Get Updates
Get notified of breaking news, exclusive insights, and must-see stories!

கன்னியாகுமரியில் இரவெல்லாம் இன்ஸ்டாகிராமில் இளம் பெண்.. இறுதியில் இப்படியா ஆகணும்

Subscribe to Oneindia Tamil

கன்னியாகுமரி: இன்றைக்கு இளம் சிறார்கள் பலர் இன்ஸ்டாகிராமே கதி என்று கிடக்கிறார்கள். பலருக்கு வெளிஉலகில் நடப்பதை அறிந்து கொள்வதைவிட, செலிப்ரிட்டிகள் எப்படி வீடியோ போடுகிறார்கள். இன்ஸ்டா இன்புளுயன்சர்கள் என்ன போடுகிறார்கள் என்பதை பார்க்கவே அதிக ஆர்வம் காட்டுகிறார்கள். இன்ஸ்டா உலகம் 2 கே கிட்ஸ் உலகமாக இருக்கிறது. இந்நிலையில் இரவிலும் இன்ஸ்டாகிராமே கதி என கிடந்ததை தாயார் கண்டித்ததால் 16 வயது பள்ளி மாணவி தவறான முடிவெடுத்தார். அது பெற்றோரை ஆடிப்போக வைத்துள்ளது.

இன்ஸ்டாகிராமில் வாழ்க்கையை தொலைத்த இளைஞர்கள் பலர் இருக்கிறார்கள். இன்ஸ்டாவில் புகழ் பெற்றாலே வாழ்க்கையில் உயரத்தை அடையலாம் என்ற தவறான பாதையில் பல இளைஞர்கள் போய்கொண்டிருக்கிறார்கள். யூடியூபர், இன்ஸ்டா இன்புளுயன்சராக மாற நினைக்கிறார்கள். ஒரே வீடியோ ஓஹோன்னு வாழ்க்கை என்று தவறான நினைக்கிறார்கள். அதேபோல் இன்ஸ்டாவில் தான் பல பொழுதுபோக்கு விஷயங்கள்இருப்பதாக நினைப்பதால், அதற்கு அடிமையாகவே பலரும் மாறிக்கிடக்கிறார்கள்.. கன்னியாகுமரி மாவட்டம் மார்த்தாண்டம் அருகே 16 வயது மாணவிக்கு என்ன நடந்தது என்பது பற்றி பார்ப்போம்.

Kanyakumari What happened to the 16-year-old girl because of the Instagram website near Marthandam

16 வயது மாணவி

கன்னியாகுமரி மாவட்டம் பளுகல் அருகே உள்ள கண்ணுமாமூடு பகுதியை சேர்ந்த 50 வயதாகும் ஹரிகுமார் என்பவர் வெளிநாட்டில் வேலை செய்து வருகிறார். இவருடைய மனைவி பிபுக்கு 45 வயது ஆகிறது இவர்களுக்கு ஹிபேஷ் கிருஷ்ணா (20) என்ற மகனும், ஹிமாலட்சுமி(16) என்ற மகளும் இருந்தனர். இதில் ஹிபேஷ் கிருஷ்ணா டிப்ளமோ படித்துவிட்டு இஸ்ரோவில் பயிற்சி பெற்று வருகிறார். மகள் ஹிமாலட்சுமி பளுகல் பகுதியில் உள்ள ஒரு அரசு மேல்நிலைப்பள்ளியில் 11ம் வகுப்பு படித்து வந்தார்.

அம்மாவுக்கு பிடிக்கவில்லை

ஹிமாலட்சுமி தனது செல்போனில் அவ்வப்போது இன்ஸ்டாகிராமில் வீடியோ, புகைப்படங்களை பதிவிடுவதை வழக்கமாக வைத்திருந்தாராம். இது அவரது அம்மாவிற்கு பிடிக்கவில்லையாம். ஹிமாலட்சுமி இன்ஸ்டாவில் மூழ்கிகிடப்பதை கண்டு, அவரது அம்மாவும், அண்ணணும் கண்டிப்பார்களாம். அந்த மாதிரியான நேரங்களில் ஹிமாலட்சுமி கோபத்தில் தனது அறைக்கதவை மூடிக்கொள்வாராம். இரவிலும் இன்ஸ்டாகிராமே கதி என்றே இருப்

தாய் கண்டிப்பு

நேற்று முன்தினம் இரவும் ஹிமாலட்சுமி வெகுநேரமாக இன்ஸ்டாகிராமை பார்த்துக் கொண்டிருந்தார். இதை பார்த்த அவரது அம்மா, உனக்கு வேற வேலையே இல்லையா, ஒழுங்கா படி, இப்படி செல்போனை பார்த்துக் கொண்டிருந்தால் எப்படி? என கண்டித்தாராம். இதனால் கோபமடைந்த ஹிமாலட்சுமி அவரிடம் சண்டை போட்டு விட்டு, தனது அறைக்கதவை பூட்டி விட்டார். வழக்கம்போல் கோபத்தில் கதவை மூடுகிறார் என நினைத்துக் கொண்டு வீட்டில் உள்ளவர்கள் தூங்க போய்விட்டார்.

கதவை திறக்கவில்லை

ஆனால் நேற்று காலையில் வெகுநேரமாகியும் ஹிமாலட்சுமி அறையை விட்டு வெளியே வரவில்லை. இதனால் குடும்பத்தினர் கதவை தட்டி பார்த்தனர். உள்ளே இருந்து எந்த விதமான சத்தமும் வரவில்லை. இது அவர்களை பதற்றமடைய செய்தது. ஏதோ விபரீதம் நடந்து விட்டதோ என அச்சப்பட்டனர். இதனால் சந்தேகமடைந்து அறை கதவை உடைத்து உள்ளே புகுந்தனர். அங்கு கண்ட காட்சி அவர்களை ஆடிப்போக வைத்தது. அதாவது ஜன்னல் கம்பியில் ஹிமாலட்சுமி தொங்கியபடி இருந்தார்.

கலங்கிய தாய்

இதனை பார்த்த குடும்பத்தினர் இப்படி செய்து விட்டாயே? என கண்ணீர்விட்டு கதறி அழுதனர். இதுபற்றி அக்கம் பக்கத்தினர் பளுகல் போலீசாருக்கு தகவல் தெரிவித்தனர். அதன்பேரில் போலீசார் சம்பவ இடத்துக்கு விரைந்து வந்து மாணவி ஹிமாலட்சுமியின் உடலை கைப்பற்றி பிரேதப் பரிசோதனைக்காக நாகர்கோவில் ஆசாரிபள்ளம் அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.

போலீசார் விசாரணை

மேலும் இதுகுறித்து ஹிமாலட்சுமியின் தாயார் பிபு களியக்காவிளை போலீசில் புகார் செய்தார். அதன்பேரில் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள். இன்ஸ்டாகிராம் பார்ப்பதை தாயார் கண்டித்ததால் 16 வயது மாணவி தவறான முடிவெடுத்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியது.

தற்கொலை எந்த பிரச்சனைக்கும் தீர்வு அல்ல.. உங்களுக்கு மன அழுத்தம் உண்டானாலோ அல்லது தற்கொலை எண்ணம் எழுந்தாலோ, கீழ்கண்ட எண்களை தொடர்பு கொள்ளலாம்:

சினேகா தற்கொலை தடுப்பு உதவி மையம் - 044 2464 0050 (24 மணி நேரம்)

மாநில தற்கொலை தடுப்பு உதவி மையம் - 104 (24 மணி நேரம்

More From
Prev
Next
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+