியும் ஆஃபர்கள்! -
கோட்டைச்சாமி.. எந்திரி.. இப்போ நீதான் முதலமைச்சர்.. இன்னமும் பிரச்சாரமா? விஜய்யை கிண்டலடித்த திமுக -
வாசலுக்கு வந்த புகார் பெட்டி.. இனி தலைமை செயலகத்தில் எல்லோருக்கும் அனுமதி இல்லை.. தவெக அரசு கறார் -
முதல்வர் விஜய்யே நினைத்தாலும் பரந்தூர் விமான நிலையத்தை ரத்து செய்வது மிக கடினம்.. ஏன் தெரியுமா?












Click it and Unblock the Notifications