கன்னியாகுமரியில் புறப்பட்ட 'முத்தமிழ்த் தேர்'.. முரசு கொட்டிய 4 அமைச்சர்கள்! டிச.4 வரை நான்-ஸ்டாப்!
கன்னியாகுமரி: கருணாநிதி நூற்றாண்டு விழாவை முன்னிட்டு ''முத்தமிழ்த்தேர் அலங்கார ஊர்தியை'' கன்னியாகுமரியில் அமைச்சர்கள் பெரியகருப்பன், அன்பில் மகேஸ், மனோ தங்கராஜ், கயல்விழி செல்வராஜ் ஆகியோர் முரசு கொட்டி துவக்கி வைத்தார்கள்.
இந்நிகழ்ச்சியில் அமைச்சர் பெரியகருப்பன் பேசியதாவது;

''கலைஞர் நூற்றாண்டு விழாவை கொண்டாட முதலமைச்சர் ஸ்டாலினால் 12 குழுக்கள் அமைக்கப்பட்டன. அதில், "எழுத்தாளர்-கலைஞர்" குழு, சார்பில் இன்றைய இளம் தலைமுறையினருக்கு கலைஞரின் பன்முகத்தன்மையினை எடுத்து செல்லும் வகையில், "முத்தமிழ்த்தேர்" அலங்கார ஊர்தி தயார் செய்து இன்று துவக்கிவைக்கப்பட்டதில் மட்டற்ற மகிழ்ச்சி அடைகின்றேன்.
இந்த வாகனமானது "எழுத்தே எனது மூச்சு, எழுதுவதே எனது தினப்பழக்கம்" என்று முழங்கிய முத்தமிழறிஞர் கலைஞர் பயன்படுத்திய பேனா வடிவில் அமைக்கப்பட்டுள்ளது. இதன் வெளிப்புறத்தில் கலைஞரின் பன்முகத்தன்மையினை விளக்கும் புகைப்படங்கள் அமைக்கப்பட்டுள்ளது. மேலும், கலைஞரின் சிறப்புகளை விளக்கும் குறும்படமும் தொடர்ந்து திரையிடும் வகையில் ஒளித்திரையும் (LED WALL) அமைக்கப்பட்டுள்ளது.
பேனா வடிவிலான இந்த வானகத்தின் பின்புறம் இயந்திரத்தினால் திறந்து மூடும் வகையில் அமைக்கப்பட்டுள்ளது. இந்த அலங்கார ஊர்தியினை பொதுமக்கள், பள்ளி மாணவ, மாணவியர்கள் உள்ளிட்ட அனைவரும் சென்று பார்வையிடும் வகையில் அமைக்கப்பட்டுள்ளது.
மேலும், வானத்தின் உள்ளே, கலைஞரின் கோபலபுர இல்ல உள் அமைப்பு தத்ரூபமாக அமைக்கப்பட்டுள்ளது. உள்ளே அஞ்சுகம் அம்மாள் அவர்களில் உருவச்சிலையும் அதன் அருகில் முத்தமிழறிஞர் அவர்கள் இருக்கையில் அமர்ந்திருப்பது போன்ற உருவச்சிலையும், அவர் பயன்படுத்திய நூலகத்தின் மாதிரி வடிவமைப்பும் உருவாக்கப்பட்டுள்ளது. இதன் அருகில் நின்று பொதுமக்கள் Selfi எடுத்துக்கொள்ளும் வசதியும் ஏற்படுத்தப்பட்டுள்ளது.
மேலும், முத்தமிழறிஞர் கலைஞர் அவர்களின் எழுத்துக்களுக்கு வடிவம் கொடுக்கும் அவரது படைப்புகளும், அவரது பன்முகத் தோற்றத்தினை விளக்கும் ஒலி - ஒளி அமைப்பும் உருவக்கப்பட்டு காட்சிப்படுத்தப்பட்டுள்ளது. கலைஞரின் எழுத்துகளால் உயிர்ப்பெற்ற கவிதை, கட்டுரை, புதினங்கள், காப்பியங்கள் போன்றவற்றை கைப்பேசி வாயிலாக இன்றைய இளம் தலைமுறையினர் அறிந்து கொள்ளும் வகையில் QR Code Scan செய்து அறிந்து கொள்ளும் வசதியும் ஏற்படுத்தப்பட்டுள்ளது.
இந்த வாகனத்தின் பாதுகாப்பிற்காக நான்கு புறமும், உள்பகுதியிலும் சிசிடிவி கண்காணிப்பு கேமரா பொருத்தப்பட்டுள்ளது. மேலும், ஒட்டுநர் அறையில் வாகனத்தினை இயக்கும் போது நான்கு பக்கங்களும் தெரியும் வகையில் திரை அமைக்கப்பட்டுள்ளது.
இன்றைய தினம் துவக்கி வைக்கப்பட்ட இந்த அலங்கார ஊர்தியானது திருநெல்வேலி, தூத்துக்குடி, விருதுநகர் ஆகிய மாவட்டங்கள் வழியாக 30 மாவட்டங்களுக்கு பயணம் மேற்கொண்டு 04.12.2023 அன்று சென்னை வந்தடையும். அப்போது முதலமைச்சர் ஸ்டாலின் பார்வையிடவுள்ளார் என்ற மகிழ்ச்சியான செய்தியினை தெரிவித்துக் கொள்கிறேன்.''
-
சென்னையில் நாளை மாலை ‘GenZ DMK’ பிரம்மாண்ட நிகழ்ச்சி.. களமிறங்கும் திமுக உணர்வுள்ள இளைஞர்கள்! -
ஆள் மட்டுமில்லை.. கட்சியையே தவெகவில் இணைக்கும் புகழேந்தி.. புஸ்ஸி - செங்கோட்டையனுடன் சந்திப்பு -
அதிமுகவில் அடுத்த விக்கெட்? சி.வி.சண்முகத்துக்கு இப்படியொரு லட்டு சான்ஸ்? போட்டு தாக்குதே தவெக -
விசில் அடித்து முன்னேறும் கர்நாடகா, ஆந்திரா.. இனி தமிழ்நாடு வேடிக்கை பார்க்கணும்! விஜய் போட்ட பிரேக் -
ரேஷன் கார்டுதாரர்களுக்கு ஹேப்பி நியூஸ்.. ஜூன் 2, 3ல் வீடு தேடி வரும் சர்ப்ரைஸ்.. கலெக்டர் அதிரடி -
பசிக்கு இரண்டு சமோசா.. கல்வி கடன்.. ஐஐடி-யில் தோற்றவர் துபாயில் சரித்திரம் படைத்த இந்திய இளைஞன் -
சிவகுமார் போட்ட மாஸ்டர் ஸ்கெட்ச்.. ராகுலுக்கு நேரமில்லை? டெல்லியில் மிஸ்டர் விஜய்னு கூப்பிட்டது யாரு -
GH-ல் கடைநிலை ஊழியர்கள் மீது நடவடிக்கை எடுத்த ரமேஷுக்கு அர்ச்சகர்கள் மீது ஆக்ஷன் எடுக்க தாமதம் ஏன்? -
கோயம்புத்தூர்-க்கு ஓடிவரும் ராகுல் ப்ரீத் சிங்.. ரேஸ் கோர்ஸ் சாலையில் புது ஆரம்பம்! -
பூந்தமல்லி டூ வடபழனி இனி 20 நிமிடங்களில்.. ஆளில்லா மெட்ரோ ரயில் சேவைக்கு கிடைத்த பச்சை சிக்னல் -
மாடுகளை பலியிட தடை.. நீதிபதி ஜி.ஆர்.சுவாமிநாதன் உத்தரவு! விஜய்க்கு சிபிஎம் வைத்த முக்கிய கோரிக்கை! -
ஆரம்பமே அடி சறுக்கல்.. சிங்கப்பெண் அதிரடிப்படை திட்டத்தின் தொடக்க விழா ரத்து!












Click it and Unblock the Notifications