Get Updates
Get notified of breaking news, exclusive insights, and must-see stories!

கன்னியாகுமரி மாவட்டத்தில் பிரபல நிதி நிறுவனத்தால் ஏமாந்தவர்களுக்கு குட்நியூஸ்.. போலீஸ் அறிவிப்பு

Subscribe to Oneindia Tamil

கன்னியாகுமரி: கன்னியாகுமரி மாவட்டம் குளச்சல், மண்டைக்காடு, மணவாளக்குறிச்சி, திங்கள்நகர், கருங்கல், தக்கலை, மார்த்தாண்டம், குலசேகரம், நாகராஜா கோவில், மீனாட்சிபுரம், பத்மநாபபுரம், திருவிதாங்கோடு, சாமியார்மடம் ஆகிய பகுதிகளில் இயங்கி வந்த எஸ்.யு.எஸ். என்ற நிதி நிறுவனத்தில் ஏராளமானோர் முதலீடு செய்து ஏமாந்துள்ளனர். அவர்களுக்கு நீதிமன்ற உத்தரவுப்படி கணிசமான தொகை வழங்கப்பட உள்ளது.. இதுபற்றி போலீசார் அறிவிப்பு வெளியிட்டுள்ளனர்.

கன்னியாகுமரி மாவட்டம் குளச்சல், மண்டைக்காடு, மணவாளக்குறிச்சி, திங்கள்நகர், கருங்கல், தக்கலை, மார்த்தாண்டம், குலசேகரம், நாகராஜா கோவில், மீனாட்சிபுரம், பத்மநாபபுரம், திருவிதாங்கோடு, சாமியார்மடம் ஆகிய பகுதிகளில் எஸ்.யு.எஸ். என்ற நிதி நிறுவனம் செயல்பட்டு வந்ததது. இந்த நிறுவனம் மீது நாகர்கோவில் பொருளாதார குற்றப்பிரிவு போலீசாரால் வழக்குப்பதிவு செய்யப்பட்டு மதுரையில் உள்ள பொருளாதார குற்றப்பிரிவு நீதிமன்றத்தில் விசாரணை நடந்து வருகிறது.

Kanyakumari SUS Financial Company Good news for those who were disappointed in their investments

24 சதவீதம் பணம்

இந்த வழக்கில் சம்பந்தப்பட்டவர்களின் சொத்துக்கள் அரசால் கையகப்படுத்தப்பட்டு கன்னியாகுமரி மாவட்ட வருவாய் அதிகாரி மூலம் ஏலம் விடப்பட்டு கோர்ட்டு உத்தரவுப்படி முதலீட்டாளர்களுக்கு முதலீட்டு பணத்தில் 24 சதவீதம் வழங்கப்பட்டு வருகிறது. எஸ்.யு.எஸ். நிதி நிறுவனத்தில் பணம் முதலீடு செய்து ஏமாற்றப்பட்ட முதலீட்டாளர்கள் நாகர்கோவில் பொருளாதார குற்றப்பிரிவில் தேசியமயமாக்கப்பட்ட வங்கி கணக்கு நகல், ஆதார் அட்டை நகல் ஆகியவற்றுடன் ஆஜராகி நிவாரணம் பெற்றுக் கொள்ள கேட்டுக் கொள்ள முடியும். முதலீட்டாளர்கள் இறந்து விட்டால் சம்பந்தப்பட்டவர்கள் வாரிசு சான்றிதழ் கொண்டுவர வேண்டும் என்று காவல்துறை அறிவித்துள்ளது

எஸ்.யு.எஸ். நிதி நிறுவனம்

கன்னியாகுமரி மாவட்ட பொருளாதார குற்றப்பிரிவு காவல் நிலையம் வெளியிட்டுள்ள அறிவிப்பில் கூறப்பட்டுள்ளதாவது: "கன்னியாகுமரி மாவட்டத்தில் குளச்சல், மண்டைக்காடு, மணவாளக்குறிச்சி, திங்கள் நகர், கருங்கல், தக்கலை, மார்த்தாண்டம், குலசேகரம், நாகராஜாகோவில், மீனாட்சிபுரம், பத்மநாபபுரம், திருவிதாங்கோடு மற்றும் சாமியார்மடம் ஆகிய இடங்களில் செயல்பட்டு வந்த எஸ்.யு.எஸ். என்ற நிதி நிறுவனத்தின் மீது நாகர்கோவில் பொருளாதார குற்றப்பிரிவு போலீஸ் நிலையத்தில் வழக்குப்பதிவு செய்யப்பட்டு மதுரை பொருளாதார குற்றப்பிரிவு கோர்ட்டில் விசாரணையில் இருந்து வருகிறது.

முதலீட்டாளர்கள் என்ன செய்ய வேண்டும்

வழக்கில் சம்பந்தப்பட்ட நபர்களின் சொத்துக்கள் கையகப்படுத்தப்பட்டு மாவட்ட வருவாய் அலுவலர் மூலம் ஏலம் விடப்பட்டு கோர்ட்டு உத்தரவுபடி முதலீட்டாளர்களுக்கு முதலீட்டு பணத்தில் 24 சதவீதம் வைத்து வழங்கப்பட்டு வருகிறது. எனவே, எஸ்.யு.எஸ். நிதி நிறுவனத்தில் பணம் முதலீடு செய்து ஏமாந்த முதலீட்டாளர்களில் முதல் தவணை தொகை பணம் இதுவரை திரும்ப கிடைக்காதவர்கள் தேசியமயமாக்கப்பட்ட வங்கி கணக்கு நகல் மற்றும் ஆதார் அட்டை நகல் ஆகியவற்றுடன் நாகர்கோவில் பொருளாதார குற்றப்பிரிவை அணுகி நிவாரணம் பெற்றுக் கொள்ளலாம். முதலீட்டாளர்கள் இறந்து விட்டால் சம்பந்தப்பட்டவர்கள் இறப்பு சான்றிதழ் மற்றும் வாரிசு சான்றிதழ் கொண்டு வரவும்" இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

பொதுமக்களுக்கு அறிவுரை

அதிக வட்டி தருவதாகவும், நிலம் தருவதாகவும், பணம் இரட்டிப்பாக தருவதாகவும் கூறும் தனியார் நிதி நிறுவனங்களில் யாரும் முதலீடு செய்து ஏமாற வேண்டாம் என்றும், ஆர்.பி.ஐ. அனுமதி பெற்ற தனியார் வங்கிகள் மற்றும் அரசு வங்கிகளில் முதலீடு செய்து பணத்தை பாதுகாத்துக் கொள்வது நல்லது.

More From
Prev
Next
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+